Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வை நோக்­கிய பய­ணத்­துக்கு- மகிந்த ஒத்­து­ழைக்க வேண்­டும்- எதிர்க்­கட்­சித் தலை­வர் !!

Featured Replies

தீர்வை நோக்­கிய பய­ணத்­துக்கு- மகிந்த ஒத்­து­ழைக்க வேண்­டும்- எதிர்க்­கட்­சித் தலை­வர் !!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91

 
 
 
 

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வும், முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும் பல நெருக்­க­டி­யான விட­யங்­கள் தொடர்­பான நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டி­னர். அர­சி­யல் ரீதி­யான அடுத்த கட்­டச் செயற்­பா­டு­கள் தொடர்­பா­க­வும், வடக்­கின் நிலை­மை­கள், அங்கு முன்­னெ­டுப்­ப­தற்கு இருந்த செயற்­பா­டு­கள் ஏன் இப்­போது தடைப்­பட்­டுள்­ளன என்­பது தொடர்­பான விட­யங்­களை அவர்­கள் என்­னி­டம் முன்­வைத்­த­னர்.

இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

சீன மக்­கள் இரா­ணு­வத்­தின் 91ஆவது ஆண்டு விழாவை முன்­னிட்டு சீனத் தூத­ர­கம் நேற்­று­முன்­தி­னம் கொழும்­பில் ஏற்­பாடு செய்­தி­ருந்த நிகழ்­வில் எதிர்க்­கட்சி தலை­வர் இரா சம்­பந்­தன் கலந்­து­கொண்­டார். அதில் மகிந்த ராஜ­பக்­ச­வும், கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர். அதன்­போதே அவர்­கள் இரா.சம்­பந்­த­னு­டன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­னர்.

 

தாம் மீண்­டும் ஆட்­சிக்கு வந்­த­தும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தம்­மு­டன் இணைந்து நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்ல ஆத­ர­வ­ளிக்க வேண்­டும் என்­றும், தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண முன்­வர வேண்­டும் என­வும், தாம் தமிழ் மக்­க­ளின் உரி­மை­களை, ஜன­நா­ய­கத்தை பறிக்­கும் நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என­வும் மகிந்த ராஜ­பக்ச இந்­தச் சந்­திப்­பில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

தனது ஆட்­சி­யின் போது சீனா­வி­டம் அதிக கடன்­களை பெற்று , நாட்டை கடன் சுமைக்­குள் தள்ளி விட்­ட­தாக, தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளு­டன் இணைந்து சம்­பந்­தன் குற்­றம்­சாட்­டு­கின்­றார். ஆனால் வடக்கு, கிழக்கை அபி­வி­ருத்தி செய்­யவே அதிக கடனை பெற்­றேன், இப்­போது அந்த அபி­வி­ருத்­தி­யும் தடைப்­பட்டு விட்­டது. அதைச் சுட்­டிக்­காட்ட தவ­றி­விட்­டீர்­கள் என்று நேர­டி­யாக இரா. சம்­பந்­த­னி­டம் சுட்­டிக்­காட்­டி­ய­தாக மகிந்த ராஜ­பக்ச கூறி­யுள்­ளார்.

நாம் அதி­கா­ரத்­துக்கு வந்­த­தும் தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை எங்­க­ளு­டன் பேசித் தீர்க்க தமி­ழர் தரப்பு முன்­வர வேண்­டும். எங்­க­ளு­டன் இணைந்து கூட்­ட­மைப்பு செயற்­பட வேண்­டும். வடக்கு- கிழக்கை அபி­வி­ருத்தி செய்ய வேண்­டும். அவ்­வாறு செய்­யா­மல், தமிழ் மக்­க­ளைத் தவ­றான பாதைக்கு கொண்டு சென்­றால், உங்­கள் மத்­தி­யில் வேறு புதிய அர­சி­யல் சக்­தி­கள் உரு­வா­கும் ஆபத்து ஏற்­ப­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

கொழும்பு ஊட­கம் ஒன்­றுக்­குக் கருத்­துத் தெரி­வித்­துள்ள மகிந்த ராஜ­பக்ச, எதிர்க்­கட்­சித் தலை­வ­ரை­யும், முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வை­யும் அரு­க­ருகே அமர்த்­திப் பேசி இணக்­கப்­ப­டான சூழ­லுக்கு வரும் வாய்கை ஏற்­ப­டுத்­தி­னேன் என்று கூறி­யுள்­ளார்.

