Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித எச்சங்கள் அகழ்வுப் பணியில் பௌத்த பிக்குகள்

Featured Replies

மனித எச்சங்கள் அகழ்வுப் பணியில் பௌத்த பிக்குகள்

 

 

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 42 ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் சதொச பகுதியில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடுகளின் அகழ்வுப் பணியில் கோமகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்து இவ் அகழ்வுப் பணியில்  இன்று  ஈடுபட்டனர்.

DSC_0529.jpg

மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஷ தலைமையில் இவ் அகழ்வுப் பணியானது தொடர்ந்து வருகிகின்றபோதும்,

இன்றைய பணியானது சட்ட வைத்திய அதிகாரி ராஐபக்ஷ விடுமுறையில் சென்றுள்ளமையால் இவருக்கு பதிலாக குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி அஜித் திஸநாயக்க தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து இன்றைய அகழ்வுப் பணி தொடர்ந்தது.

DSC_0528.jpg

இது வரைக்கும் 32 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையிலும் குழிக்குள் அடையாளமிடப்பட்டிருக்கும் 52 எலும்புக்கூடுகள் மீட்டெடுக்கும் பணி நிலையிலேயே இவ் பணி இன்றைய தினம் இடம்பெற்றது.

அத்துடன் அடையாளமிடப்பட்டிருந்த இடத்திலும் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் நோக்கி மிகவும் பக்குவமான முறையில் மணல் அகழ்வும் இடம்பெற்றறமை குறிப்பிடத்தக்கது.

DSC_0527.jpg

http://www.virakesari.lk/article/37304

  • தொடங்கியவர்

மனித  எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள்

 

 
 

மன்னாரில் மீட்கப்பட்டு வரும் மனித  எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள் காணப்படுவதாக நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் 'சதொச'விற்பனை நிலைய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (26) 42 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மனித புதைகுழி அகழ்வின் போது, 

மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாக இருப்பதாக  அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

எனினும் தற்போது வரை மீட்கப்பட்டுள்ள எந்தவொரு மனித எலும்புக்கூடுகளிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 5 சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதே வேளை குறித்த புதைகுழியில் காணப்பட்ட எலும்புக்கூடுகளை பொறுத்த மட்டில், உடல்கள் ஒழுங்கற்ற வகையில் அவசர அவசரமாக புதைக்கப்பட்டுள்ளமை ஆய்வுகள் மூலம்   கண்டறியப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சடலங்கள் எக் காலப்பகுதியில் புதைக்கப்பட்டது என்பது தொடர்பில் இதுவரையில்  கண்டரியப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இவர்களுடன் இணைந்து கோமகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்து குறித்த அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/37326

  • தொடங்கியவர்

மன்னாரில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள் – 5 சிறுபிள்ளைகளினது (வீடியோ இணைப்பு )

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (26) 42 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மனித புதைகுழி அகழ்வின் போது, மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாக இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

எனினும் தற்போது வரை மீட்கப்பட்டுள்ள எந்தவொரு மனித எலும்புக்கூடுகளிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். -அகழ்வு பணிகளை தொடர்ந்து இன்று(26) அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். -மேலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 5 சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-இதே வேளை குறித்த புதைகுழியில் காணப்பட்ட எலும்புக்கூடுகளை பொறுத்த மட்டில், உடல்கள் ஒழுங்கற்ற வகையில் அவசர அவசரமாக புதைக்கப்பட்டுள்ளமை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சடலங்கள் எக் காலப்பகுதியில் புதைக்கப்பட்டது என்பது தொடர்பில் இதுவரையில் கண்டரியப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று வியாழக்கிழமை (26) 42 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய அகழ்வு பணிகளின் போது கோமகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்து அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் நீதவான ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஸ விடுமுறையில் சென்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி அஜித் திஸநாயக்க தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து கோமகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்து குறித்த அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வரைக்கும் 32 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, அடையாளம் காணப்பட்டுள்ள 52 மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_7003.jpg

1-5.jpg2-3-800x458.jpg3-1.jpg4-2.jpgIMG_7002-1.jpgMANNAR-26-07-2018-1.jpg

 

 

http://globaltamilnews.net/2018/89393/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.