Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்­ற­ம­டை­யாத -கோத்­தா­வின் கொள்கை!!

Featured Replies

மாற்­ற­ம­டை­யாத -கோத்­தா­வின் கொள்கை!!

 

 

 

அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் போட்­டி­யி­டும் நோக்­கத்­தோடு கோத்­த­பாய ராஜ­பக்ச தனது காய் நகர்த்­தல்­க­ளைத் தீவி­ர­மாக முன்­னெ­டுத்து வரு­கின்­றார். வேட்­பா­ளர் யார் என்­பதை மகிந்த ராஜ­பக்ச இன்­ன­மும் தீர்­மா­னிக்­க ­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டா­லும் தன்னை வேட்­பா­ளர் தெரி­வில் இருந்து தள்­ளி­வைக்க முடி­யாது என்­கிற நிலையை நோக்கி கோத்­த­பாய ராஜ­பக்ச அடி­மேல் அடி வைத்து முன்­னே­றி­வ­ரு­கின்­றார்.

என்­ன­தான் சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தத்­தின் குர­லா­கத் தன்னை அவர் நிலை­நி­றுத்­திக்­கொண்­டா­லும் சிறு­பான்மை மக்­கள் அனை­வ­ரும் ஒன்­றி­ணை­யும்­போது கடந்த தேர்­த­லில் தனது தமை­ய­னுக்கு நடந்­த­தைப் போன்றே தனது வெற்றி வாய்ப்­பும் கேள்­விக்­கு­றி­யா­கி­வி­டும் என்­ப­தை­யும் புரிந்து வைத்­தி­ருக்­கும் கோத்­த­பாய, அதி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­காக சிறு­பான்­மை­யி­ன­ரை­யும் சமா­ளித்து வைக்­க­வும் முற்­ப­டு­கின்­றார். அத­னா­லேயே, ஒரு காலத்­தில் தமிழ்ப் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் என்­றாலே சீறிச் சினந்து எரிந்து விழுந்­த­வர், தமிழ்ப் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைப் பயங்­க­ர­வா­தி­கள் என்­ற­வர் இப்­போது தமிழ்ப் பத்­தி­ரி­கை­க­ளின் ஆசி­ரி­யர்­களை அழைத்­துப் பேசு­கின்­றார்.

அத்­த­கைய ஒரு சந்­திப்பு நேற்­று­முன்­தி­னம் கொழும்பு புறக்­கோட்­டை­யில் உள்ள அவ­ரது அலு­வ­ல­கத்­தில் இடம்­பெற்­றது. அழைக்­கப்­பட்ட பத்­தி­ரி­கை­க­ளின் ஆசி­ரி­யர்­கள் மத்­தி­யில் அவர் பேசி­னார். சிறு­பான்­மை­யி­ன­ரைச் சமா­ளித்து வைக்­க­வேண்­டும் என்­கிற நோக்­கம் அவ­ருக்கு இருந்­தா­லும் சிங்­கள, பௌத்த தேசிய வாதத்தை அதி­ருப்­தி­ய­டை­யக் கூ­டிய எந்­த­வொரு விட­யத்­தை­யும் அவர் அங்கு மறந்­தும் உச்­ச­ரிக்­க­வில்லை. அவ­ரது கருத்­துக்­க­ளின்­படி மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சி­யில் பின்­பற்­றப்­பட்ட கொள்­கையே அவர் அரச தலை­வ­ரா­னா­லும் பின்­பற்­றப்­ப­டும்.

 
 

இலங்­கை­யில் இருப்­பது பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னையே தவிர இனப் பிரச்­சினை இல்லை என்­பது மகிந்த ஆட்­சி­யி­லேயே பின்­பற்­றப்­பட்ட கொள்கை. பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை வேக­மாக ஏற்­ப­டுத்­தி­விட்­டால் இனப் பிரச்­சினை, உரி­மைப் போராட்­டம் எல்­லாம் அதற்­குள் கரைந்து காணா­மற்­போய்­வி­டும், சிறந்த வாழ்க்­கைத் தரம் கிடைக்­கு­மா­னால் உல­க­ம­ய­மாக்­க­லுக்­குள் சிக்­குண்டு இன, மத அடை­யா­ளங்­க­ளைச் சிறு­பான்மை இனங்­கள் கைவிட்­டுப் பெரும்­பான்­மை­யோடு கலந்­து­வி­டும் என்­பதே இந்­தக் கொள்­கை­யின் அடிப்­படை.

