Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு தேர்­த­லுக்கு முன்னர் சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பு வரும் : நிபுணர் குழு­வுக்கு சுமந்­திரன் எம்.பி. அழுத்தம்; கூட்டு எதிர்க்­கட்சி குற்­றச்­சாட்டு

Featured Replies

வடக்கு தேர்­த­லுக்கு முன்னர் சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பு வரும் : நிபுணர் குழு­வுக்கு சுமந்­திரன் எம்.பி. அழுத்தம்; கூட்டு எதிர்க்­கட்சி குற்­றச்­சாட்டு

city-01GMGPage1Image0024-f1415f681e36fd1c7e2a9f325f897c603ad2f5d9.jpg

 

(எம்.சி.நஜி­முதீன்)

வடக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்கு முன்னர் சமஷ்டி ஆட்சி முறை­யைக்­கொண்ட புதிய அர­சி­ ய­ல­மைப்பை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்

­னெ­டுத்­துள்­ளது. அவ்­வி­ட­யங்­களை விரை­வு­ப­டுத்­து­மாறு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் சர்­வ­தே­சமும் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றன.

எனவே அது­நாட்­டுக்கு மிகவும் ஆபத்­தான சூழ்­நி­லை­யாகும். எனினும் சமஷ்டி முறை­யி­லான அர­சி­ய­ல­மைப்பை தடுப்­ப­தற்­காக கூட்டு எதிர்க்­கட்சி பரந்­து­பட்ட போராட்­டங்­களைத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அதில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அழுத்­க­மகே தெரி­வித்தர்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பாடு செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொரளை என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

 அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்பை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கி­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக அர­சாங்கம் மோச­டி­களை சட்­ட­மாக்­கு­வ­தற்கு எதிர்­பார்க்­கி­றது. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கத்­தி­லுள்ள இரு தரப்பும் அர­சி­ய­ல­மைப்பு குறித்து இரண்டு வகை­யி­லான அபிப்­பி­ரா­யங்­களை முன்­வைத்­தி­ருந்­தன.

புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­வ­தாக ஐக்­கிய தேசியக் கட்­சிய கூறி­யது. ஆனால் அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் முன்­வைப்­ப­தா­கவும் அது குறித்து மாறு­பட்ட கருத்­துகள் எழு­மாயின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­து­வ­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் தெரி­வித்­தி­ருந்தார்.

எனவே 2016 ஆண்டு மார்ச் மாதம் ஒன்­பதாம் திகதி அர­சி­ய­ல­மைப்பு சபை­யினால் பிர­தமர் தலை­மையில் 21 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்­கப்­பட்­டது. அக்­கு­ழுவில் கூட்டு எதிர்க்­கட்சி சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன மற்றும் பிர­சன்ன ரண­துங்­கவும் அங்கம் வகித்­தனர். அக்­கு­ழு­வா­னது பின்னர் அர­சி­ய­ல­மைப்பு குறித்து நிபு­ணத்­துவம் வாய்ந்த பத்து பேர் கொண்ட குழுவை நிய­மித்­தி­ருந்­தது.

அந்த பத்து பேர் கொண்ட குழுவே அர­சி­ய­ல­மைப்பு குறித்து தொடர்ந்து பேச்­சு­வார்த்தை நடத்தி வந்­தது. அதற்­கி­ணங்க அக்­குழு கடந்த வாரம் பிர­தமர் தல­மை­யி­லான 21 பேர் கொண்ட குழு­விடம் புதிய அர­ய­சி­ல­மைப்பு சட்­ட­மூ­லத்தை முன்­வைத்­துள்­ளது. அது நூற்று இரு­பத்­தைந்து பக்­கங்­க­ளைக்­கொண்­ட­தாகும். எனினும் எழுத்­து­மூ­மான அந்த ஆவ­ணத்தை முன்­வைக்­கும்­போதே நிபுணர் குழு­வுக்குள் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. அக்­கு­ழுவில் பத்துப் பேர் அங்கம் வகிக்­கின்ற போதிலும் ஆறு பேரே கைச்­சாத்­திட்­டுள்­ளனர். அத்­துடன் அதில் ஒரு உறுப்­பினர் கடந்த ஆறு மாத கால­மாக வெளி­நாட்டில் உள்ளார். எனினும் அவரின் கையொப்­பமும் இடப்­பட்­டுள்­ளது.

அந்த நிபுணர் குழு­வுக்குள் பிளவு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் தெளி­வூட்­டு­மாறும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன மற்றும் பிர­சன்ன ரண­துங்க ஆகியோர் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தனர். நிபுணர் குழு பேச்­சு­வார்த்தை நடத்­தாத விட­யங்­களும் புதிய அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாக அக்­கு­ழுவில் அங்கம் வகிக்கும் பேரா­சி­ரியர் கமீனா குண­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

