Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மனி கால்பந்து அணியில் கலகம்... இனவெறியால் மெசூட் ஒசில் விலகல்!

Featured Replies

ஜெர்மனி கால்பந்து அணியில் கலகம்... இனவெறியால் மெசூட் ஒசில் விலகல்!

 
 

நான் ஒரு கால்பந்து வீரன். அரசியல்வாதி கிடையாது.

ஜெர்மனி கால்பந்து அணியில் கலகம்... இனவெறியால் மெசூட் ஒசில் விலகல்!
 

லகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணி முதல் சுற்றிலேயே தோல்வியைச் சந்தித்தது. `நடப்புச் சாம்பியன்' முதல்சுற்றுடன் நடையைக்கட்ட  அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். தோல்வி தந்த வலியிலிருந்து விடுபடுவற்குள் அணிக்குள் கலகம் வெடித்துள்ளது. இனவெறி புகார் காரணமாக அந்த அணியின் மிட்ஃபீல்டர் மெசூட் ஒசில் `ஜெர்மனி அணிக்காக இனிமேல் விளையாடப் போவதில்லை' என்று அறிவித்துள்ளார் உலகக் கால்பந்து ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெர்மனி வீரர் மெசூட் ஒசில்

மெசூட் ஒசில் துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர். லண்டனின் புகழ்பெற்ற அர்சனல் கிளப்புக்காக விளையாடி வருகிறார். கடந்த மே மாதத்தில் லண்டனுக்கு வந்த துருக்கி அதிபர் எர்டோகனை மெசூட் சந்தித்தார். அப்போது, அர்சனல் அணிக்காக தான் அணிந்து விளையாடும் ஜெர்சி ஒன்றை அவருக்குப் பரிசாக வழங்கினார். ஜெர்மனி அணியின் மற்றொரு மிட்ஃபீல்டர் குன்டோகனும் துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர்தான். மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடும் இவரும் லண்டனில் துருக்கி அதிபரைச் சந்தித்து, தன் ஜெர்சி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். குன்டோகன் வழங்கிய ஜெர்சியில் `To my president ' என்று எழுதப்பட்டிருந்தது. ஏற்கெனவே துருக்கி அதிபர் மீது பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்த இரு வீரர்களின் இந்தச் சந்திப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

 

ரசிகர்கள் இருவரையும் கடுமையாக விமர்சித்தார்கள். `உங்கள்  மேல் எங்களுக்கு நம்பகத்தன்மை குறைந்து விட்டது. ஜெர்மனி அணிக்கு நீங்கள் விசுவாசமாக இருக்கிறீர்களா?' என்று கேள்விக் கணையால் துளைத்தனர். இதற்கிடையே உலகக் கோப்பைத் தொடரிலும் முதல் சுற்றில் அணி தோல்வியடைய, பத்திரிகைகளும் அரசியல்வாதிகளும் ஒசிலை கடுமையாக விமர்சித்தனர். இந்தச் சமயத்தில் ஜெர்மனி கால்பந்து சங்கம் தன்னைக் காப்பற்றத் தவறிவிட்டதாக மெசூட் கருதினார். இதையடுத்தே இத்தகைய அதிரடி முடிவை எடுத்துள்ளார். 

தன் முடிவு குறித்து மெசூட் ஒசில் விடுத்துள்ள அறிக்கையில், ``நான் ஒரு கால்பந்து வீரன். அரசியல்வாதி கிடையாது. என் வம்சாவளி நாட்டைச் சேர்ந்த உயர் அதிகாரியைச் சந்தித்த சிறு விஷயத்தை வைத்துக்கொண்டு இப்படி நடத்துவது மரியாதைக் குறைவாகக் கருதுகிறேன். இந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு நான் அரசியலிலா ஈடுபடப் போகிறேன்? 2009-ம் ஆண்டு முதல் ஜெர்மனி அணிக்காக விளையாடி வருகிறேன். நான் அணிக்காகச் செய்த சாதனைகளை மறந்து விட்டனர். ஜெர்மனி கால்பந்து சங்கம் போன்ற மிகப்பெரிய அமைப்பு இனரீதியாகச் செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது. ஜெர்மனி அணி வெற்றிபெறும்போது நான் ஜெர்மனிக்காரன். அணி தோற்றால் நான் வேறுநாட்டிலிருந்து வந்து குடியேறியவனாகி விடுகிறேன். ஜெர்மனி கால்பந்து சங்கத் தலைவர் ரின்ஹார்ட் கிரின்டல் தன் இயலாமைக்கும் திறமையின்மைக்கும் என்னை பலிகடா ஆக்கப் பார்க்கிறார். பெருமையுடனும் மிகுந்த மனநிறைவுடனும் ஜெர்மனி அணியின் ஜெர்சியை அணிந்தேன். இனிமேல் அந்த ஜெர்சியை அணியப் போவதில்லை. நான் ரின்ஹார்ட் கிரின்டலின் செயலுக்காக வருத்தப்படுகிறேன். ஆனால், ஆச்சர்யப்படவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒசில்

