Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறையில் பஸ்சில் குண்டுவெடிப்பு - 12 பேர் பலி

Featured Replies

அம்பாறையில் பஸ்சில் குண்டுவெடிப்பு என்றும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  • தொடங்கியவர்

Sri Lanka blast 'kills civilians'

At least five civilians have been killed in an explosion on a bus carrying civilians in Sri Lanka, reports say.

The defence ministry says the blast was caused by a bomb planted by rebels of the Tamil Tigers.

The incident happened in the eastern district of Ampara.

There has been worsening violence in Sri Lanka in recent months, mainly in the east and north, leaving tens of thousands of civilians homeless.

The defence ministry said ambulances and security personnel were seen rushing towards the scene of Monday's explosion on the main road connecting Ampara and Badulla.

It said the bomb was planted by the Tigers "targeting a civilian transportation bus". It exploded just after midday, local time. Some reports say up to 12 people have died.

There has been no comment yet from the Tamil Tigers about the attack.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6517167.stm

இலங்கை அரசின் சதி இது...

அரச அரக்கன் மகிந்தருக்கு ***********

அந்த சம்பவத்தில் உயிர் நீத்த மக்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி...

மன்னிக்க வேண்டும் சில எழுத்துக்கள் என்னால் எழுத முடியவில்லை..

அம்பாறையில் பஸ் குண்டு வெடிப்பு : 15 பேர் பலி.

அம்பாறையில் கொண்டைவெட்டுவான் வீதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 22 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும்; தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு குழந்தை உட்பட 15 பேரின் சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் 22 பேர் காயமடந்துள்ளதாகவும். சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அம்பாறை வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

போக்குவரத்து செய்த பேரூந்தினுள்ளே இருந்த குண்டு வெடித்திருக்கலாம் அதன் காரணமாக பலர் இறந்திருக்கலாமென என விசாரணையின் போது அம்பாறை பொலிஸார் தெரிவித்ததாக தென் பகுதி ஊடகம்ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

-Sankathi-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

slbusap4.jpg

பேரூந்து மீது தாக்குதல்.1 5பேர் கொல்லப்பட்டனர் 20 பேர் காயமடைந்துள்ளனர்

அம்பாறையில் பேரூந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 15பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவப்பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்

இன்று காலை பொதுமக்கள் பேரூந்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 15 பேர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்திருப்பதாகவும் பிரசாத் சமரசிங்க கூறினார். அம்பாறை பஸ் நிலையத்திலிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட குறிப்பிட்ட பஸ் வண்டி கொண்டவெட்டுவான் இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள போலீஸ் மற்றும் இராணுவத்தின் கூட்டுச் சோதனைச் சாவடியொன்றில் நிறுத்தப்பட்ட போது பஸ்ஸுக்குள் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் குண்டு வெடித்ததாக் கூறப்படுகிறது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

அம்பாறையில் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி- 20 பேர் படுகாயம்.

அம்பாறை நகரில் சிறிலங்கா இராணுவத்தினரின் சோதனைச் சாவடியைக் கடந்து சென்ற பயணிகள் பேரூந்தில் குண்டொன்று வெடித்ததில் 15 பயணிகள் கொல்லப்பட்டதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்பாறை நகருக்கு 4 கிலோமீற்றர் மேற்காக அமைந்துள்ள கொண்டவெட்டுவான் இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை மதியம் 12:30 மணியளவில் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றது.

பேரூந்திற்குள் அல்லது அப்பகுதி வீதியோரத்தில் வைக்கப்பட்ட குண்டே வெடித்ததாக கூறப்படுகின்றது.

10 பெண்கள், 2 சிறார்கள், 3 ஆண்கள் உள்ளிட்டோர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

கொல்லப்பட்ட ஆண்களில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவரும், சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என படைத்தரப்பு மேலும் தெரிவித்தது.

14 பேரின் சடலங்கள் அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அம்பாறையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பேரூந்தே குண்டுவெடிப்பில் சிக்கியதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

-Puthinam-

(3 ஆம் இணைப்பு) அம்பாறையில் குண்டுவெடிப்பு: 16 பேர் பலி- 25 பேர் படுகாயம்

[திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2007, 15:57 ஈழம்] [து.சங்கீத்]

அம்பாறை நகரில் சிறிலங்கா இராணுவத்தினரின் சோதனைச் சாவடியைக் கடந்து சென்ற பயணிகள் பேரூந்தில் குண்டொன்று வெடித்ததில் 16 பயணிகள் கொல்லப்பட்டதுடன் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்பாறை நகருக்கு 4 கிலோமீற்றர் மேற்காக அமைந்துள்ள கொண்டவெட்டுவான் இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை மதியம் 12:10 மணியளவில் இக்குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.

