Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு வந்தார் ரணில்- கிளிநொச்சியில் தானியக் களஞ்சியத்தைத் திறந்தார் !!

Featured Replies

யாழ்ப்பாணம் வருகை தரும் ரணில்- 9 நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­பார்

 

Ranil-wickramasinghe-740x430.jpg

 
 

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இன்று வடக்­குக்கு வரு­கின்­றார். யாழ்ப்­பா­ணம் மற்­றும் கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளில் நடக்­கும் 9 நிகழ்­வு­க­ளில் அவர் பங்­கேற்க உள்­ளார்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் பி.ப. 1.30 மணிக்கு இர­ணை­ம­டு­வில் அமைக்­கப்­பட்­டுள்ள நெற்­க­ளஞ்­சி­ய­சா­லையை அவர் திறந்து வைப்­பார், கிராம எழுச்­சித் திட்­ட­மும் ஆரம்­பித்து வைக்­கப்­ப­டும்.

மாலை­யில் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மைதா­னத்­தில் நடக்­கும் நோயா­ளர் காவு வண்­டிச் சேவை­யின் தொடக்க நிகழ்­வில் பங்­கேற்­பார். பி.ப. 4.35 மணிக்கு தலைமை அமைச்­சர் உரை­யாற்­று­வார்.

 

தொடர்ந்து இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி­யின் உரை காணொலி ஊடாக ஒலி­ப­ரப்­பப்­ப­டும். பி.ப. 4.50 மணிக்கு, ‘சுர­ச­விய’ நோயா­ளர் காவு­வண்­டிச் சேவை தொடக்கி வைக்­கப்­ப­டும்.

மாலை 6 மணிக்கு, வடக்கு மாகாண தேசிய தொழிற்­துறை முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு விருது வழங்­கும் நிகழ்வு ‘ரில்கோ’ விருந்­தி­னர் விடு­தி­யில் நடை­பெ­றும்.

நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 9 மணிக்கு, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி ஊடாக வாழ்­வா­தார உதவி வழங்­கும் நிகழ்வு நடை­பெ­றும். கைத்­தொ­ழில் அபி­வி­ருத்­திச் சபை இந்த நிகழ்வை ஒழுங்­க­மைத்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மைதா­னத்­தில் நடை­பெ­றும் இந்த நிகழ்­வில் காலை 9 மணி­யி­லி­ருந்து 9.30 மணி வரை­யில் தலைமை அமைச்­சர் பங்­கெ­டுப்­பார்.

காலை 9.30 மணிக்கு ஸ்ரான்லி வீதி­யி­லுள்ள இலங்கை வங்கி வளா­கத்­தில், ‘என்­ர­பி­ரைஸ் சிறி­லங்கா’ திட்­டத்­தின் ஊடா­கக் கடன் வழங்­கல் ஆரம்­பித்து வைக்­கப்­ப­டும்.

காலை 10 மணிக்கு, தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளுக்கு யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் வைத்து தலைமை அமைச்­ச­ரால் நிய­ம­னம் வழங்­கப்­ப­டும்.

காலை 11 மணிக்கு நுண்­க­டன் திட்­டங்­க­ளைப் பெற்று அவற்றை மீளச் செலுத்த முடி­யாத பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளுக்கு உதவி வழங்­கும் நிகழ்வு யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நடை­பெ­றும்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதனை ஆரம்­பித்து வைப்­பார். மதி­யம் 12 மணிக்கு, வல்­வெட்­டித்­து­றை­யில் அமைக்­கப்­பட்டு வரும் ஆழிக்­கு­ம­ரன் ஞாப­கார்த்த நீச்­சல் தடா­கப் பணி­களை தலைமை அமைச்­சர் பார்­வை­யி­டு­வார். அன்று மாலையே அவர் கொழும்பு திரும்­பு­வார்.

http://newuthayan.com/story/09/யாழ்ப்பாணம்-வருகை-தரும்-ரணில்-9-நிகழ்­வு­க­ளில்-பங்­கேற்­பார்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வடக்கு வந்தார் ரணில்- கிளிநொச்சியில் தானியக் களஞ்சியத்தைத் திறந்தார் !!

