Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி.ஏ.ராஜபக் ஷ ஞாபகார்த்த கோபுரம், நூதனசாலை நிர்மாண விவகாரம்: கோத்தபாய உட்பட ஏழு பேரை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Featured Replies

டி.ஏ.ராஜபக் ஷ ஞாபகார்த்த கோபுரம், நூதனசாலை நிர்மாண விவகாரம்: கோத்தபாய உட்பட ஏழு பேரை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

7-6128988743104bff0c12aa0047a14c5514d7ca84.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 4.8 கோடி ரூபா (48,563929.06 ரூபா) பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட 7 பேரை நேற்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேக நபர்களாக நீதிமன்றில் பெயரிட்டது.

 

தனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவுக்கு  ஞாபகார்த்த கோபுரம், நூதனசாலை ஆகியவற்றை நிர்மாணிக்கும் போது  இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைக்கேடு தொடர்பிலான விசாரணைகளிலேயே, சட்ட மா அதிபர் கடந்த ஜூன் 19 ஆம் திகதி வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக  கோத்தபாய ராஜபக்ஷவும் மேலும் ஆறு பேரும் இவ்வாறு சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அதன்படி கோத்தபய ராஜபக்ஷ, காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி  கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்  பிரசாத் ஹர்ஷான் டி சில்வா உள்ளிட்ட ஏழு பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு  கொழும்பு மேலதிக நீதிவான்  காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின்  விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்ணான்டோவின் கோரிக்கையை ஏற்று  உத்தரவு பிறப்பித்தார். 
 

 நந்தசேன கோத்தபாய ராஜபக்ஷ, லியன ஆராச்சிகே பிரசாத் ஹர்ஷான் டி சில்வா,  கம எத்தி ராலலாகே சந்ரா உதுலாவத்தி கமலதாஸ,  சுதம்மிக கேமிந்த ஆட்டிகல, சமன்குமார அப்ரஹாம் கலப்பத்தி,  மாறுக்கு தேவகே மஹிந்த சாலிய, மதம்பெரும ஆராச்சிலாகே ஸ்ரீமத்தி மல்லிகா குமாரி சேனாதீர ஆகிய ஏழுபேருமே இவ்வாறு இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டு,எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டவர்களாவர்.

 

 இவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 120 (3) ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வாவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், நம்பிக்கை மோசடி தொடர்பாக தண்டனை சட்டக் கோவையில் 113 (ஆ), 102 மற்றும் 388 ஆம் அத்தியாயங்களுடன் இணைத்து கூறப்படும் 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துக்கள் தொடர்பில் புரியப்படும் குற்றங்கள் தொடர்பிலான சட்டத்தின் 5 (1) ஆம் அத்தியாயம் ஆகியவற்றின் கீழ் குற்றம் புரியப்ப்ட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 டி.ஏ. ராஜபக்ஷ  ஞாபகார்த்த கோபுரம், நூதனசாலை நிர்மாணிப்பு தொடர்பிலான இந்த விவகாரம் குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே மேற்படி விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலான சிறப்பு மேலதிக விசாரணை அறிக்கையும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்ணான்டோவினால் தாக்கல் செய்யப்பட்டது.

   பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ பெர்ணான்டோ நேற்று தாக்கல் செய்த அறிக்கையில்,

இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனமானது 1968ஆம் ஆண்டில் 15ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் அரச நிறுவமனமாக கருதப்படுவதுடன் 2010 . 04. 30 அன்று வெளியிடப்பட்ட 165/ 20 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தேசிய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் வரும் நிறுவனமாகும். இக்குற்றம் இடம்பெற்றதாக கருதப்படும் காலப்பகுதியில் குறித்த  கூட்டு தாபனத்தன் தலைவராக பிரசாத் ஹர்ஷான்டி சில்வா  கடமையாற்றியுள்ளார். கோத்தபாய ராஜபக்ஷ அக்காலத்தில் தேசிய பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.  எனவே அவ்வமைச்சின் நிதி தொடர்பிலான  பொறுப்பு கூற வேண்டிய பிரதான அதிகாரி அவரேயாவார். 

விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் பிரகாரம் கடந்த 2013ஆம் ஆண்டு அரை ஆண்டு காலப்பகுதியில்  பிரசாத் ஹர்ஷான் டி சில்வாவை அழைத்துள்ள கோத்தபாய ராஜபக்ஷ தனது பெற்றோரை நினைவு கூரும் விதமாக வீர கெட்டிய மெதமுலன பிரதேசத்தில் டி.ஏ ராஜபக்ஷ நூதன சாலை மற்றும் கோபுரம் ஆகியவற்றை நிர்மாணிக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.   நிர்மாண பணிகளுக்காக  தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சமல் ராஜபக்ஷ என்பவருக்கு சொந்தமானது என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டது.

