Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலங்கு வானூர்தி பயணச் செலவை வெளியிட்ட விக்கி

Featured Replies

உலங்கு வானூர்தி பயணச் செலவை வெளியிட்ட விக்கி 

 

 

வடக்கு மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் உலங்கு வானூர்தி மூலமாக 50 தடவைகள் சுமார்  11 இலட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபா செலவில் சென்று வந்துள்ளதாக தெரிவித்தார்.

vikkines-2-600x382.jpg

வடக்கு மாகாண சபையின் 128 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவை செயலத்கதில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது. 

இதன்போது வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வடமாகாண முதலமைச்சர் உலங்கு வானூர்த்தி மூலமான பயண செலவு தொடர்பான விபரங்களை வாய் மூலமான வினாவாக கேட்டிருந்தார். 

இதற்கு பதிலளிக்கையிலேயே வடமாகாண முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா முதலமைச்சரிடம் கேட்ட கேள்வி

வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் அமைச்சின் செலவில் வானூர்தியில் சென்றிருக்கின்றீர்களா? அவ்வாறு சென்று வந்திருப்பின் இதுவரை எத்தினை தடவை சென்றுள்ளீர்கள்? அவ்வாறு சென்றுவரும்போது உதவியாளர்களையும் அழைத்து சென்றிருக்கின்றீர்களா? 

அவ்வாறு சென்றிருந்தால் அவர்களுடைய பெயர் விபரங்களை அவைக்கு சமர்பிக்கவும். இப் போக்குவரத்திற்காக அமைச்சினால் செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு? 

முதலமைச்சருக்கும் அவருடைய உதவியாளருக்கும் தனித்தினியே எவ்வளவு? அவ்வாறு செலவு செய்யப்பட்ட நிதி முதலமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டதா? அல்லது எந்த நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெறப்பட்டது. இதற்கான அங்கீகாரம் யாரால் வழங்கப்பட்டது. அங்கீகாரத்தின் கடிதப் பிரதியை சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?  எனக் கேட்டிருந்தார்.

குறித்த கேள்விக்கு வடமாகாண முதலமைச்சரின் பதில்

முதலமைச்சரான காலத்தில் இருந்து இன்றுவரை 50 தடவைகள் சென்றுள்ளேன். இதன்போது  உதவியாளர்களை அழைத்துச் செல்லவில்லை. பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை மட்டும் அழைத்துச் சென்றுள்ளேன். 

போக்குவரத்திற்காக அமைச்சினால் செய்யப்பட்ட செலவு முதலமைச்சர் செலவு 11 இலட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபா, பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு 6 இலட்சத்து 79 ஆயிரத்து 500. மீண்டு வரும் செலவின் கீழ் பிரயாணத்திற்கான செலவின் கீழ் வழங்கப்பட்டது. இதற்கான அங்கீகாரம் முதலமைச்சரின் செயலாளரினால் பிரதம கணக்கீட்டு அதிகாரி ஊடாக ஆளுநரின் அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் விரும்பினால் குறித்த கடிதத்தை எமது அலுவலகத்தில் பார்வையிடலாம். என பதில். வழங்கினார்.

http://www.virakesari.lk/article/37344

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.