IMG_2355-750x430.jpg
 
 

நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவால்  இன்று உத்தியோக பூர்வமான திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட விவசாயிகளின் முன்னேற்றம் கருத்தி அமைக்கப்பட்ட இந்தக் களஞ்சியசாலையில் நெல்லை களஞ்சியப்படுத்திய விவசாயிகள் மூவருக்கும் அதற்கான சிட்டையையும் தலைமை அமைச்சர் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன,நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்டச் செயலர், பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 
 

IMG_2404-300x200.jpgIMG_2398-300x200.jpgIMG_2396-300x200.jpgIMG_2382-300x200.jpgIMG_2371-300x200.jpgIMG_2345-300x200.jpgIMG_2339-300x200.jpgIMG_2334-300x200.jpgIMG_2427-300x200.jpg

 

http://newuthayan.com/story/15/வடக்கு-வந்தார்-ரணில்-கிளிநொச்சியில்-தானியக்-களஞ்சியத்தைத்-திறந்தார்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ரணில் விக்கிரமசிங்கவின் வடபகுதி விஜயத்தின் போது இரண்டு முக்கிய சேவைகள் ஆரம்பிப்பு!

 

 

 
Image

கிளிநொச்சியில் தானியக் களஞ்சியத்தை திறந்து வைத்தார் பிரதமர்.

நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை இன்றையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட விவசாயிகளின் முன்னேற்றம் கருதி அமைக்கப்பட்ட இக் களஞ்சியசாலையில் நெல்லை களஞ்சியப்படுத்திய விவசாயிகள் மூவருக்கும் பிரதமர் அதற்கான சிட்டையையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்ட அரச அதிபர் பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

அத்துடன் இந்திய அரசின் நிதி உதவியுடன் வடக்கு மாகாணத்திற்கு அம்புலன் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அம்புலன் வண்டிகளில் 1990 என்ற அவசர சேவைகளும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வும் அவசர அம்புலன்ஸ் சேவைகளும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ் மாநகர மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இந் நிகழ்வுகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அவசர அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கி வைத்து சேவைகளையும் ஆரம்பித்து வைத்தார்.இந் நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர், வடக்கு மாகாண முதலமைச்சர், மத்திய மாகாண அமைச்சர்கள் பாராளுமன்ற , மாகாண சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/103600

 

 

”சுவசரிய” இலவச அம்பியூலன் சேவை வடக்கில் ஆரம்பித்து வைப்பு!

 

”சுவசரிய” இலவச அம்பியூலன் சேவை வடக்கில் ஆரம்பித்து வைப்பு!

”சுவசரிய” (சுகப்படுத்தும் சேவை) என்ற இந்திய உதவியின் கீழான அம்பியூலன்ஸ் வாகன சேவையின் இரண்டாம் கட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வைபவத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி செய்மதி தொழிநுட்பத்தினூடாக ஊடாக இந்தியாவில் இருந்து நேரடியாக இந்த வைபவத்தில் உரையாற்றினார்.
சுவசரிய அம்புலன்ஸ் சேவையின் இரண்டாம் கட்டத்திற்காக இந்திய அரசாங்கம் 180 கோடீ ரூபாவை வழங்கியுள்ளது. இதன் கீழ் புதிதாக 200 அம்புலன்ஸ் வண்டிகள் இந்த சேவையில் பயன்படுத்தப்படவுள்ளன.
1990 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து இந்த இலவச அம்பியூலன்ஸ் சேவையை வடக்கு மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். -(3)

http://www.samakalam.com/செய்திகள்/சுவசரிய-இலவச-அம்பியூலன்/

  • தொடங்கியவர்

வடக்கு யுத்தத்தால் அழிவடைந்து விட்டது : ரணில்

 

 
 

"நாட்டின் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் அபிவிருத்திகள்  மிகவும் குறைவு" என பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட  கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை இன்றையதினம்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

ranil_at_kilinochchi.jpg

"வடக்கு மாகாணத்தில் நாம் இன்று ஒரு சிறந்த ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருகின்றோம். வடக்கு யுத்தத்தால் அழிவடைந்து விட்டது.  மக்கள் மரணித்தார்கள், குடும்பங்கள் சீர்குலைந்தன, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தன. இப்போது யுத்தம் நிறைவு பெற்றிருக்கிறது, சமாதானம் இருக்கிறது. அப்படி இருந்தாலும் இங்கு இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதில் ஒன்றுதான் பொருளாதாரம், சமாதானம் ஏற்பட்டிருந்தாலும் அபிவிருத்தி குறைவாகவே உள்ளன.

