Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா­ணுவ நோக்­கங்­க­ளுக்­கா­கவே இந்­தியா மத்­த­ளவை இலக்­கு­வைக்­கி­றது

Featured Replies

இரா­ணுவ நோக்­கங்­க­ளுக்­கா­கவே இந்­தியா மத்­த­ளவை இலக்­கு­வைக்­கி­றது

City-01-BlackGMGPage1Image0009-061a71f5078b265f618c9d3ec8e1e2e4a5038030.jpg

 

(ஆர்.யசி)

வடக்கு, கிழக்கை இந்­தி­யாவின் கட்­டுப்­பாட்டின் கீழ்  கொண்­டு­வ­ரு­வதே நோக்கம் என்­கிறார் வீர­வன்சமத்­தள விமான நிலை­யத்தை இந்­தியா பெற முயற்­சிப்­பது பொரு­ளா­தார நோக்­கங்­க­ளுக்­காக அல்ல. அவர்­களின் இரா­ணுவ நோக்­கங்­களை கருத்தில் கொண்டே மத்­தள விமான நிலை­யத்தை இலக்கு வைக்­கின்­றனர். சீனா, பாகிஸ்தான் உள்­ளிட்ட இந்­தி­யாவின் எதிரி நாடு­க­ளுக்கு தாக்­குதல் நடத்­தக்­கூட வாய்ப்­புள்­ளது என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.  

காங்­கே­சன்­துறை துறை­மு­கத்­தையும், பலாலி விமான நிலை­யத்­தையும், கொழும்பு கிழக்கு துறை­யையும், திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­தையும் இந்­தியா இலக்கு வைத்து வடக்கு கிழக்கை அவர்­களின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வர முயற்­சிக்­கின்­றது. இது தமி­ழீழ நோக்­க­மா­கவே அமைந்­துள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தேசிய சுதந்­திர முன்­னணி கொழும்பில் நடத்­திய மக்கள் சந்­திப்பு மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்

நாடு இன்று மிகவும் பார­தூ­ர­மான கட்­டத்தில் உள்­ளது. நாம் நம்ப முடி­யாத போதிலும் கூட பாரிய வீழ்ச்­சியை காணும் நேரத்தில் நாம் உள்ளோம் என்­பதை மறுக்க முடி­யாது. இப்­போது நாம் நாட்­டினை மீட்­டெ­டுக்கும் போராட்­டத்தை முன்­னெ­டுக்­கா­விட்டால் மேற்­கத்­தேய ஆக்­கி­ர­மிப்­பு­களை தடுக்­கவும் முடி­யாது.

உலகில் பாரிய விமான வளை­யத்தை கொண்ட நாடு எமது நாடு. எம்மை சுற்றி அனைத்து நாடு­களும் தமது விமான சேவை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். ஆகவே விமான வளை­ய­மொன்று எமக்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ள­மையை எமக்­கான பாரிய வள­மாக கருத வேண்டும். இவ்­வா­றான நிலையில் எமக்­கென இரண்டு விமான நிலை­யங்­களை அமைக்க வேண்டும் என்ற தேவை எமக்கு நீண்ட கால­மான திட்­ட­மா­கவே இருந்­தது. ஜே.ஆர். ஆட்சிக் காலத்தில் இருந்து எமக்கு இந்த சிந்­தனை இருந்­துள்­ளது. அதற்­க­மைய எமது ஆட்­சியில் மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் மத்­தள விமான நிலை­யத்தை அமைத்தோம். எனினும் இன்று இந்த விமான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு விற்கும் நிலை­மைக்கு இந்த அர­சாங்கம் வந்­துள்­ளது. இந்­தி­யா­வி­னதும், ஏனைய மேற்கு நாடு­களின் தேவைக்­காக மத்­தள விமான நிலை­யத்தை விற்கும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது.

ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனாவின் வசம் போயுள்­ளது. மத்­தள இந்­தி­யாவின் வச­மா­கி­யுள்­ளது. 70 வீத பங்கை இந்­தி­யாக பெற­வுள்­ளது. இந்த இரண்­டையும் சர்­வ­தே­சத்­துக்கு கொடுக்கும் நோக்கம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஒரு­போதும் இருக்­க­வில்லை. எனினும் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததில் இருந்து எமது அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை குறை­கூறி சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­க­ளுக்கு அமைய இவற்றை விற்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இன்று அவை நிறை­வேற்­றப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக இந்­தி­யாவின் விமான தளங்­க­ளாக மத்­தள விமான நிலை­யத்தை பயன்­ப­டுத்தும் திட்­டமும் உள்­ளது. அவர்­களின் போர் நட­வ­டி­கை­க­ளு­காக இலங்­கையை பயன்­ப­டுத்தும் நோக்­கமும் உள்­ளது. இலங்கை குறித்து இந்­தி­யாவின் பார்­வையும் அவ்­வாறே உள்­ளது. பொரு­ளா­தார நோக்­கங்­க­ளுக்­காக இந்­தி­யா­வுக்கு மத்­தள அவ­சி­ய­மற்­றது. அவுஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து போன்ற நாடுகள் பெற்­றுக்­கொண்டால் வியா­பார நோக்கம் என கூற­மு­டியும். ஆனால் இந்­தியா இதனை இரா­ணுவ நகர்­வு­க­ளுக்­கா­கவே பயன்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றது. இந்­திய உள­வுத்­து­றையின் ஆலோ­ச­னைக்கு அமை­யவே இவை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. மத்­தள விமான நிலையம் அவர்­க­ளுக்கு இரா­ணுவ நோக்­கங்­க­ளுக்காக் மட்­டுமே அவ­சி­யப்­ப­டு­கின்­றதே தவிர பொரு­ளா­தார நோக்­கத்­துக்­காக அல்ல. இது அனை­வ­ருக்கும் தெரிந்­துள்­ளது.

