Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் தனயன்- அரசியல் கைதி சிவகுமார்!!

Featured Replies

கிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் தனயன்- அரசியல் கைதி சிவகுமார்!!

IMG_3825-750x430.jpg
 
 
 
 

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின்  இறுதிச்  சடங்கில் இன்று கலந்துகொண்டார்.

கடந்த 18- ஆம் திகதி இயற்கை எய்திய   தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணி நேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற சடங்கில் கலந்து கொள்வதற்காக,  அரசியல் கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரப்பட்டார்.

 

3 பிள்ளைகளின் தந்தையான இவர் 13 வருடங்களாக சந்தேக நபராக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

கொழும்பு கரந்தெனியா பகுதியில் வாகனத்துடன் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்ட இவர் பொரள்ள பகுதியில் அமைந்துள்ள நியூ மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக பலப்பிட்டி உயர்நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாக அவரது மனைவி தெரிவிக்கின்றார்.

13 வருடங்களாக கணவன், தந்தையை பிரிந்திருந்த ஆதங்கத்தில் மனைவியும், பிள்ளைகளும் சிவகுமாரை தழுவி கண்ணீர் விட்டழும் காட்சிகள் கிளிநொச்சி மண்ணை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியது.

சிவகுமார் சிறைச்சாலை பேருந்தில் ஏறும் காட்சியை கண்ட பிள்ளைகள் கதறி அழுதனர். சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சிவகுமரின் கண்களிலிருந்து நீர் வழிய அவர் பேருந்திலிருந்து கையசைத்த போது அவரது பிள்ளைகளும், உறவினர்களும் வேதனையில் துடித்த காட்சிகள் துக்கத்தை அதிகரித்தது.

 

http://newuthayan.com/story/13/கிளிநொச்சியில்-மீண்டும்-சோகம்-தந்தையில்-இறுதிச்-சடங்கில்-ஒரு-மணி-நேரம்-தனயன்-அரசியல்-கைதி-சிவகுமார்.html

IMG_3822-300x225.jpg

IMG_3820-300x225.jpg

IMG_3814-300x225.jpg

IMG_3812-300x225.jpg

IMG_3793-300x225.jpg

IMG_3792-300x225.jpg

IMG_3787-300x225.jpg

IMG_3829-300x225.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13 வருடங்களின் பின்னர் தந்தையின் மரண சடங்கிற்காக 1 மணி நேரம் வெளியில் வந்த அரசியல் கைதி (படங்கள்))

IMG_3825-800x600.jpg

 

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் மரண சடங்கில் இன்று அவரது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார். கடந்த 18-07-2018 அன்று இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் என்ற சிவகுமாரின் தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணிநேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொள்வதற்காக அரசியல்கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரப்பட்டார். 3 பிள்ளைகளின் தந்தையான இவர் 13 வருடங்களாக சந்தேக நபராக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

2006ம் ஆண்டு 8ம்மாதம் 10ம் திகதி கொழும்பு கரந்தெனியா பகுதியில் வாகனத்துடன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இவர் பொரள்ள பகுதியில் அமைந்துள்ள நியூ மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதியாக உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக பலப்பிட்டி உயர்நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாக அவரது மனைவி சுமதி தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில் சிவகுமாரிற்கு வழங்கப்பட்ட ஒருமணிநேர காலம் நிறைவடைந்ததும் அவரை சிறைச்சாலை அதிகாரிகளை அழைத்து சென்றபோது உறவினர்கள் அவரை தழுவினர். 13 வருடங்களாக கணவன், தந்தையை பிரிந்திருந்த ஆதங்கத்தில் மனைவியும், பிள்ளைகளும் சிவகுமாரை தழுவி கண்ணீர் விட்டழும் காட்சிகள் கிளிநொச்சி மண்ணை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியது. சிவகுமார் சிறைச்சாலை பேருந்தில் ஏறும் காட்சியை கண்ட பிள்ளைகள் கதறி அழுதனர். சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சிவகுமரின் கண்களிலிருந்து நீர் வழிய அவர் பேருந்திலிருந்து கையசைத்தபோது அவரது பிள்ளைகளும், உறவினர்களும் வேதனையில் துடித்த காட்சிகள் துக்கத்தை அதிகரித்தது.

IMG_3758-800x600.jpg

IMG_3804-800x600.jpgIMG_3763-800x600.jpgIMG_3779-800x600.jpgIMG_3787-800x600.jpgIMG_3791-800x600.jpgIMG_3814-800x600.jpg

http://globaltamilnews.net/2018/88544/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.