அவ்­வா­றான விட­யங்­களை உள்­ள­டக்­கு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சுமந்­திரன் மற்றும் ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன ஆகியோர் அழுத்தம் வழங்­கி­யுள்­ளனர். எனவே அவ்­வி­ரு­வரும் அழுத்தம் வழங்­கு­வதைத் தடுக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வி்டம் வேண்­டிக்­கொண்­ட­தா­கவும் பேரா­சி­ரியர் கமீனா குண­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் வட மாகா­ணத்தைப் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பினர் என்­ப­துடன் அவர் சமஷ்டி ஆட்­சியை கோரும் உறுப்­பி­ன­ரு­மாவார். ஜயம்­பதி விக்­ர­ம­ரட்ன அரச சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து துணிந்து பேசு­பவர். எனவே அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூ­ல­மா­னது அலரி மாளி­கையில் செயற்­படும் குழு ஒன்­றி­னா­லேயே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பில் முதல் அம்­ச­மாக “ஏக்­கிய ராஜ்ய - ஒரு­மித்த நாடு” எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது சம்­பந்­த­மாக ஏற்­க­னவே பிரச்­சினை ஏற்­பட்­டி­ருந்­தது. சிங்­கள மக்கள் மத்­தியில் ஒரு கருத்­தையும் தமிழ் மக்கள் மத்­தியில் மற்­றொரு கருத்­தையும் அர­சாங்கம் குறிப்­பி­டு­கி­றது. மேலும் மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரத்தை பர­வ­லாக்கம் செய்­வது குறித்தும் புதிய அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூ­லத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன் மூலம் சமஷ்டி ஆட்சி முறை­மை­யையே கொண்டு வரு­வ­தற்கு எதிர்­பார்க்­கின்­றனர். ஆகவே சமஷ்டி ஆட்­சியை அர­சாங்கம் ஏற்­ப­டுத்த முனை­வது உறு­தி­யா­கி­யுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூ­லத்தின் 93 (சி) பிரிவில் ஜனா­தி­ப­தி­யா­னவர் உள­வியல் ரீதி­யி­லான பாதிப்­புக்கு உட்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­ற­தென்றால் சபா­நா­யகர், எதிர்க்­கட்சித் தலைவர் மற்றும் பிர­தமர் ஆகியோர் இணைந்து ஜனா­தி­ப­தியை நீக்க முடியும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அது குறித்து வைத்­தி­யர்­களின் ஆலோ­சனை அவ­சி­ய­மில்லை என்­ப­தையே குறிக்­கி­றது.

அத்­துடன் 107 (2) பிரிவில் பிர­ஜா­வு­ரிமை குறித்து குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதற்­கி­ணங்க எவ­ருக்­கா­வது இரட்டைப் பிரா­ஜா­வு­ரிமை இருக்­கு­மாயின் அவர் தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மாயின் தேர்­த­லுக்கு 12 மாதங்­க­ளுக்கு முன்னர் இரட்டைப் பிர­ஜா­வு­ரி­மையை நீக்­கிக்­கொள்ள வேண்டும். குறித்த ஏற்­பாடு யாருக்­காக கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றது என்­பது தெளி­வா­கி­றது.

இவ்­வா­றா­ன­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்கும் போது புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்டு வந்து அத­னூ­டாக சமஷ்டி ஆட்­சியை ஏற்­ப­டுத்த எத்­த­ணிக்­கின்­றனர். அத்­துடன் சமஷ்­டியை ஏற்­ப­டுத்த முனை­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இடை­யூறு ஏற்­ப­டுத்தின் அவ­ருக்கு உள­வியல் ரீதி­யி­லான பாதிப்பு உள்­ள­தாகக் குறிப்­பிட்டு பத­வி­யி­லி­ருந்து நீக்­குவர். பின்னர் மக்­களின் ஆத­ர­வுடன் இவ்­வா­றான செயற்­பா­டு­களை எதிர்க்க முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ உட்­பட எவ­ரா­வது முன்­வ­ரு­வார்­க­ளாயின் அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாத நிலையும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூ­லத்தில் தேசிய பொலிஸ் மற்றும் மாகாண பொலிஸ் என­பன குறித்தும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. பொலிஸ் ஆணைக்­கு­ழுவும் இரண்­டாக அமை­ய­வுள்­ளது. முத­ல­மைச்­சரின் கீழ் வரும் பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் தல­மையின் கீழ் மாகா­ணங்­களின் பொலிஸ் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ளனர்.

வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் விரைவில் நிறை­வ­டை­ய­வுள்­ளது. வடக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்குச் செல்­வ­தற்கு முன்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­மாறு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­கி­றது. அல்­லா­வி­டத்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால் மக்கள் மத்­தியில் செல்ல முடி­யாத நிலை ஏற்­படும். ஆகவே உட­ன­டி­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­மாறு தேசிய மற்றும் சர்­வ­தேச மட்­டத்தில் அர­சாங்­கத்தின் மீது அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கி­றது.

இது நாட்­டுக்கு மிகவும் ஆபத்­தான நிலை­வ­ர­மாகும். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க 2020 ஆம் ஆண்டில் ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கே இவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கிறார். அதற்­கா­கத்தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சிறையில் அடைப்­ப­துடன் ஏனைய ராஜபக் ஷகள் முன்­வ­ரு­வ­தையும் தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்­கான விட­யங்கள் குறித்து நாம் தற்­போது பேச்­சு­வார்த்தை நடத்தி வருகிறோம். அத்துடன் தற்போது குறித்த அரசியலமைப்பு சட்டமூலத்தை முன்வைத்துள்ளபோதிலும் பாராளுமன்றில் நிறைவேற்ற எத்தணிக்கும்போது இன்னும் பாரதூரமான விடங்கள் சிலவற்றை திருத்தம் மூலம் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பர். ஆகவே அது சம்பந்தமாகவும் நாம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம். கூட்டு எதிர்க்ட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி குழுக்கள் அமைத்துள்ளோம்.

அரசாங்கம் நாட்டுக்குப் பாதாகமான அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கு முனையுமாக இருந்தால் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பாராமன்றத்திற்கு வெளியில் மக்களை இணைத்துக்கொண்டு போராட்டங்களிலும் ஈடுபடும். அது தொடர்பில் சகல கட்சிகளையும் இணைத்துகொண்டு திட்டமிட்ட எதிர்ப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்தை வீட்டுக்கனுப்புவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.