உலகக் கோப்பைத் தொடரில் ஸ்வீடன் அணியுடன் ஜெர்மனி விளையாடிய போது பல ஜெர்மனி ரசிகர்கள் மெசூட் ஒசிலை கேலி செய்துள்ளனர். `துருக்கிக்குப் போ.... துருக்கிப் பன்றி ' என்றெல்லாம் ஃபேஸ்புக்கிலும் கடுமையாக விமர்சித்துள்ளனர். மெசூட்டின்  குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். `தனக்கு இரு இதயங்கள். ஒன்று ஜெர்மனிக்காகத் துடிக்கும். மற்றொன்று துருக்கிக்காகத் துடிக்கும்' என்று கூறுவது ஒசிலின் வழக்கம். தற்போது 29 வயதான மெசூட், ஜெர்மனி அணிக்காக 92 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 23 கோல்களை அடித்துள்ளார். 2014-ம் ஆண்டு ஜெர்மனி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்!

https://www.vikatan.com/news/sports/131706-mesut-ozil-walks-away-from-germany-team-heres-why.html

  • தொடங்கியவர்

வென்றால் நான் ஜெர்மானியன் தோற்றால் புலம்பெயர்ந்தவன்: நிறவெறிக் குற்றம்சாட்டி விலகிய ஜெர்மன் கால்பந்து நட்சத்திரம் மெசூட் ஓஸில் வேதனை

 

 

 
mesut%20ozil

மெசூட் ஓசில். | படம்-ஏ.எப்.பி.

2014 உலகக்கோப்பையை ஜெர்மனி வென்ற போது முக்கிய உறுப்பினராக இருந்த வீரர் மெசூட் ஓஸில். 2018 ரஷ்ய உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே ஜெர்மனி வெளியேறியதற்கு மெசூட் ஓஸிலின் சொதப்பலான ஆட்டமும் ஒரு காரணம் என்றாலும் விமர்சனம் இவர் ஒருவர் மீதே திருப்பப்பட்டதற்கான காரணங்கள் உள்ளன.

இந்த ஒருதலைபட்சமான விமர்சனங்கள் பின்னணியில் ஜெர்மானிய நிறவெறி இருப்பதாக ‘பகீர்’ குற்றச்சாட்டை ஓசில் முன்வைத்து இனி ஜெர்மனி அணிக்கு ஆடப்போவதில்லை என்று முடிவை அறிவித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 

இவர் மீது திடீரென ஒரு விமர்சனம் எழுந்ததற்குக் காரணம் துருக்கி அதிபர் எர்டோகனுடன் மெசூட் ஓசில் புகைப்படம் எடுத்துக் கொண்டதே. இது ஜெர்மனி மீதான இவரது விசுவாசத்துக்கு எதிராகப் பார்க்கப்பட்டது.

ஆனால் ஓசில் கூறும்போது, “என் பெற்றோரின் நாடு துருக்கி” எனவே புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

இப்போது சர்ச்சையானதையடுத்து ஜெர்மன் கால்பந்து கழகத்தில் இவருக்கு ஆதரவு இல்லாததையடுத்து ஓசில் மேலும் கூறும்போது, “வென்றால் நான் ஜெர்மானியன் தோற்றால் நான் புலம்பெயர்ந்தவன்” என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று சாடினார்.

“எனக்கு 2 இருதயங்கள், ஒன்று ஜெர்மனி இன்னொன்று துருக்கி” என்றும் அவர் கூறியுள்ளார். இவர் ஜெர்மனியின் நிறவெறியைக் காரணம் காட்டி அந்த அணிக்கு ஆடமாட்டேன் என்று கூறியதையடுத்து துருக்கி நீதியமைச்சர் அப்துல்ஹமித் குல், “மெசூட் ஓஸில் முடிவை நான் வரவேற்கிறேன், பாசிசம் எனும் வைரஸுக்கு எதிராக அவர் அடித்த இந்த கோல் பாராட்டப்பட வேண்டியது” என்று எரியும் நெருப்பில் எண்ணை வார்த்துள்ளார். மேலும் ஐரோப்பாவில் பரவிவரும் இஸ்லாமிய எதிர்ப்புக்கு ஓசில் சரியான அடி கொடுத்துள்ளார் என்றும் துருக்கி அமைச்சர் ஒருவர் தெரிவித்ததும் சர்ச்சைகளை ஊதிப்பெருக்கியுள்ளது.

