Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணைகளை எதிர்கொள்ள மஹிந்த ராஜபக் ஷ தயார்: கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு

Featured Replies

விசாரணைகளை எதிர்கொள்ள மஹிந்த ராஜபக் ஷ தயார்: கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு

 

(எம்.சி.நஜிமுதீன்)

“நியூயோர்க் டைம்ஸ்” பத்திரிகைச் செய்தி யின் மூலம் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராக முன்னெ டுத்த வீண்பழியை கூட்டு எதிர்க்கட்சி தோல்வியடையச் செய்துள்ளது. எனினும் அக்குற்றச்சாட்டு தொடர்பிலான எந்தவொரு விசாரணையையும்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க்கட்சி எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவராக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுள்ளையிலுள்ள அக்கட்சியின் தலமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரைாயாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்து “நியுயோர்க் ரைம்ஸ்” பத்திரிகையில் வெளியான தகவல் சம்பந்தமாக நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்றில் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றது. அந்தச் செய்தி வெளியானது முதல் நாட்டில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கைகைகளை முன்னெடுத்தனர்.

எனினும் நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்றில் சபை ஒத்திவைப்பு விவாதம் ஆரம்பமானபோது இரண்டு முறை சபையின் கோரம் இல்லாது போனது. அந்த யோசனையை முன்வைத்த ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ளவர்கள்கூட விவாதத்தில் கலந்து கோரத்தை பாதுகாக்கவில்லை.

 

மேலும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம் விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிகும் உறுப்பினர்கள் அனைவரும் அதனை எதிர்கொள்வதற்கு தயார் என்தையும் நாம் அரசாங்கத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அத்துடன் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சீன நிறுவனத்திற்கு தொடர்ந்தும் அரசாங்கம் வேலைத்திட்டங்களை வழங்கியுள்ளது. எனினும் விசாரணைக்காகவாவது குறித்த நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி விசாரணை நடைத்துமாறு நாம் அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டிருந்தோம்.

 

மேலும் நேற்றைய (நேற்று முன்தினம்) விவாதத்திற்போது விசாரணை அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிக்குமாறு வேண்டிக்கொண்டிருந்தோம். எனினும் அதனை அரசாங்கம் செய்யவில்லை. ஆகவே அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுத்த வீண்பழியை கூட்டு எதிர்க்கட்சி தோல்வியடையச் செய்துள்ளது.

 

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதால் நேற்றை (நேற்று முன்தினம்) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும் அக்குற்றச்சாட்டு தொடர்பில் அவர் ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படுமிடத்து அதனை அவர் எதிர்கொள்வார்.

 

 இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவராக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தைக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ரணில் விக்ரமசிங்கவை கல்வியமைச்சராக்கினார். அதன் வழித்தோன்றலில்தான் அவர் கட்சியின் தலமைக்கு வந்துள்ளார். அவ்வாறான ஏற்பாட்டையே பிரமர் ரணில் விக்ரமசிங்க கட்சிக்குள் மேற்கொண்டு வருகிறார். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இருக்கும்போது அகிலவிராஜ் காரியவசத்தை கட்சியின் செயலாளராக தற்போது நியமித்துள்ளார்.

 

கல்லிவயமமைச்சர் பதவி வகிக்கும் அகிலவிராஜ் காரியவசம் தற்போது கல்வித்துறையை சீரழிப்பதனை அவதானிக்க முடிகிறது. கல்வித்துறையை அபிவிருத்தி செய்வதாக வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் “சிறந்த போதைப்பொருள் வேண்டுமானால் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்ல வேண்டிய” நிலையையே ஏற்படுத்தியுள்ளார். போதைப்பொருள் பகிர்தளிக்கும் நிலையமாக பாடசாலைகளை மாற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-21

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.