Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் பாரிய மணல் கொள்ளை ; பொது அமைப்புக்கள், மக்கள் கவலை

Featured Replies

கிளிநொச்சியில் பாரிய மணல் கொள்ளை ; பொது அமைப்புக்கள், மக்கள் கவலை

 

 
 

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது என பொது மக்களும் பொது அமைப்புக்களும்,  கவலை தெரிவித்துள்ளனர்.

DSC_0124.JPG

நாளுக்கு நாள்  சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெற்று வருகிறது என்றும், உள்ளூர் நபர்களும், வெளியிடத்தவர்களும் இணைந்தே சட்டவிரோதமாக மணல் அகழ்வுக்கு அனுமதிக்கப்படாத இடங்களில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

IMG_2667.JPG

குறிப்பாக பளை பிரதேசத்தின் கிளாலி, அல்லிப்பளை, தர்மக்கேணி, மாசார், சோரன்பற்று, புலோப்பளை, இயக்ககச்சி, போன்ற பிரதேசங்களில் இவ்வாறு  சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

IMG_2674.JPG

பளை பிரதேசத்தில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறு பிரதேசங்கள் கடற்கரைக்கு அருகில் இருப்பதனால்  கடல் நீர் உட்புகும் அபாயம் இருப்பதாகவும், பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும்   பொலிஸாருக்கு அறிவிப்பத்தில்   எவ்வித பயனும் இல்லை எனத்  தெரிவித்த மக்கள் தாங்கள் இரணைமடுவில் அமைந்துள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய சிரேஸ்ட பொலஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு  அறிவித்தால் மட்டுமே அங்கிருந்து வரும விசேட அதிரடிப்படையினர் சட்டவிரோத மணல் அகழ்வினை  மேற்கொள்பவர்களை கைது செய்துகொண்டு செல்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.

IMG_2664.JPG

எனவே  மிகமோசமாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை  தடுத்து நிறுத்த  சம்மந்தப்பட்ட அனைவரும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்   மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/37503

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.