Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்­லி­ணக்­கத்­திற்கு வித்­திட்ட நல்­லாட்சி

Featured Replies

நல்­லி­ணக்­கத்­திற்கு வித்­திட்ட நல்­லாட்சி

04MAIN14082018Page1Image0003-74b48e1934012e500c4c41cbbb70a4e44afa1574.jpg

 

 

 

முப்­பது வரு­டத்­திற்கும் மேலாக இந்­நாட்டில் குடி­கொண்­டி­ருந்த யுத்­த­மா­னது நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் மக்­களின் வாழ்க்கை நிலை படிப்­ப­டி­யாக முன்­னேற்றம் கண்­டது. எனினும், நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இருந்த சந்­தர்ப்­பத்­தினை கடந்த அர­சாங்கம் தமது கவ­ன­யீ­னத்­தினால் இழந்­தது. நாட்டின் ஆங்­காங்கே வாழ்ந்து கொண்­டி­ருந்த சிங்­களம் – தமிழ், சிங்­களம் -– முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் மோதல் ஏற்­பட்­டது. அதன் உச்ச கட்­ட­மாக 2014ஆம் ஆண்டு அளுத்­கமை, பேரு­வளை நகரில் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரத்­தினை நோக்­கலாம். இந்த சம்­ப­வத்­திற்கு பின்­பு­ல­மாக கடந்த ஆட்­சி­யா­ளர்கள் இருந்­தமை கண்­கூடு. மேலும் இவ்­வா­றான நிலை­மை­க­ளுக்கு உந்துசக்­தி­யாக இருந்த பொதுபலசேனா போன்ற இன­வாத அமைப்­பு­க­ளுக்கு முன்­னைய ஜனா­தி­ப­தி­ய­வர்­களின் அனு­ச­ரணை இருந்­த­மையும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

வடக்கில் வாழ் மக்கள் இரா­ணுவ ஆட்­சியின் கீழ் வாழ்ந்த கால சூழ்­நி­லையில், அவர்­களின் அடிப்­படை நிலங்­களை பாது­காப்பு தரப்­பினர் விடு­விக்­காத கால­மது. மேலும் ராஜபக் ஷ ஆட்­சியில் காணாமல் போனோரை தேடு­வது தொடர்­பிலும் அம்­மக்கள் பெரிதும் நம்­பிக்கை இழந்­த­வர்­க­ளா­கவே இருந்­தனர்.

இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­காக காலத்­துக்கு காலம் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆணைக்­கு­ழுக்கள் பல்­வேறு அறிக்­கை­களை முன்­வைத்த போதும், அவற்றில் காணப்­ப­டு­கின்ற சிபார்­சு­களை நடை­முறைப்­ப­டுத்­து­வ­தற்கு கடந்த அர­சாங்கம் ஒரு­போதும் முன்­னிற்­க­வில்லை. இவ்­வா­றான நிலைமை தொடர்ந்து வந்­த­மை­யினால் இந்த நாடு சர்­வ­தேச சமூ­கத்­திடம் தலை­கு­னிய வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. நாட்டில் ஒரு சாரார் மாத்­திரம் சுபிட்­சமாய் வாழ்ந்த நிலையில், ஏனைய சமூ­கங்கள் தமது வயிற்றில் கல்லை கட்­டிய நிலை­யி­லேயே வாழ்ந்­தனர்.

புதிய யுகத்தின் உதயம்

இவ்­விருள் சூழ்ந்த நிலையில் வாழ்ந்து கொண்­டி­ருந்த மக்கள் தமது விடிவு காலத்­துக்காய் கனவு கண்டு கொண்­டி­ருந்­தனர். இந்த நிலை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் கொள்கை பிர­க­ட­னத்தில் முதன் முறை­யாக நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தாக உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்­டது. இந்த கொள்கை பிர­க­ட­னத்­தினை ஏற்றுக் கொண்ட மக்கள் ராஜ

பக் ஷ அர­சாங்­கத்தின் சிங்­கள பௌத்த வாத கொள்­கை­யினை புறக்­க­ணித்து சிறு­பான்மை மக்­க­ளது ஆத­ர­வுடன் இறு­தியில் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது.

