Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலி

Featured Replies

யாழில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலி

 

 
 

யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலியாகியுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுங்குளம் கொழும்புத்துறைப் பகுதியில் இருவர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்புத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/37429

  • தொடங்கியவர்

யாழில் சற்றுமுன் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக பலி.. ஒருவர் கவலைக்கிடம்

 

 

யாழ்ப்பாணம் - அரியாலை, நெலுக்குளம் புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த பூம்புகார், நாவற்குழி மற்றும் அரியாலை பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் தலைக்கவசமும் அணிந்திருக்கவில்லை.

மேலும், புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்கு போடப்பட்டு இருந்த போதும், அங்கு பாதுகாப்பு வேலி இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சமிக்ஞை விளக்கு போடப்பட்டு இருந்த போதும், பாதுகாப்பு வேலி இல்லாத காரணத்தினால் இளைஞர்கள் கடவையை கடக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது வந்த கடுகதி புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/security/01/189263?ref=imp-news

  • தொடங்கியவர்

யாழ் அரியாலை நெடுங்குளம் புகையிரதக் கடவையில், 3 இளைஞர்கள் பலி…..

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.

அரியாலை புகையிரத விபத்தில் படுகாயமடைந்த சீ.சஞ்சீவன் எனும் இளைஞனும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

 

Moter-bic-Acc1-800x600.jpg

யாழ்ப்பாணம் அரியாலை நெடுங்குளம் புகையிரத கடவையில் ஏற்பட்ட புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்து உள்ளதுடன் ஒருவர் கவலைக்கு இடமான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அரியாலை பூம்புகார் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சந்திரகுமார்  மற்றும் அதே பகுதியை சேர்ந்த கிருஷானந் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட தொடர்ந்துடன் இன்று சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று இளைஞர்கள் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

குறித்த புகையிரத கடவையில் பாதுகாப்பு கடவைகள் இல்லாத போதிலும் சமிஞ்சை விளக்குகள் புகையிரதம் வருவதற்கான சமிஞ்சை ஒலியை ஒலித்துக்கொண்டு இருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாது குறித்த இளைஞர்கள் கடவையை கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டது என காவற்துறையின்  ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

http://globaltamilnews.net/2018/89678/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.