இத­னா­லேயே எவ்­வ­ளவு கொடூ­ர­மாக என்­றா­லும் போரை முடித்­து­விட்டு பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை வேக­மாக முன்­னெ­டுக்க மகிந்த முற்­பட்­டார்.

இதன் தொடர்ச்­சி­யா­கவே தனது ஆட்­சி­யும் இருக்­கும் என்­ப­தைக் கோத்­த­பாய விளக்­கி­னார். தான் அரச தலை­வ­ரா­னால் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி குறித்தே முத­லில் கவ­னம் செலுத்­து­வேன் என்­றார் அவர். பொரு­ளா­தார அபி­வி­ருத்தி இருந்­து­விட்­டால் ஏனைய அபி­வி­ருத்­தி­கள் எல்­லாம் தானா­கவே வசப்­ப­டும் என்­றும் அத்­த­கைய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி இல்­லா­தி­ருப்­ப­தா­லேயே மக்­கள் விரக்­தி­ய­டைந்­தி­ருக்­கி­றார் கள் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

நாட்­டின் ஒட்­டு­மொத்­தப் பிரச்­சி­னைக்­கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியே தீர்வு என்­று­அ­வர் கரு­து­வ­தன் கார­ணத்­தால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு, புதிய அர­ச­மைப்பு போன்ற விட­யங்­க­ளில் அவ­ரது நிலைப்­பாடு தமி­ழர்­க­ளுக்கு எதிர் மாறா­ன­தாக, பாத­க­மா­ன­தாக அமைந்­தி­ருந்­தமை ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரிய ஒன்­றல்ல. அத­னால், மாகா­ணங்­க­ளுக்கு காணி, பொலிஸ் அதி­கா­ரங்­கள் வழங்­கப்­ப­டு­வ­தற்கு அவர் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­தார். அதற்­கும் மேலா­கப் புதிய அர­ச­மைப்பை அடி­யோடு நிரா­க­ரித்­தார். அது ராஜ­பக்­சக்­களை இலக்கு வைத்­துக் கொண்டு வரப்­ப­டு­கின்­றதே தவிர பன்­ முகப்­ப­டுத்­தப்­பட்ட அள­வில் அனைத்து மக்­க­ளுக்­கும் எல்லா உரி­மை­க­ளும் கிடைக்­கும் வகை­யில் அமை­ய­வில்லை என்­றார். இவை­யெல்­லாம் ஒரு விட­யத்­தைத் திட்­ட­வட்­ட­மா­கக் கூறு­கின்­றன.

அது, கோத்­த­பாய என்­ன­தான் சிறு­பான்மை மக்­களை சமா­ளிக்க முயன்­றா­லும் அவ­ரது அடிப்­ப­டைக் கொள்­கை­யில் இருந்து அவர் வில­கப்­போ­வ­தில்லை. சிங்­கள, பௌத்த தேசி­யத்­தின் வெளிப்­ப­டை­யான சாட்­சி­யா­கவே அவர் இயங்­கப்­போ­கி­றார். அவர் ஆட்­சிக்கு வந்­தால், முன்­னர் பொது­பல சேனா கூறி­ய­தைப் போன்று தமி­ழர்­க­ளும் முஸ்­லிம்­க­ளும் விரும்­பி­னால் இங்கே வாழ்ந்­து­விட்­டுப் போக­லாம் தென்­னந்­தோட்­டத்­துக்கு நடுவே இருக்­கும் ஊடு­ப­யிர் மாதிரி. கோத்­த­பாய தமி­ழர்­க­ளின் தெரி­வாக இருப்­பாரா என்­ப­தைத் தீர்­மா­னிப்­ப­தற்கு இந்த மாதிரி ஒன்றே போது­மா­னது.

http://newuthayan.com/story/12/மாற்­ற­ம­டை­யாத-கோத்­தா­வின்-கொள்கை.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.