Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காண முடியாத அளவில் உள்ளன (படங்கள் )

Featured Replies

சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில்- செம்மணியில் அகழ்வு!!

 

 

20180810_090950-750x430.jpg

 
 
 
 

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் நீர்தாங்கி அமைக்கும் பணிகள் மேற்கோண்டபோது மனித எலும்புக்கூடொன்று அண்மையில் தென்பட்டது

இந்த நிலையில் குறித்த பகுதியை தோண்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

யாழ். மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மயூரன் முன்னிலையில் , இந்த குழியை தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

மிஸ் பண்ணிடாதீங்க...!!
 

20180810_090922-750x430.jpg20180810_091024-750x430.jpg

http://newuthayan.com/story/10/சட்ட-வைத்திய-அதிகாரி-முன்னிலையில்-செம்மணியில்-அகழ்வு.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

செம்மணியில் இன்றும் மனித எலும்புகள் மீட்பு

 

 
 

இன்று காலை செம்மணிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனித எச்ச அகழ்வு பணிகள் நன்பகலுடன் பூர்த்தியாகியுள்ளது.

37654168_1167897463361621_41125637243157

இதன்போது ஒருவரது உடலின் சில எலும்பு பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவை இது ஆணா அல்லது பெண்ணா என்பது தொடர்பில் அடையாளப்படுத்துவதற்கு போதுமான எலும்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்ட எலும்புகள் அனைத்தும் நீண்ட காலத்திற்கு முற்பட்டதாக காணப்படுவதாக அகழ்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/37169

  • தொடங்கியவர்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காண முடியாத அளவில் உள்ளன (படங்கள் )

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

semmani-_8331-800x600.jpgயாழ்.செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்களை அடையாளம் காண முடியாத அளவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.செம்மணி பகுதியில் நீர்த்தாங்கி அமைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்த போது , கடந்த வெள்ளிக்கிழமை மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கபட்டன.

 

அதனை தொடர்ந்து கிராம சேவையாளர் ஊடாக யாழ். காவல்துறையினருக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து யாழ்.நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டனர்.

அதன் பிரகாரம் சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி. சதிஸ்தரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் , அகழ்வினை மேற்கொண்டு ஆய்வுகளை முன்னெடுக்க உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். போதனா வைத்திய சாலை சட்டவைத்திய அதிகாரி ந.மயூரதன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று இருந்த போது , யாழ். காவல்நிலைய பெருங்குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு சமூகம் அளிக்காததால் , அன்றைய தினம் அகழ்வு பணிகளை முன்னெடுக்காது அவர்கள் திரும்பி இருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கபட்ட பகுதிகளில் சட்டவைத்திய அதிகாரி, வைத்திய அதிகாரியின் குழுவினர்கள், தடயவியல் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர்.

எலும்புக்கூட்டு எச்சங்கள் இருந்ததாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியின் மேற்பரப்பை இயத்திரத்தின் (பெக்கோ) உதவியுடன் அகழ்ந்து எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்ட பகுதிகளை சுற்றி மண் வெட்டி மற்றும் சிறு உபகரணங்களால் மண் அகழப்பட்டது.

அதன் போது நில மட்டத்தில் இருந்து 75 சென்ரி மீற்றர் (இரண்டரை அடி ) ஆழத்தில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன. மண்டையோட்டின் பின் பகுதி , கால் மூட்டின் சில பகுதிகள் என சொற்ப அளவிலான எலும்புக்கூட்டு எச்சங்களே மீட்கப்பட்டன. இடுப்பு பகுதி , தாடை பகுதி. முள்ளந்தண்டு பகுதிகள் , உள்ளிட்ட பெருமளவான பகுதிகள் மீட்கப்படவில்லை.

இதனால் மீட்கபட்ட எலும்பு கூட்டு எச்சங்கள் ஆணினதா ? பெண்ணினதா ? என்பதனை கூட உடனடியாக அறிய முடியாத நிலை காணப்படுகின்றது. ஏனைய எலும்புகூட்டு எச்சங்கள் முன்னதாக அகழ்ந்து செல்லப்பட்ட மண்ணுடன் சென்று இருக்கலாம். அல்லது உக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கபட்ட பகுதியில் மேலும் அகழ்வுகள் நடத்தப்பட்டன. 150 சென்ரி மீற்றர் (ஐந்தடி) வரையில் மண் அகழ்ந்து பரிசோதிக்கப்பட்டது. அதன் போது வேறு எச்சங்கள் மீட்கப்படவில்லை.மீட்கபட்ட எலும்பு கூட்டு எச்சங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டன. அவை மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்திய பின்னரே மேலதிக தகவல்களை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கபட்ட பகுதி 1987 ஃ 89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் பிரச்சனம் உள்ள இடமாக இருந்ததாகவும் , அதன் பின்னரான கால பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டில் இருந்து பின்னர் 1995ஆம் ஆண்டு யாழ்.குடாநாட்டை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியாக காணப்பட்டதாகவும், இராணுவ கட்டுபாட்டில் இருந்த கால பகுதியில் எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதி ஊடாக இராணுவத்தினரின் முன்னரங்க பாரிய மண் அரண் காணப்பட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

semmani-_8290.jpgsemmani-_8309-800x600.jpgsemmani-_8332-800x502.jpgsemmani-_8359-800x600.jpgsemmani-_8363-800x600.jpgsemmani-8353-800x600.jpgsemmani-_8285.jpg

http://globaltamilnews.net/2018/89121/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.