பிர­த­மரே அண்­மையில் நாட்டின் தேசிய பாது­காப்பு குறித்து எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார். நீர்­மூழ்­கிக்­கப்பல் அச்­சு­றுத்தல் உள்­ளதை அறிந்­து­கொண்டு அதனை தவிர்க்க இலங்கை கடற்­ப­டைக்கு நீர்­மூழ்கிக் கப்பல் வழங்க வேண்டும் என கூறு­கின்றார். சீனாவின் நீர்­மூழ்கிக் கப்பல் உளவு பார்க்கும் நட­வ­டிக்­கையில் உள்­ள­தென்­பதை இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் அறிந்­துள்­ளது. அதனால் தான் பிர­தமர் வாயில் இருந்து இந்தக் கருத்து வெளி­வந்­துள்­ளது. ஆகவே இவை சாதா­ரண கார­ணி­க­ளாக கரு­தக்­கூ­டாது. சீனா அம்­பாந்­தோட்­டையில் குடி­கொண்­டுள்­ளது. இந்­தியா மத்­த­ளையில் குடி­கொண்­டுள்­ளது. இந்த இரண்டு நாடு­களும் பரம்­பரை எதிரி நாடுகள். இவர்கள் இரு­வ­ரையும் எமது நாட்­டுக்குள் வைத்­தி­ருப்­பதன் விளை­வு­களை நாமே அனு­ப­விக்க வேண்டும். இந்­தியா தீபெத் முரண்­பா­டுகள், இந்­திய சீன முரண்­பா­டுகள், இந்­திய பாகிஸ்தான் முரண்­பா­டுகள் என அனைத்­துப்­பக்­கமும் இந்­தியா ஏனைய நாடு­க­ளுடன் முரண்­படும் நிலையில் அவற்­றுக்கு இந்­தியா தயா­ராகும் வகையில் தான் மத்­த­ளவை தக்­க­வைக்க முயற்­சித்து வரு­கின்­றது. ஆயுத தாக்­கு­தல்­களை முன்­னெ­டுக்க அவர்கள் தயார் என்­பதை இந்­தியா மறை­மு­க­மாக தெரி­வித்து வரு­கின்­றது.

காங்­கே­சன்­துறை துறை­மு­கத்­தையும் இந்­தியா கேட்­கின்­றது, பலாலி விமான நிலை­யத்­தையும் இந்­தியா கேட்­கின்­றது, கொழும்பு கிழக்கு துறை­யையும் இந்­தியா கேட்­கின்­றது. திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­தையும் இந்­தியா கேட்­கின்­றது. பலாலி சென்னை விமான சேவை, மன்­னார்-­ரா­மேஸ்­வரம் கடல் போக்­கு­வ­ரத்து ஆரம்­பிக்­க­ப­ட­வுள்­ளது. ஆகவே இந்­திய நகர்­வு­களை எமது அர­சங்கம் இட­ம­ளித்து வேடிக்கை பார்த்து வரு­கின்­றது. இந்த நகர்­வுகள் மூல­மாக நாம் எதிர்­கொள்ள வேண்­டிய அச்­சு­றுத்தல் கற்­ப­னையில் எண்­ணிப்­பார்க்க முடி­யாத ஒன்­றாகும். வடக்கு கிழக்கு இந்­தி­யாவின் கால­னித்­துவ பிர­தே­ச­மாக மாற்றம் பெரும். அதன் மூல­மாக தமி­ழீழ கோட்­பாடு மீண்டும் பல­ம­டையும். யுத்தம் ஒன்று இடம்­பெற்­றது யுத்த குற்றம் இடம்­பெற்­றது ஆகவே சர்­வ­தேச தலை­யீட்­டுடன் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு வழங்­கப்­பட வேண்டும். அந்த தீர்வு தனி இரா­ஜிய கொள்­கை­யாக அமைய வேண்டும். ஆகவே தனி ஈழம் தாருங்கள் என்ற கோரிக்கை பல­மாக முன்­னெ­டுக்­கப்­படும். இதுவே இந்­தி­யாவின் தேவை­யாகும், இதன் மூல­மாக வடக்கு கிழக்கை இந்­தி­யாவின் கால­னித்­துவ பகு­தி­யாக மாற்ற வேண்டும் என்ற நோக்கம் உள்­ளது.

இந்த அர­சாங்கம் நடக்­க­வுள்ள சூழ்ச்­சியை தெரிந்­துள்­ளதா? வடக்கில் இருந்து இரா­ணுவ முகாம்கள் நீக்­கப்­ப­டு­கின்­றன. வடக்கின் பாது­காப்பு பல­வீ­னப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இதன் மூல­மாக இந்­தி­யாவின் உளவுத்துறையின் உதவியுடன் இந்தியாவின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும். ஆகவே இதனை நாம் தடுக்க பலமான தாக்குதலை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும். மக்கள் ஒன்றிணைந்து நாட்டினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அமைதியாக இருந்தால் இறுதியில் மிகவும் மோசமான விளைவுகளை அனுபவிக்க வேண்டிய நிலைமை உருவாகும். இந்திய இலங்கை உடன்படிக்கையை விட மோசமானது இந்த உடன்படிக்கை. 13 ஆம் திருத்தத்துக்கு அப்பாலான அதிகார பரவலாக்கலை விடவும் மோசமான உடன்படிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இந்திய ஆக்கிரமிப்பை முழுமையாக தோற்கடிக்கும் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.