அதன்படி ஹர்ஷான் டி சில்வா  தமது கூட்டுதாபனத்தில் கட்டிட வடிவமைப்பாளரான அத்தப்பத்து முதியன் சலாகே பண்டார அத்தப்பத்து என்பவருடன் மேலும் சில அதிகாரிகளையும் இணைத்துக் கொண்டு மெதமுலன பகுதிக்கு சென்று கட்டிட நிர்மாண வரைப்படத்தை தயார் செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.  அதன்படி சுரேஷ் பண்டார அத்தப்பத்து என்பவர் கட்டிட வரைப்படத்தையும் வர்ணகுல சூரிய தொன் என்டனி லீனஸ் எல்ரோய் பெர்ணான்டோ என்பவர்  பி.ஓ. கியூ. அறிக்கையையும் தயார் செய்துள்ளனர். 

இந்நிலையில் 2013. 09.03 அன்று கூட்டுதாபனத்தின் தலைவர்  நிர்மாணப்பணிகளுக்கு மனித வளத்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக  கடற்படை தளபதிக்கு  கடிதமொன்றினை அனுப்பியுள்ளார். அதன்படி இலங்கை கடற்படையினரால் 2013.09.03 அன்று திகதியிடப்பட்ட திட்டத்தை ஆரம்பிக்கும்  கட்டணமாக 10 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது. 

இவ்வாறான பின்னணியில் குறித்த கூட்டுதாபனத்தில் 537ஆவது பணிப்பாளர் சபை கூட்டம் 2014. 02. 26 அன்று இடம்பெற்றுள்ளது. அதில் பொது முகாமையாளர் ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர என்பவரும் தலைவர் பிரசாத் ஹர்ஷான் டிசில்வா என்பவரதும் பரிந்துரைக்கமைய 33,944,741.60 ரூபாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த பணத்தை பல்வேறு வழிகளில் அறவிடவும் எச்.டி.எஸ். 3714 எனும் பணிப்பாளர் சபை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டள்ளது. 

 

எச்.டி.எஸ். 3714 எனும் பணிப்பாளர் சபை பத்திரமூடாக எடுக்கப்பட்டிருந்த தீர்மானங்கள் சுருக்க  அறிக்கை ஊடாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பபப்பட்டுள்ளதுடன் அந்த அறிக்கையில்  அவர் கையெழுத்திட்டுள்ளார். அத்துடன் நிர்மாண பணிகளுக்கு கடற்படையின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டமையானது கோத்தாபாய ராஜபக்ஷவின் வாய்மொழி மூல ஆலோசனை, ஹர்ஷான் டி சில்வாவின் கோரிக்கை கடிதத்திற்கு அமைவாகவும் சாத்தியமாகியுள்ளமை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டது. 

 

மேலும் இந்த நிர்மாண திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்படவில்லை. அத்துடன் இத்திட்டம் தொடர்பில் பண செலுத்தல்கள் முன்னெடுக்கப்படும்போது நிதி சட்டதிட்டங்கள் மீறப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த டி.ஏ ராஜபக்ஷ  நூதன சாலையின் பெறுமதியை உறுதி செய்யும் விதமாக மதிப்பீட்டு திணைக்களத்தின் தென் மாகாண மதிப்பீட்டு அலுவலகம் ஊடாக அறிக்கை பெறப்பட்டது. 2017 .07.03 அன்று கிடைக்கப்பெற்ற மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் அந்த நூதன சாலையின் பெறுமதி 33,759,000 ரூபாவாகும். காணி மீட்டல், அபிவிருத்தி கூட்டுதாபனம் ஊடாக டி.ஏ ராஜபக்ஷ நூதனசாலையை அமைக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட செலவு 33,944,741.60 ரூபா ஆகும். எனினும் அதனை தாண்டி குறித்த கூட்டுதாபனமானது அந்த நூதனசாலை பணிகளை முடிக்க வெட் வரியுடன் சேர்த்து 81,313,374.14 ரூபாவை செலவிட்டுள்ளது. நிர்மாணத்திற்கு தேவையான கட்டிட பொருட்களும் உரிய விதிமுறைகளை மீறிய நிலையில் பெறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித் நூதனசாலை அமைப்பதற்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் 2013,2014,2015 ஆகிய ஆண்டுகளுக்குரிய  காணி மீட்டல் ,அபிவிருத்தி கூட்டுதாபனத்தின் வருடாந்த நிதி அறிக்கையில் பதிவுகள் உள்ளதா என விசாரிக்கப்பட்டது. அதில் குறித்த ஆண்டுகளுக்கான நிதி அறிக்கைகளில் எவ்வித பதிவுகளும் இருக்கவில்லை. எனினும் அதற்கான செலவினை ராஜபக்ஷ மன்றத்திடமிருந்து  மீள பெற்றுக் கொள்ளவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. 