எமக்கு நீண்­ட­கால பிரச்­சினை ஒன்று உள்­ளது என்­பதை நான் வலி­யு­றுத்­தி­னேன். எமக்கு அர­ச­மைப்பு ரீதி­யான தீர்வு ஒன்று வேண்­டும் என்று கூறி­னேன். தீர்­வு­களை நோக்­கிய பய­ணத்தை முன்­னெ­டுக்­கும் புதிய அர­ச­மைப்பு விட­யங்­க­ளில் அவர்­க­ளின் முழு­மை­யான பங்­க­ளிப்பை நான் அவர்­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­டேன். வேறு பல கார­ணி­க­ளைப் பற்­றி­யும் நாம் கலந்­து­ரை­யா­டி­னோம் என்று இந்­தச் சந்­திப்­புத் தொடர்­பாக இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார்.

http://newuthayan.com/story/09/தீர்வை-நோக்­கிய-பய­ணத்­துக்கு-மகிந்த-ஒத்­து­ழைக்க-வேண்­டும்-எதிர்க்­கட்­சித்-தலை­வர்.html

  • தொடங்கியவர்

நெருக்­க­டி­யான விட­யங்கள் தொடர்பில் மஹிந்த, கோத்தா கலந்­து­ரையா­டினர்

01-c626d1a0151dd49f47b6edf95eb2b721d71da4e2.jpg

 

(ஆர்.யசி)

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தெரி­விப்பு

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷவும் பல நெருக்­க­டி­யான விட­யங்கள் குறித்து நீண்ட நேர­மாக என்­னுடன் உரை­யா­டினர். அர­சியல் ரீதி­யாக அடுத்த கட்ட செயற்­பா­டுகள் குறித்தும் வடக்கின் நிலை­மைகள், முன்­னெ­டுக்க இருந்த செயற்­பா­டுகள் இப்­போது ஏன் தடைப்­பட்­டுள்­ளன என்ற கார­ணி­களை அவர்கள் இரு­வரும் என்­னிடம் முன்­வைத்­தனர் என்று எதிர்க்­கட்சி தலைவர் இரா சம்­பந்தன் தெரி­வித்தார்.  

தீர்­வு­களை நோக்­கிய பய­ணத்தை முன்­னெ­டுக்கும் புதிய அர­சியல் அமைப்பு விட­யங்­களில் மஹிந்­தவின் பூரண ஒத்­து­ழைப்பு வேண்டும் என தான் கேட்­டுக்­கொண்­ட­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

சீன மக்கள் இரா­ணு­வத்தின் 91வது ஆண்டு விழாவை முன்­னிட்டு சீனத் தூத­ரகம் நேற்று முன்­தினம் கொழும்பில் ஏற்­பாடு செய்­தி­ருந்த நிகழ்வில் எதிர்க்­கட்சி தலைவர் இரா சம்­பந்தன் கலந்­து­கொண்­டி­ருந்த நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர் .இதன்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ எதிர்க்­கட்சி தலைவர் இரா சம்­பந்­த­னிடம் பல கார­ணி­களை முன்­வைத்­த­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது,

தாம் மீண்டும் ஆட்­சிக்கு வந்­ததும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தம்­முடன் இணைந்து நாட்­டினை முன்­னோக்கி கொண்­டு­செல்ல செயற்­பட்டு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முன்­வர வேண்டும் எனவும், தாம் தமிழ் மக்­களின் உரி­மை­களை, ஜன­நா­ய­கத்தை பறிக்கும் நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை எனவும் சம்­பந்­த­னிடம் மஹிந்த தெரி­வித்­துள்ளார்.

