Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்))

Featured Replies

அரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்))

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

37585404_2210398448976338_88901363992153

 

வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க கட்சி, இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் புத்திசாதுரியமாக அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் நகரில் நவீன கடைத்தொகுதிகளுடன் கூடிய பஸ் தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (20) மாலை இடம் பெற்ற போது அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,

30 வருட அழிவையடுத்து 2009ம் ஆண்டு இந்தப் பிரதேசங்களில் அமைதி நிலை ஏற்பட்ட பின்னர் மன்னார் மாவட்டத்தை அழகுபடுத்த அப்போது நாம் எடுத்த முயற்சி சில காரணங்களினால் கைகூடாமல் போய்விட்டது. எனினும் பின்னைய காலங்களில் மாவட்ட அபிவிருத்தி சபையின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் எடுக்கப்பட்ட முடிவுக்கிணங்க, எனது அமைச்சான கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் அமைச்சரவைக்கு வன்னி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தேன்.

இதனையடுத்து அந்த அமைச்சுக்கு வன்னி மாவட்ட அபிவிருத்திக்கென வரவு செலவுத் திட்டத்தில் 2500 மில்லியன் ஓதுக்கப்பட்டு தற்போது பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னார் நகர நிர்மாணப்பணிகளுக்கெனவும் அமைச்சர் சம்பிக்கவின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சும் கைத்தொழில் வர்த்தக அமைச்சும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு தற்போது மன்னாரில் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

இந்த சந்தர்;ப்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு மன்னார் மக்களின் சார்பில் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

இந்த அபிவிருத்திப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு வருகை தந்துள்ள அமைச்சர்களான மங்கள, மற்றும் சம்பிக்க ஆகியோரிடம் மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல் தேவைகளையும் பொருளாதார நிலைமைகளையும் நான் இன்று எடுத்துரைத்தேன்.

மீனவ சமுதாயத்தினதும் விவசாயிகளினதும் தொழிலை மேம்படுத்துவதற்காக பல்வேறு உதவிகளை மேற்கொண்டு தருவதற்கு அவர்கள் தற்போது உறுதியளித்தனர்.

மன்னார் நகர நிர்மாணப் பணிகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவடையும் வகையில்; நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன் இந்த நகரத்தில் அழகான சுற்றுவட்ட சந்தையொன்றை நிர்மாணிப்பதற்கும் பூரண ஒத்துழைப்பை தருவதாக அவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர்.

அத்துடன் நகர அபிவிருத்தி அதிகார சபையானது 83 மில்லியன் ரூபா செலவில் மன்னார் நகரத்தில் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இதைவிட நானாட்டான் நகரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கi அமைச்சர் மங்கள சமரீரவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன். எதிர்வரும் காலங்களில் எஞ்சியிருக்கும் ஏனைய 3 பிரதேச சபைகளில் உள்ள நகரங்களை புனரமைக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

37379213_2210399108976272_6976178940666737397451_2210397932309723_7794670896920137551933_2210396822309834_78949745624235

http://globaltamilnews.net/2018/88591/

  • தொடங்கியவர்

டுபா­யை­வி­டப் பலம் மிக்­க­தாக- மன்­னாரை மாற்­றி­விட முடி­யும் – அமைச்­சர் சம்­பிக்க !!

 

DSC_0115-750x430.jpg

 
 
 
 

மன்­னார் கடல் படுக்­கை­யில் எரி­வாயு, மற்­றும் எரி­பொ­ருள் இருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­தோடு, இந்த நாட்­டுக்கே கொடுக்­கக்­கூ­டிய மின்­சா­ரத்­தைப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய மின் காற்­றா­லை­களை அமைப்­ப­தற்கு மிக­வும் பொறுத்­த­மான இட­மா­க­வும் மன்­னார் மாவட்­டம் உள்­ளது.

இந்த இரு வளங்­க­ளை­யும் நாங்­கள் முகா­மைத்­து­வம் செய்­வோ­மா­னால் நாம் இந்த மன்­னார் மாவட்­டத்தை டுபாயை விட, ஐக்­கிய இராச்­சி­யத்­தை­வி­டப் பலம் பொருந்­திய மாவட்­ட­மாக மாற்ற முடி­யும்.

