Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட­ப­குதி வீட­மைப்பு தொடர்பில்.....இந்­தியத் தூதுவர் கூட்­ட­மைப்பு எம்.பி.க்களுடன் கலந்­து­ரை­யாடி விரைவில் தீர்வு காண­வேண்டும்

Featured Replies

வட­ப­குதி வீட­மைப்பு தொடர்பில்

City-01-BlackGMGPage1Image0012-6d6e2f2dd93318c6edc77e345c2bc89540f98372.jpg

 

(நமது நிருபர்)

இந்­தியத் தூதுவர் கூட்­ட­மைப்பு எம்.பி.க்களுடன் கலந்­து­ரை­யாடி விரைவில் தீர்வு காண­வேண்டும் : அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பிர­த­ம­ருக்கு ஜனா­தி­பதி ஆலோ­சனை

வடக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான வீடு­களை அமைப்­பது தொடர்பில் தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், இந்­தியத் தூதுவர் மற்றும் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­களை அழைத்து கலந்­து­ரை­யாடி தீர்­வைக்­கா­ணு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை யில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று அமைச்­ச­ர­வைக்­கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது வடக்கில் வீடு­களை அமைப்­பது குறித்த விட­யத்தில் அமைச்­சர்­க­ளுக்குள் எழுந்த முரண்­பா­டு­களை அடுத்து ஜனா­தி­பதி இவ்­வாறு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.  

அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்தின் போது வடக்கில் 40 ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான ஒப்­பந்­தத்தை சீன நிறு­வ­னத்­திற்கு வழங்­கு­வது தொடர்பில் தனது யோச­னையை அமைச்சர் சுவா­மி­நாதன் சமர்ப்­பித்­துள்ளார். இதன்­போது இந்த 40 ஆயிரம் வீடு­களை அமைக்கும் பொறுப்­பினை சீன நிறு­வ­னத்­திடம் கைய­ளித்தால் இந்­தி­யாவின் எதிர்ப்­பினை சம்­பா­திக்­க­வேண்­டி­வரும். எனவே இந்த விடயம் தொடர்பில் மீள் பரி­சீ­லனை செய்­வது நல்­லது என்று அமைச்சர் சாக­ல­ரத்­னா­யக்க வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து இந்த வீடு­களை தலா 12 இலட்சம் ரூபா செலவில் அமைத்­துத்­த­ரு­வ­தற்கு சீன நிறு­வனம் இணங்­கி­யுள்­ளது. இதனால் இதற்­கான இணக்­கத்­தினை தெரி­விப்­பது நல்­லது என்று அமைச்சர் சுவா­மி­நாதன் இங்கு விளக்­கி­யுள்ளார்.

இதன்­போது கருத்து தெரி­வித்த அமைச்சர் மனோ கணேசன் வடக்கில் வீடு­களை அமைப்­பது தொடர்பில் தீர்­மானம் எடுக்­கப்­பட்டு மூன்­று­வ­ரு­டங்கள் ஆகி­விட்­டன. ஆனால் வடக்கு, கிழக்கில் இன்­னமும் ஒரு­வீ­டுகள் கூட அமைக்­கப்­ப­ட­வில்லை. விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னனை முழு­நாடும் திட்­டு­கின்­றது. ஆனால் அவ­ரது கருத்­துக்குப் பின்னால் உள்ள உண்­மையை யாரும் உண­ர­வில்லை. வடக்கு, கிழக்கில் வாழ்­வா­தார அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வில்லை. இங்­கி­ருந்து தலை­வர்கள் அங்­குபோய் வாக்­கு­று­திகள் அளிப்­ப­துதான் நடக்­கி­றது. ஆனால் அங்கு ஒன்றும் நடை­பெ­று­வ­தில்லை. மூன்று வரு­டங்கள் கழிந்தும் அங்கு புனர்­வாழ்வு அமைச்சு 40 ஆயிரம் வீடு­களில் ஒரு வீட்­டையும் கட்­ட­வில்லை. இப்­போது என்­னிடம் 50 ஆயிரம் கட்டும் பொறுப்பு உங்கள் அமைச்சு மூலம் வந்­துள்­ளது. அதற்கும் பல தடை­களை நான் காண்­கின்றேன் என்று தெரி­வித்­துள்ளார்.

 இவ்­வாறு வீடுகள் அமைக்­கப்­ப­டு­வதில் கால­தா­மதம் காண்­பிக்­கப்­ப­டும்­போது ஜனா­தி­பதி மீதும் பிர­தமர் மீதும் அர­சாங்­கத்­தினர் மீதுமே குற்­றச்­சாட்­டுக்கள் எழும். எனவே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வீடு­களை அமைப்­ப­தற்கு உடன் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அதற்­கான தடை­யினை நீக்­க­வேண்டும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து வட­ப­குதி வீட­மைப்பு திட்டம் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் எம்.பி.க்கள் , இந்­தி­யத்­தூ­துவர் , சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­களை ஒன்­று­கூட்டி கலந்­து­ரை­யாடி விரைவில் தீர்­மானம் ஒன்­றுக்கு வரு­மாறு ஜனா­தி­பதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இந்த விவ­காரம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கலந்­து­ரை­யா­டிய அமைச்சர் மனோ கணேசன் தனது அமைச்சின் கீழ் அமைக்­கப்­ப­ட­வுள்ள 50 ஆயிரம் வீடுகள் தொடர்பில் தீர்­மா­னிக்கும் குழுவின் தலை­வ­ராக முன்னர் புனர்­வாழ்வு அமைச்­சிலும் ஜனா­தி­ப­தியின் நல்லிணக்க அமைச்சிலும் செயலாளராக இருந்த வீ. சிவஞானசோதி நியமிக்கப்பட்டமை தொடர்பில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மூன்று வருடங்களாக இந்த அமைச்சுக்களில் செயலாளராக இருந்து வீடுகளை அமைக்கும் விடயத்தில் காலதாமதம் காண்பித்த ஒருவரை எவ்வாறு இந்தக்குழுவிற்கு நியமிக்க முடியும் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-25#page-1

  • தொடங்கியவர்

வடக்கில் சீனா வீடு கட்டுவதை இந்தியா விரும்பவில்லை - ராஜித 

 

 
 

(நா.தனுஜா, ஆர்.விதுஷா ரோஜனா)

வடக்கில் சீனா விடுகளை அமைப்பதற்கு இந்தியா விரும்பவில்லை என அமைச்சரவைப் இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

rajitha.jpg

இலங்கைக்கான 50 ஆயிரம் இந்திய வீட்டு திட்டத்தில் பெறும்தொகையான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 2.2 மில்லியன் செலவிலேயே இந்தியா வீடொன்றினை கட்டுகின்றது. ஆனால் சீனா 1.3 மில்லியனுக்கு வடக்கில் வீடுகளை அமைக்க முன்வந்துள்ளது. எனவே தான் அமைச்சர் சுவாமிநாதன் சீன வீட்டு திட்டம் குறித்து கவனம் செலுத்தினார். 

ஆனால் இங்கு இருப்பது இராஜதந்திர பிரச்சினையாகும். எனவே பிரதமர் இந்த விடயத்தை இரு தரப்புடனும் பேசி இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர உள்ளார் என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/37235

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.