எனது ஆட்­சியின் போது சீனா­விடம் அதிக கடன்­களை பெற்று , நாட்டை கடன் சுமைக்குள் தள்ளி விட்­ட­தாக, தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் இணைந்து சம்­பந்தன் குற்­றம்­சாட்டி வரு­கிறார். ஆனால் வடக்கு, கிழக்கை அபி­வி­ருத்தி செய்­யவே அதிக கடனை பெற்றேன், இப்­போது அந்த அபி­வி­ருத்­தியும் தடைப்­பட்டு விட்­டது, இதனை சுட்­டிக்­காட்ட தவ­றி­விட்­டீர்கள் என்று நேர­டி­யாக சம்­பந்­த­னிடம் கூறி­ய­தா­கவும் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

அதேபோல் மீண்டும் நாம் அதி­கா­ரத்­துக்கு வந்­ததும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை எங்­க­ளுடன் பேசித் தீர்க்க தமிழர் தரப்பு முன்­வர வேண்டும். எங்­க­ளுடன் இணைந்து கூட்­ட­மைப்பு செயற்­பட வேண்டும். வடக்கு- கிழக்கை அபி­வி­ருத்தி செய்ய வேண்டும். அவ்­வாறு செய்­யாமல், தமிழ் மக்­களைத் தவ­றான பாதைக்கு கொண்டு சென்றால், உங்கள் மத்­தியில் வேறு புதிய அர­சியல் சக்­திகள் உரு­வாகும் ஆபத்து ஏற்­படும் என்­ப­தையும் முன்னாள் ஜனா­தி­பதி வலி­யு­றுத்­தி­யுள்ளார். எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­த­னையும் கோத்­தா­பய ராஜபக் ஷவையும் அரு­க­ருகே அமர்த்திப் பேசி, இணக்­கப்­பா­டான சூழ­லுக்கு வரும் வாய்ப்பை ஏற்­ப­டுத்­தினேன் எனவும் ஊடகம் ஒன்­றுக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

இந்த சந்­திப்பு குறித்து எதிர்க்­கட்சி தலைவர் இரா சம்­பந்­த­னிடம் வின­வி­ய­போது அவர் கூறி­ய­தா­வது,

சீன விழாவில் எனக்கு விடுக்­கப்­பட்ட அழைப்பின் பெயரில் நான் கலந்­து­கொண்டேன். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும், கோத்­தா­பய ராஜபக் ஷவும் இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர். நாங்கள் நீண்ட நேர­மாக கலந்­து­ரை­யா­டினோம். குறிப்­பாக முன்னாள் ஜன­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும், முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவும் பல நெருக்­க­டி­யான விட­யங்கள் குறித்து என்­னுடன் கலந்­து­ரை­யா­டினர். அர­சியல் ரீதி­யாக அடுத்த கட்ட செயற்­பா­டுகள் குறித்து என்­னுடன் உரை­யா­டினார். பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ வடக்கின் நிலை­மைகள், முன்­னெ­டுக்க இருந்த செயற்­பா­டுகள் இப்­போது ஏன் தடைப்­பட்­டுள்­ளன என்ற கார­ணி­களை என்­னிடம் முன்­வைத்தார்.

எமக்கு நீண்­ட­கால பிரச்­சினை ஒன்று உள்­ளது என்­பதை நான் வலியுறுத்தியதுடன் எமக்கு அரசியல் அமைப்பு ரீதியான தீர்வு ஒன்று வேண்டும் என்பது கூறினேன். ஆகவே தீர்வுகளை நோக்கிய பயணத்தை முன்னெடுக்கும் புதிய அரசியல் அமைப்பு விடயங்களில் அவர்களின் முழுமையான பங்களிப்பை நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். வேறு பல காரணிகளை நாம் கலந்துடையாடினோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.