Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் நவீன பேருந்து நிலையம்- நிதி ஒதுக்கீட்டில் தில்லுமுல்லு!!

Featured Replies

மன்னாரில் நவீன பேருந்து நிலையம்- நிதி ஒதுக்கீட்டில் தில்லுமுல்லு!!

 

DSC_0259-750x430.jpg

 
 

Get real time updates directly on you device, subscribe now.

Subscribe
 

மன்னாரில் அமைக்கப்படவுள்ள மன்னார் நவீன பேருந்து நிலையத்துக்கு, 180 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 113 மில்லியன் ரூபாவுக்கே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 5 ஆவது அமர்வு, மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இன்று இடம் பெற்றது. அதில் அவர் தெரிவித்ததாவது,

எமது செயற்பாடுகள் அனைத்துமே அபிவிருத்தியையும்,மக்களையும் மையப்படுத்தியதாக அமைய வேண்டுமே தவிர சுய நல அரசியல் நோக்குடன் பயணிப்பது உகந்தது இல்லை.
சில வேலைத்திட்டங்கள் மன்னார் நகர சபைக்கு தெரியாமலே இடம் பெற்றுள்ளது.

 

 

இனி வரும் காலங்களில் மன்னார் நகர சபைக்கு தெரியாமல் இடம் பெறுகின்ற எவ்வித செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்க மாட்டோம். அவ்வாறு இடம் பெற்றால் நாங்கள் நகர சபையின் தலைவராகவோ அல்லது உறுப்பினர்களாகவோ இருப்பதில் அர்த்தம் இல்லை.

நகர சபையின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நகர சபையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளுக்கு மட்டுமே நகர சபையின் அங்கிகாரம் வழங்கப்படும். நகர சபையின் செயற்பாடுகளுடன் ஒத்துப்போகாத எந்த வேலைத்திட்டங்களும் நகர சபையினால் முன்னெடுக்கப்பட மாட்டாது. குறித்த திட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

-மன்னார் மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படுகின்ற நிதி எங்களினூடாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற போது, இன்னும் ஒருவர் வந்து ஆதிக்கம் செலுத்தி விட்டு செல்வதற்கு நாம் இடமளிக்க முடியாது.

மன்னாரில் 180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் அமைக்கப்படவுள்ள மன்னார் பொது பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றது.

180 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் 113 மில்லியன் ரூபாவிற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. மிகுதி 67 மில்லியன் ரூபாய் எங்கே போனது?

இது தொடர்பில் உரிய விளக்கத்தை நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சு எமக்கு வழங்க வேண்டும்- என்றார்.

http://newuthayan.com/story/15/மன்னாரில்-நவீன-பேருந்து-நிலையம்-நிதி-ஒதுக்கீட்டில்-தில்லுமுல்லு.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.