Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் :

Featured Replies

மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் :

 

madu-church-800x531.jpg

மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதனை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இன்று அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

கிறிஸ்தவ மக்களின் புனித வணக்கஸ்தலமான மடு தேவாலயம், பௌத்த மற்றும் இந்து மக்களினதும் வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. வருடாந்த மடு திருவிழாவின்போது மட்டுமன்றி வருடம் முழுவதும் யாத்திரிகர்களும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளும் மடு தேவாலயத்திற்கு வருகை தருகின்றனர்.

யுத்த காலத்தில் ஏற்பட்ட பாரிய சேதங்களினாலும் நீண்டகாலமாக பராமரிப்பு பணிகளோ அல்லது புனரமைப்பு பணிகளோ மேற்கொள்ளப்படாதமையினாலும் மடு தேவாலயத்தை சுற்றியுள்ள பிரதேசம் பின்தங்கிய, வசதி குறைந்த பிரதேசமாகவே காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அப்பிரதேசத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள், சுகாதார வசதிகள், நீர் விநியோகம் முதலிய வசதிகளை மேம்படுத்துவதற்கும் இளைப்பாறும் இடங்கள் உள்ளிட்ட தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

ஜனாதிபதியினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

http://globaltamilnews.net/2018/90102/

நல்ல விடயம்! 

ஆனால், சில கிறிஸ்தவ நாடுகளை ஏமாற்றி தமிழ் இனப்படுகொலைகளை தொடரலாம் என்று சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் கனவு காண்கின்றனர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.