எனினும் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் வரை குறித்த செலவிடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள காணி மீட்டல், அபிவிருத்தி கூட்டுத்தாபனம் எந்த நடவடிக்கையையும் முன்னெடுத்திருக்க வில்லை. விசாரணை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 2015. 08.4 ஆம் திகதி  கூட்டுதாபனத்தின் பொது முகாமையாளர் ஸ்ரீமதி மல்லிகா சேனாதீர கோரிக்கைக்கு அமைவாக 2015.08.31 அன்று செலுத்த வேண்டிய பணத்தில் 25,000,000 ரூபாவும் பின்னர் 2017.07.13 அன்று 8,944,741.60 ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2015.10.07 அன்று சி.ஆர்.5/32/15    எனும் இலக்கத்தின் கீழ் சட்டமா அதிபரிடம் விசாரணை கோவைகள் கையளிக்கப்பட்டு ஆலோசனை கூறப்பட்டது. அதன்படி  2017 .11.20 அன்று சட்டமா அதிபர்  ஆலோசணை  வழங்கி இருந்ததுடன் நந்தசேன கோத்தாபாய ராஜபக்ஷ, லியன ஆராச்சிகே பிரசாத் ஹர்ஷான்டி சில்வா, கமஎதிராலலாகே சந்திரா உதுலாவதி கமலதாஸ, சுதம்மிக்க கேமிந்த ஆட்டிகல, சமன்குமார அப்ரஹாம் கலப்பதி, மாறுக்கு தேகே மஹிந்த சாலிய, மதம்பெரும ஆரச்சிலாகே ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர ஆகியோருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டடியதை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை எக்குமாறு சுட்டிக்காட்டப்பட்டது. அதில் காணி மீட்டல், அபிவிருத்தி ஆணைக்குழுவுக்கு சொந்தமான 48,563,929.06 ரூபா தொடர்பில் நம்பிக்கை துரோகம் குற்றம் புரியப்பட்டுள்ளதாகவும்  தண்டனை சட்டகோவையில் 113 (ஆ), 102 மற்றும் 388ஆம்; அத்தியாயங்களுடன் கூறப்படும் பொது சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 5(1) அத்தியாயத்தின் கீழ் குற்றங்கள் புரியப்பட்டுள்ளதாக வெளிப்படுவதாகவும் அதனால் 1079ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார். 

அந்த ஆலோசனை பிரகாரம் செயற்படும்போது கோத்தாபாய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்தார்.  அதனூடாக சட்டமா அதிபரின் ஆலோசனை பிரகாரம் செயற்பட்டு அவரை கைது செய்வதை தடுக்குமாறும் 2015.09.23 அன்று மன்றுக்கு தாக்கல் செய்யப்பட்ட பொதுச் சொத்து தொடர்பான சான்றிதழ் பிரகாரம் செயற்படுவதை தடுக்குமாறும்  அவர் அம்மனுவில் கோரியிருந்தார். 

அதன்படி 2018.04.5 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கோத்தாபாயவை கைது செய்ய இடைக்கால தடையுத்தரவு விதித்த நிலையில் அவ்வுத்தரவுக்கு அமைவாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் கடந்த 2018.06.16ஆம் திகதி மற்றொரு உத்தரவை அம்மன்று அறிவித்தது. 

இந்நிலையில் குறித்த உத்தரவு தொடர்பில் கடந்த 2018.06.19 அன்று சட்டமா அதிபர் கடிதம் ஊடாக இந்த விவகாரத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி 2017.11.20 அன்று சட்டமா அதிபர் வழங்கிய முதல் ஆலோசனையின் பிரகாரம், மேன்முறையீட்டு நீதிமன்றின்  உத்தரவை மீறா வண்ணம் செயற்படுமாறும் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்து விட்டு அவற்றை மன்றுக்கு சமர்பித்து அவர்களை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே கோத்தாபாய உள்ளிட்ட  7 பேரையும் நீதிமன்றில் ஆஜராக  உத்தரவிடுமாறு கோருகிறோம் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

 

இதனையடுத்தே கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி மன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.