இவ்­வாறு மேல் மாகாண மற்­றும் மாந­கர அபி­வி­ருத்தி அமைச்­சர் பாட்­டாலீ சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­தார். 180 மில்­லி­யன் ரூபா செல­வில் மன்­னா­ரில் அமைக்­கப்­ப­ட­வுள்ள பேருந்து நிலைத்­துக்­கான அடிக்­கல் நடும் நிகழ்வு நேற்று மாலை மன்­னார் நக­ரப் பகு­தி­யில் நடை­பெற்­றது.

 

இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அமைச்­சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது;

இன்று மன்­னார் பின் தங்­கிய பிர­தே­சம். ஒரு காலத்­தில் இது இலங்கை வர­லாற்­றிலே ஒரு வர்த்­தக நிலை­ய­மாக இருந்­ததை நான் இங்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்­றேன்.

இந்­தி­யா­வி­லுள்ள கேரள மாநி­லத்­தி­லுள்ள கொச்­சின் துறை­மு­க­மும் மன்­னார் மாதோட்ட துறை­மு­கம் வர்த்த ரீதி­யில் ஒன்­றா­கச் சந்­திக்­கும் நிலை காணப்­பட்­டது.

லெனாட் முல்­வந் என்­ப­வர் ஒவ்­வொரு நாடு­க­ளுக்­கும் பய­ணம் செய்து அந்த நாடு­க­ளி­லுள்ள சிறப்­பு­களை ஆராய்ந்­த­போது பிரித்­தா­னிய ஆட்­சிக் காலத்­திலே சுமார் நான்­கா­யி­ரம் பேர் மன்­னா­ருக்கு வந்து முத்­துக் குளித்­த­னர் எனப் பதிவு செய்­துள்­ளார்.

இலங்­கை­யி­லி­ருந்து வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்ற இந்த முத்­துக்­கள் வெளி­நா­டு­க­ளி­லுள்ள அரச சபை­க­ளிலே இன்­றும் ஓர் அலங்­கா­ரப் பொருள்­க­ளாக வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தைப் பார்க்­கின்­ற­போது அது எமக்கு மகிழ்ச்­சி­யாக இருக்­கின்­றது – என்­றார்.

மேல் மாகாண மற்­றும் மாந­கர அபி­வி­ருத்தி அமைச்­சின் ஆலோ­ச­னைக்­கி­ணங்க வடக்கு மாகாண பொதுப் போக்­கு­வ­ரத்து வச­தியை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட ‘சுகித புர­வர’ செயற்­திட்­டத்­துக்­கி­ணங்க கைத்­தொ­ழில் மற்­றும் வணிக அலு­வல்­கள் அமைச்­சின் ஒத்­து­ழைப்­பு­டன் இந்த பேருந்து நிலை­யம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

நேற்று இடம்­பெற்ற நிகழ்­வில் நிதி மற்­றும் ஊடக அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, நிதி அமைச்­சின் ராஜாங்க அமைச்­சர் ரான் விக்­கி­ர­ம­ரட்ண, கைத்­தொ­ழில் மற்­றும் வணிக அலு­வல்­கள் அமைச்­சர் றிசாத் பதி­யு­தீன், மீள்­கு­டி­யேற்­றம் புனர்­வாழ்­வ­ளிப்பு மற்­றும் வடக்கு அபி­வி­ருத்தி பிரதி அமைச்­சர் கே.காதர் மஸ்­தான், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இ.சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், மற்­றம் மாவட்­டத்­தைச் சேர்ந்த அரச அதி­கா­ரி­கள், மக்­கள் எனப் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

b2b64ef6-8f6c-4807-8b5f-67080607c348-300a0346563-48d3-4c40-8bc8-44d295b65167-3001706aa06-e1b2-4197-af48-2fc896a7b6a8-300f65d922d-fd33-4eb7-b8bc-f5dbe25a70a7-300

http://newuthayan.com/story/09/டுபா­யை­வி­டப்-பலம்-மிக்­க­தாக-மன்­னாரை-மாற்­றி­விட-முடி­யும்-அமைச்­சர்-சம்­பிக்க.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.