Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Green Brigade - பச்சைப் படையணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் எப்போது நல்லது நினைகின்றனோ அன்றைக்கே மீண்டும் பசுமையான உலகம்

அது எப்படிங்க முடியும் ?

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கான நோபல் பரிசு

20071012122533071012gore203.jpg

அமைதிக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர், அல்கோர் அவர்களுக்கும் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவுக்கும் வழங்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடுவதற்காக இவர்களால் போடப்பட்ட அத்திவாரத்துக்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாக, நோர்வேயின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

புவி வெப்பமடைதல் தொடர்பில் அல்கோர் அவர்கள் தயாரித்த விவரணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த விவகாரத்தில் உலக மட்டத்திலான புரிதலுக்காக மிகவும் அதிகமாகப் பங்காற்றியவர் இவரே என்றும் அந்த நோர்வே நாட்டுக் குழு கூறியுள்ளது.

இந்த விருதைப் பகிர்ந்து கொள்வதில் தான் பெருமையடைவதாக அல்கோர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பால் தாம் மிகுந்த பெருமிதம் கொள்வதாக ஐ.நாவின் காலநிலை மாற்றம் குறித்த குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

bbc.tamil.com

------------

புவி வெப்பமுறுதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைதல் மாற்றமடைதல்.. காலநிலை மாற்றங்கள் தொடர்பில் மக்களையும் நாடுகளையும் விழிப்புணர்வூட்டியதற்காக அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்தளித்ததை.. இதே நோக்கோடு யாழ் களத்தில் ஆரம்பிக்கப்பட்ட எமது கிறீன் பிரிகேட் - பச்சைப் படையணி வாழ்த்தி வரவேற்பதுடன் நோபல் பரிசுத் தெரிவுக் குழுவுக்கு நன்றிகளையும் சொல்லிக் கொள்கிறது.

We sincerely thank Nobel Prize committee for awarding "Nobel Prize for Peace" to the activists who worked on acknowledging people and countries regarding to Global warming, environmental pollution and climate changes. - Green Brigade.

Edited by nedukkalapoovan

  • 4 weeks later...

நெடுக்காலபோவான்,

பல பயனுள்ள தகவல்களை வழங்கி இருக்கிறீங்கள்.

நான் ரெண்டு வாரங்களிற்கு முன் இதுபற்றிய ஒரு டொக்கிமெண்டரி நிகழ்ச்சியை ரீவியில் பார்த்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் காட்டப்பட்ட அந்த விபரணச்சித்திரத்தை பார்த்தபோது எவ்வளவு மோசமான நிலையில் தற்போது நாம் வாழும் பூமியின் சமநிலை சென்றுள்ளது என்று அறியக்கூடியதாக இருந்தது.

மழை பெய்ய வேண்டிய இடங்களில மழை பெய்யுது இல்லை. தேவையில்லாத இடங்களில அளவுக்கு மிஞ்சி பெய்யுது, கடல் மட்டம் உயர்ந்துகொண்டு போகிது, வெப்பநிலை கூடிக்கொண்டு போகிது. இப்படி ஏராளம்.

நான் முன்பு இதுபற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை. ஆனால், இந்த ரீவி நிகழ்ச்சியை பார்த்தபின் ஓரளவு மாற்றங்களை எனது நடைமுறை வாழ்வில் ஏற்படுத்தி உள்ளேன்.

அதாவது இப்போதைக்கு வீட்டில் எனேர்ஜியை சேவ் பண்ணுவது. தேவையில்லாமல் மின்சாரத்தை விரயம் செய்வது இல்லை. கண்டபடி லைட்டுகளை போட்டு எரியவிடுவதில்லை. ஏதோ என்னால் முடியுமானதை பூமித்தாயிற்காக செய்கின்றேன்.

மரம் நடுதல் நல்ல திட்டம். இப்போதைக்கு இந்த வசதி எனக்கு இல்லை. ஆனால், விரைவில் வசதி கிடைக்கும்போது மரம் நடுகைத்திட்டத்தில் ஈடுபடவேண்டும்.

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

screenshot.jpg

29 மார்ச் 2008 ஆகிய இன்று பூமி மணித்தியால நாள். இந்த நாளில் இரவு 8:00 மணி தொடக்கம் இரவு 9:00 வரையான ஒரு மணித்தியால காலப்பகுதியில் நீங்கள் வாழுமிடமெங்கும் இரவு விளக்குகளை நிறுத்தி சக்தியை சேமிக்க வேண்டிய அவசியத்தை உலகுக்கு உணர்த்தும் தினமாகும்.

மின் சக்தி உட்பட்ட சக்திகளை உருவாக்க பெருமளவு சுவட்டு எரிபொருட்கள் (உயிர்த்திணிவு காபன் சார் எரிபொருட்கள்) நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதால் அதிகளவு காபனீரொக்சைட் வாயு வளிமண்டலத்துள் சேர்க்கப்படுகிறது. இதனால் உலக வெப்பமுறுதல் விளைவுகள் உட்பட கடந்த தசாப்த காலம் பல புவிக் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

எனவே சக்திப் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் வெளியிடப்படும் காபனீரொக்சைட்டின் அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி மீள முடியா வளங்களுள் அடங்கும் சுவட்டு எரிபொருட்களின் பாவனை அளவையும் குறைத்துக் கொள்ள முடியும் என்பதை உலகெங்கும் வாழும் மக்களுக்கு உணர்த்த இந்த பூமிக்கு ஒரு மணித்தியாலம் என்பது இன்றைய நாளில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாகவே இன்றை கூகிள் முகப்பு கறுப்பு நிறப்பின்னணியில் வெளிப்படுகிறது. வழமையாக அது வெண்ணிறப் பின்னணியில் வெளிப்படுவதாகும்.

http://kuruvikal.blogspot.com/2008/03/eart...eness-post.html

படம்: கூகிள்.

-கிறீன் பிரிகேட்

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.