Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் கொழும்பின் காலனித்துவப் பகுதி அல்ல : காணாமல் போனோர் விவகாரத்தில் யாருக்கு தண்டனை வழங்குவது; யாழில் பிரதமர் கேள்வி

Featured Replies

யாழ்ப்பாணம் கொழும்பின் காலனித்துவப் பகுதி அல்ல : காணாமல் போனோர் விவகாரத்தில் யாருக்கு தண்டனை வழங்குவது; யாழில் பிரதமர் கேள்வி

MAIN-01Page1Image0016-6c2d1acb48ff8c85f5e440e6b3eb2354968de7f1.jpg

 

(ரி.விரூஷன், இ.சதீஸ்)

இராணுவம் படிப்படியாக வெளியேறும்

அதனை வெளிப்படையாகவே செய்வோம்

மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை

நாட்டில் இனவாதத்தை பரப்பவேண்டாம்

அனைவரும் இணைந்து பயணிப்போம்

நாட்டு நிலைமை முன்னேற்றமடையும்போது இராணுவம் படிப்படியாக வெளியேறும். அவற்றை நாம் மறைத்து செய்யமாட்டோம். வெளிப்படை யாகவே செய்வோம். பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இவையும் படிப்படியாக இடம்பெற வேண்டும். தெற்கிலும் இந்த நிலை இருந்தது. யாழ்ப்பாணம்  என்பது கொழும்பின் காலனித்துவப் பிரதேசம் அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார்.  

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் கடந்த ஐந்து வருட காலங்களில் அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியவில்லை. 

     எனினும் எதிர்காலத்திற்கான சிறப்பான அத்திவாரம்  தற்போது போடப்பட்டுள்ளது. காணாமல் போனவர் விவகாரம் தற்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எமக்குத் தெரியாதுள்ளது . அதில் யாருக்குத் தண்டனை வழங்குவது எனவும் பிரதமர் ரணில் கேள்வி எழுப்பினார். 

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களது கடனினை பதிலளிப்புச் செய்யும் செயற்றிட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

யுத்தத்ததால் யாழ்ப்பாணம் அழிந்து போனது. யுத்தத்ததால் இலங்கை அழிந்து போனது. ஜூலைக் கலவரம் ஆரம்பிக்கப்பட்டு 35 வருடங்கள் கடந்து விட்டன. சாதாரண மக்கள் இதனூடான குழப்பம் அடைந்து மனநிலை பாதிக்கப்பட்டதனால் இப்பிரதேசத்திலே விடுதலைப்புலிகளது தாக்கம் ஏற்பட்டது. அவர்கள் இதற்காக போராடவேண்டி ஏற்பட்டது.

கொழும்பிற்கு அடுத்ததாக நல்லதொரு மாவட்டமாக யாழ்ப்பாணமே இருந்தது. அது பின்னர் இல்லாமல் போனது . கொழும்பு போன்று நல்ல கல்வி யாழ்ப்பாணத்தில் இருந்தது. இங்கிருக்கும் ஆசிரியர்கள் இப்போது வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அதனால் நல்ல கல்வியும் இல்லாமல் போனது. சுகாதார நிலைமை , வியாபார நிலைமை இல்லாமல் போனது. இது எல்லாப் பிரதேசங்களிலும் ஏற்பட்டது. இதன் ஊடாக இலங்கைக்கு என்ன ஏற்பட்டது?

எங்களுக்குப் பின்னர் சீனா திறந்த பொருளாதாரக் கொள்கையை உருவாக்கியது. வியட்நாம் நாட்டின் கைத்தொழில் அமைச்சர் 1992 ஆம் ஆண்டு கைத்தொழிலை எவ்வாறு முன்னேற்றலாம் என்று என்னோடு கலந்துரையாடினார். இப்போது அவர்கள் எல்லாம் எங்கிருக்கின்றார்கள். இப்போது பங்களாதேஷ் எங்கிருக்கின்றது.

இந்நிலைமையில் இருந்து நாம் மேலோங்கி வரவேண்டும். இந்த நாட்டை புதிய நாடாக மாற்றவேண்டும். வடக்கினை புதிதாக மாற்றவேண்டும். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தது. ஆனால் இதுவரைக்கும் சமாதானம் வரவில்லை. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் சமாதானம் ஏற்பட்டது. நாங்கள் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பல பிரச்சினைகள் இருக்கின்றன. பலர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எமக்குத் தெரியாது. இதில் யாருக்கு என்ன தண்டனை வழங்குவது?

சிலர் விடுதலைப்புலிகள் மீள வருவார்கள் என கூறுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மீண்டும் வருவார்களா என எனக்குத் தெரியாது. தெற்கிலும் மக்கள் அச்சப்படுகின்றார்கள். அவ்வாறாக சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன.