ஆனால் ஜெர்மனி சான்சலரான அஞ்சேலா மெர்கெல் ஓசிலைப் பாராட்டி, “ஜெர்மனி அணிக்கு இவரது பங்களிப்பு ஏராளம், இப்போது அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் அது மதிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24496401.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

விரக்தியுடன் திடீர் ஓய்வை அறிவித்தார் ஜெர்மனி வீரர் ஓசில்

pic-AFP-696x435.jpeg @AFP
 

ஜெர்மனியின் 29 வயதுடைய மத்தியகள வீரர் மெசட் ஓசில் அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் விரக்தியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை (22) திடீரென அறிவித்துள்ளார்.

தனது துருக்கி பூர்வீகம் காரணமாக அண்மைய மாதங்களில் சர்ச்சைகளுக்கு முகம்கொடுத்த ஆர்சனல் அணியின் முக்கிய வீரரான ஒசில், இம்முறை உலகக் கிண்ண போட்டியில் ஜெர்மனியின் ஆரம்ப பதினொரு வீரர்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். நடப்புச் சம்பியனாக ரஷ்யாவில் உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்ற ஜெர்மனி உலகக் கிண்ணத்தின் ஆரம்ப சுற்றுடனேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியேறியது.

 

இதுவரை ஜெர்மனி அணிக்காக 92 போட்டிகளில் ஆடி 23 கோல்களை பெற்றும் 40 கோல் உதவிகளை வழங்கியவருமான ஓசில், தொடர்ந்து தனது சாதனையை நீடிக்காமல் இருக்க முடிவு செய்துள்ளார்.

ஓசில் கடந்த மே மாதத்தில் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகானை சந்தித்தது ஜெர்மனியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. லண்டன் சென்றிருந்தபோது ஓசில் மற்றும் இல்காய் குண்டோகன் ஆகியோர் துருக்கி ஜனாதிபதியுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை சமூகதளத்தில் பதிவிட்டதே அவர் மீது விமர்சனங்கள் ஊருவாக காரணமானது.    

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மௌனம் கலைந்த ஓசில், சமூகதளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  

அண்மைய சம்பவங்கள் பற்றி அதிகம் சிந்தித்த பின்னரே பாரமான மனதுடன் சர்வதேச அளவில் தொடர்ந்து ஜெர்மனி அணிக்கு ஆடுவதில்லை என்ற முடிவை எடுத்தேன். நான் இனவாதம் மற்றும் அவமதிப்புக்கு ஆளாவதாக உணர்கிறேன்என்று அவர் எழுதியுள்ளார். ‘நான் அதிக பெருமை மற்றும் உற்சாகத்துடனேயே ஜெர்மனி சட்டையை அணிந்தேன், இப்போது எனக்கு அவ்வாறு இல்லைஎன்றும் குறிப்பிட்டுள்ளார்.

Ozil-with-Erdukan.jpg

 

சர்ச்சையை ஏற்படுத்திய ஒசில் – எர்துகான் புகைப்படம்

ஜெர்மனியின் கெல்சன்கிர்சன் நகரில் துருக்கி பெற்றோருக்கு பிறந்த ஓசில், 2006 ஆம் ஆண்டில் இத்தாலிக்கு எதிரான நட்புறவு போட்டியில் ஆடுவதற்கு துருக்கி கால்பந்து சம்மேளனம் அழைத்தபோது அதனை மறுத்தார். தமக்கு துருக்கி குடியுரிமை பெறும் எதிர்பார்ப்பு இல்லை என்றும் குறிப்பிட்டார்.    

ஜெர்மனி பொற்கால அணியின் முக்கிய வீரராக மாறிய ஓசில், 2009இல் 21 வயதுக்கு உட்பட்ட ஐரோப்பிய சம்பியன்சிப் போட்டியை வென்ற ஜெர்மனி அணியில் இடம்பிடித்தார். 2014 பிரேசிலில் உலகக் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி அணியின் முக்கிய வீரராகவும் அவர் இருந்தார்.  

 

இந்நிலையில் துருக்கி ஜனாதிபதியுடன் புகைப்படத்தில் தோன்றியதை நியாயப்படுத்திய ஓசில், அது அரசியல் காரணம் கொண்டதல்ல என்றும் ஜனாதிபதிக்கு மதிப்பு அளிப்பதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த புகைப்படம் வெளியான பின் ஜெர்மனியின் பல அரசியல்வாதிகளும் ஓசிலை விமர்சித்ததோடு, ஜெர்மனி ஜனநாயகத்தில் அவரது விசுவாசம் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.

துருக்கி ஜனாதிபதி எர்துகான் தனக்கு எதிரான தோல்வி அடைந்த அரசியல் சதிப்புரட்சிக்கு பின்னர் உள்நாட்டில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஜெர்மனியின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகலுக்கும் காரணமாகியுள்ளது.  

இந்த புகைப்படம் வெளியானபின் தமக்கு மின்னஞ்சலில் வெறுப்பு கடிதங்கள் கிடைத்ததாகவும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் மெசட் ஓசில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெறோமுக்கு எதிராக இனாவாத கருத்து சொன்னாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.