நாட்டின் ஏனைய இடங்களை விட வடக்கில் அபிவிருத்திகள் மிகவும் குறைவு கடந்த முறை இங்கு வருகைதந்ததன் நோக்கம் இந்தப் பிரச்சினைகளுக்கு   ஒரு அவதானத்தை   செலுத்துவதற்காக அத்தோடு பெண்களின் பிரச்சினைகள், கைதிகளின் பிரச்சினைகள் என்பனவும் உண்டு அதைப் பற்றி பின்னர் பேசுகிறேன்.

மேலும் இங்கே விவசாயிகளுக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு. அவர்கள் அதிக கடன்களை பெற்றிருக்கின்றார்கள். எனவே இந்த களஞ்சியசாலை  மூலம்  விவசாயிகளிடத்தில்  ஒரு மாற்றம் ஏற்படவிருக்கிறது. நல்ல நிலை கிடைக்கும் வரைக்கும் களஞ்சியப்படுத்தி வைத்திருக்க முடியும்.  களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் காலத்தில் இதனை வைத்து கடன்களை பெற்றுக்கொள்ள முடியும்

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மூலம் இந்த பிரதேசங்களில் அபிவிருத்திகள்  மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் மூலம் இந்தப் பிரதேசங்களின் ஓப்பந்தகாரர்களுக்கும் வேலைகள் கிடைக்கவுள்ளன. கொழும்பில் இருக்கின்ற பெரிய  முதலாளிகளுக்கு அல்ல. எனவே இப்படியான வேலைத்திட்டத்தின் மூலம் பிரதேச மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில்  பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும் இந்த செயற்றிட்டத்தின் மூலம் இந்த பிரதேசங்களில் உள்ள குளங்களையும் புனரமைக்கவுள்ளோம் இதன் மூலம் விவசாய நடவடிக்கைகள் மேம்பட்டு விவசாயிகள் நன்மையடைவார்கள்.

என்ரபிரைஸ் சிறிலங்கா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அதிக நிதிகள் கிடைக்கப்பெற்று அவர்கள் மேலும் நன்மையடைவார்கள். ஒரு இலட்சமாக இருந்தாலும் சரி ஜந்து இலட்சமாக இருந்தாலும் சரி விவசாயிகளுக்கு குறைந்த வட்டி வீதத்தில் அல்லது வட்டி இல்லாமல்  கடன்களை பெற்றுக்கொடுக்க முடியும். விவசாயிகளுக்கு கடன்களை வழங்கிய பின் அவர்களிடம் இருந்து அந்த கடனை மீள பெறுவது கடிமானது எனவே  அதற்கான ஒரு சிறந்த வழியை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம் இப்படியான நீண்ட  கால வேலைத்திட்டம் இருக்கிறது.

மேலும் சிறந்த  போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில்  பூநகரி மன்னார் வவுனியா ஊடான பெருந்தெரு மற்றும் திருகோணமலைக்கான பாதை உட்பட பல பாதைகளை அமைக்கவுள்ளோம். அதேபோன்று இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமானநிலையம் காங்கேசன் துறை உட்பட துறைகள் என்பவற்றையும் அபிவிருத்திசெய்யவுள்ளோம் இதன் மூலம் நீண்டகால திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம் இவை அனைத்தும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே.

இலங்கை மக்கள் என்ற வகையில் சந்தோச,ம் துக்கம் இரண்டையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் உங்களின் துக்கத்ததை நாமும் பகிர்ந்துகொள்கின்றோம்.  அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை கிடைக்கட்டும்." என தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/37034

  • தொடங்கியவர்

வட மாகாணத்தில் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பித்து வைப்பு

வட மாகாணத்தில் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பித்து வைப்பு

 

 
 
இந்திய அரசின் நிதி உதவியுடன் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்றுமாலை இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தி அம்புலன்ஸ்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் வடமாகாணம் மற்றும் ஊவா மாகாணத்தில் மேற்படி அம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும்பொருட்டு 55 நோயாளர் காவு வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கென இந்திய மக்களால் இருபத்தாறு மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்புலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு தலா 3 அம்புலன்ஸ் வண்டிகள் வீதமும் வடமாகாணத்திற்கு 21 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டு இந்த அவசர சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்துடன் ஊவா மாகாணத்திற்கு 34 வண்டிகளும் இந்த சேவையின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றையதினம் இந்த சேவையின் கீழ் பணியாற்றும் சாரதிகள் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர்கள் ஆகியோருக்கான நியமனப்பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங், வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(யாழ் நிருபர் சுமித்தி/பிரதீபன்)

http://tamil.adaderana.lk/news.php?nid=104375

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.