 நாம் அந்த வழியில் செல்வதா ? இந்த வழியில் செல்வதா ? இதனை நாம் சிந்தித்து செயற்பட வேண்டும் . இப்போது எம்மிடம் இருப்பதை வைத்துக்கொண்டு 2020, 2025 வரை முன்னேறிச் செல்லுவோம் நாம் அந்த இலக்கை அடைய வேண்டும். இதுவரை நாம் கஷ்டப்பட்டது போதும். நாங்கள் இப்போது அனைவரும் ஒன்று சேர்ந்துதான் பயணிக்கின்றோம் வேறு எதுவும் செய்யவில்லை. இதனால் பாரிய விளைவுகள் நாட்டுக்கு ஏற்பட்டது. சில அடிப்படை வாதிகள் வெற்றி பெற்றார்கள். அடிப்படை வாதமும் பயங்கரவாதமும் வெற்றி கண்டபோதெல்லாம் நாடு வீழ்ச்சியடைந்தது. இந்தப் பிரச்சினைகளை வெற்றி கொண்டு நாம் அனைவரும் முன்னேறிக்கொண்டிருக்கின்றோம். எதிர்பார்த்த அனைத்தையும் இந்த ஐந்து வருடங்களுக்குள் அரசாங்கத்தால் செய்ய முடியாமல் போனது. ஆனால் எதிர்காலத்திற்கான நல்லதொரு அத்திவாரத்தை இட்டுள்ளோம்

நான் இன்று ( நேற்று) காலை எழுந்து பத்திரிகை வாசித்தேன். தேசியப் பத்திரிகை ஒன்றை வாசித்தேன். 45 தினங்களில் இராணுவ முகாம்களை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலமைச்சர் ஏதும் அந்தக் கட்டளையைப் பிறப்பித்தாரா என்று நான் நினைத்தேன். எனவே அவரிடம் கேட்டேன். முதலமைச்சரும் அவ்வாறு கட்டளையிட்டிருக்கவில்லை.

நான் இது தொடர்பில் இராணுவத் தளபதியிடம் கேட்டேன். காரணம் கடந்த வாரம் நான் இராணுவத் தளபதியை சந்தித்திருந்தபோது வடக்கில் காணிகளை விடுவித்து வருவதாக அவர் என்னிடம் கூறினார். அதனால் இன்று (நேற்று) காலை இராணுவத் தளபதியிடம் இராணுவ முகாம்களை அகற்றப்போகிறீர்களா என்று கேட்டிருந்தேன். இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம் என்று அவர் கூறினார்.

அதன் பின்னர் நான் யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டி ஆரச்சியிடம் எத்தனை முகாம்களை அகற்றப்போகிறீர்கள் எனக் கேட்டேன். அப்படி எந்த முகாமையும் அகற்றமாட்டோம் என அவர் கூறினார். அப்படியானால் யார் இந்த இராணுவ முகாம்களை மூடுவது? திவயின தேசியப் பத்திரிகையின் ஆசிரியர்தான் முகாம்களை மூடப்போகிறாரா?

இராணுவத்தின் கட்டமைப்பில் சில மாற்றங்கள் இடம்பெறுகின்றன. எந்தவொரு இராணுவத்திலும் அது நடக்கும். அப்படியான சந்தர்ப்பங்களில் சில கட்டளைத் தளபதிகளுக்கு நிர்வாகப் பதவிகள் கிடைக்கும். உண்மையிலேயே இராணுவ முகாம்களை அகற்றும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. நாம் இவ்வாறு இணைந்து செயற்படும்போது அவை இயல்பாகவே நடக்கும். இது இலங்கையின் ஒரு பகுதியாகும். இங்கு பயங்கரவாதம் இருந்தது. படிப்படியாக பயங்கரவாதம் முடிந்துள்ள நிலையில் இவையும் அகற்றப்பட வேண்டும். தெற்கிலும் இந்த நிலை இருந்தது. யாழ்ப்பாணம் என்பது கொழும்பின் காலனித்துவப் பிரதேசம் அல்ல. அநீதிகளை தவிர்த்து நாம் முன்செல்ல வேண்டும்.

நாட்டில் இனவாதத்தை மீண்டும் கிளற முயற்சிக்கின்றனர். இவை அனைத்தும் பொய்ப் பிரசாரங்கள். பொய் கூறவேண்டாம். நாம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு வருகின்றோம். சில விடயங்களில் அரசாங்கம் அதிக காலம் எடுத்துள்ளது. அது எமது தவறாகும். பாராளுமன்றத்தில் இது தொடர்பில் நானும் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவும் விளக்கமளித்தோம். இராணுவத் தளபதி தினேஸ் குணவர்த்தனவை சந்தித்து விளக்கமளிப்பதாக கூறினார்.

பிரச்சினைகளைத் தீர்த்து முன்செல்வது குறித்து ஆராய்வோம். நாட்டு நிலைமை முன்னேற முன்னேற இராணுவம் படிப்படியாக வெ ளியேறும். அவற்றை நாம் மறைத்து செய்ய மாட்டோம். வெ ளிப்படையாகவே செய்வோம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.