பேரூந்திற்குள் அல்லது அப்பகுதி வீதியோரத்தில் வைக்கப்பட்ட குண்டே வெடித்ததாக கூறப்படுகின்றது.

11 பெண்கள், 2 சிறார்கள், 3 ஆண்கள் உள்ளிட்டோர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

கொல்லப்பட்ட ஆண்களில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவரும், சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என படைத்தரப்பு மேலும் தெரிவித்தது.

14 பேரின் சடலங்கள் அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அம்பாறையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பேரூந்தே குண்டுவெடிப்பில் சிக்கியதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு என சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இதனை மறுத்துள்ளதுடன் தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் அரசாங்கப் படையினர் அல்லது அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரே இதனை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் மனித உரிமை தொடர்பக பேச்சாளர் என்.செல்வி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளதாவது:

இக்குற்றச்சாட்டை நாம் மறுக்கின்றோம். போர் நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் பொதுமக்களை தாக்கியது கிடையாது. பேரூந்து குண்டு வெடிப்பானது சிறிலங்காப் படையினரின் சோதனைச் சாவடிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக அங்கு பல குழுக்கள் இயங்கி வருகின்றன. கிழக்கில் கருணா குழுவினரும் உள்ளனர். பொதுமக்களை கொலை செய்து எமக்கு அபகீர்த்தியை உண்டு பண்ண சிறிலங்கா படையினரே இதனை செய்திருக்கலாம்.

பிறிதொரு சம்பவத்தில் அம்பாறையில் அரசாங்க படையினர் நீர்த்தேக்கத்தை சேதப்படுத்தி தமிழ் மக்களின் விவசாய நிலங்களை அழித்துள்ளனர் என்றார் அவர்.

நன்றி : புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தால், சிறிலங்கா அரசு மீது கொண்டு வரப்பட்ட கண்டஅறிக்கை, ஒத்தி வைக்கப்பட்டாலும், அது பின்னால் திரும்பவும் கொண்டு வரவேண்டிய சாததியக் கூறு இருப்பதால் தன் படுகொலை நாடகத்தை மீண்டும் சிங்கள அரசு அரங்கேற்ற முயல்கின்றது. கொப்பட்டிக்கொலாத் தாக்குதல் போலவே.

இதன் மூலம் பயங்கரவாதச் செயற்பாடுகள், இலங்கையில் நடப்பது போன்றும், அதை அடக்க முனைவதாக, தர்மத்தின் அடையாளமாக தன்னை உருவகிக்க சிங்கள அரசு முயலக்கூடும். நேற்றுக் கொல்லப்பட்ட மனிதநேயப் பணியாளர்களும், சிங்கள அரசின் தேவைகளுக்காகவே கொல்லப்பட்டனர். இன்று மக்கள் பேருந்து மீது குண்டுத் தாக்குதலை நடத்தியிருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் வான்படை பற்றி சர்வதேசம் மெளனமாக ஆமோதித்ததை சிங்கள அரசு தரப்பால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. வழமையாகப் பயங்கவாத இயக்கம் என்று அவர்கள் போடுகின்ற கூச்சல், உலகத்தில் ஏமாற்றுவித்தை என்று புலப்பட்டவுடன், மீண்டும் புலிகள் பெயரைப் பாவித்து கொலைவெறித் தாக்குதல் நடத்துகின்றது. இந்திய மீனவர்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்டதை, மீனவர்கள் அறிவித்த பின்னரும், ஏற்றுக் கொள்ள மறுத்த சிங்கள அரசு, இக்குண்டு வெடிப்பையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லைத் தான்.

ஆனால் உலகம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். முழுமையாக சிங்கள மக்கள் செறிந்துவாழும் கட்டுநாயக்காப் பகுதியில், பொதுமக்கள் பாதிக்காமல் அவதானமாகத் தாக்குதல் நடத்திய புலிகள், இந்த நேரத்தில் பொதுமக்களை இலக்காக்க வேண்டிய தேவையுமில்லை. அவசியமுமில்லை.

தேவை இருந்தால், அதை இலங்கையில் எந்தப் பகுதியிலும், தமிழ்மக்கள் பாதிக்காத வகையில் நடத்த முடியும். ஆனால், தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது, தமிழ் மக்களின் விடுதலை நோக்கியதே தவிர, சிங்கள மக்களையோ, இதர மக்களையோ அழிப்பதற்காக அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.