2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த இவ்­வ­ர­சாங்கம் தமது கொள்கை பிர­க­ட­னத்­திற்கு இணங்க பல திட்­டங்­களை முன்­னெ­டுத்­தது. அவற்றில் குறிப்­பாக இந்­நாட்டில் முதன் முறை­யாக சிறு­பான்மை இனத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கு பாரா­ளு­மன்­றத்தின் எதிர்­க்கட்சி தலைமை பத­வி­யினை வழங்­கி­ய­மை­யினை சுட்­டிக்­காட்­டலாம். அவ்­வாறு வழங்­கப்­பட்­டமை சரி என்­பதை சபா­நா­யகர் கடந்த தின­மொன்றில் மீண்டும் உறு­திப்­ப­டுத்­தினார். ராஜபக் ஷ ஆட்­சியில் சமூ­க­ம­யப்­ப­டுத்­தாமல் வைத்­தி­ருந்த யுத்த காலப்­ப­கு­தியில் ஏற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்ற குற்­றச்­செ­யல்கள் தொடர்பில் தேடி­ய­றிந்த உத­லா­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யினை 100 நாள் நிகழ்ச்­சித்­திட்­டத்தின் இடையில் பிர­தமரினால் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டமை, நல்­லாட்சி அர­சாங்கம் குறு­கிய காலத்தில் பெற்றுக் கொண்ட பாரிய வெற்­றியில் ஒன்­றாக கரு­தப்­ப­டு­கின்­றது.

அதனைத் தொடர்ந்து சர்­வ­தேச நாடுகள் மத்­தியில் இலங்­கைக்கு கிடைத்த அவப்­பெயரை மாற்ற வேண்­டிய சவா­லினை ஏற்று நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­பட ஆரம்­பித்­தது.

சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் இலங்­கையின் நற்­பெ­யரை மீள ஏற்­ப­டுத்தல்    

ராஜபக் ஷ ஆட்சிக் காலத்தில் சர்­வ­தேச ரீதியில் இலங்கை மீது காணப்­பட்ட அவப்­பெ­ய­ரினை இல்­லா­தொ­ழிக்கும் சவா­லி­னையும் நல்­லாட்சி அர­சாங்கம் ஏற்று செயற்­பட ஆரம்­பித்­தது. குறிப்­பாக 2014ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­களை முறை­யாக அமுல்­ப­டுத்­து­வதில் ராஜபக் ஷ அர­சாங்கம் தோல்வி கண்­டது. அவர்கள் அதற்கு எதி­ராக செயற்­பட்­ட­மை­யினால் சர்­வ­தே­சத்தின் அவப்­பெ­ய­ரி­னையும் பெற்றுக் கொண்­டனர். இதனால் சர்­வ­தேச நாடு­களின் பல்­வேறு தடை­க­ளுக்கும் இலங்கை உட்­பட வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. யுத்­தத்தின் பின்­ன­ரான மக்­களின் வாழ்க்­கை­யினை செம்­மைப்­ப­டுத்­துதல், மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை எடுத்தல், சுயா­தீன நீதிச்­சே­வை­யினை ஏற்­ப­டுத்தல் போன்ற யோச­னை­க­ளையே ராஜபக் ஷ அர­சாங்கம் செயற்­ப­டுத்த மறுப்பு தெரி­வித்­தது. இறு­தியில் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஜெனி­வாவில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொ­டரில் அப்­போ­தைய வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இந்­நாட்­டினுள் நல்­லி­ணக்க பொறி­மு­றை­யினை ஏற்­ப­டுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்தார்.

உண்­மை­யினை தேடி­ய­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நட்டஈடு­களை வழங்­குதல், மீண்டும் ஒரு யுத்தம் வராமல் பாது­காத்தல் போன்ற விட­யங்­களை மைய­மாக வைத்துக் கொண்டு குறித்த பொறி­மு­றை­யினை செயற்­படுத்த உள்­ள­தாக அமைச்சர் சர்­வ­தேச சமூ­கத்தின் முன்­னி­லையில் தெரி­வித்­தி­ருந்தார். அது மாத்­தி­ர­மல்ல தமிழ் மக்கள் பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யு­மான அர­சியல் தீர்­வொன்­றினை வழங்க வேண்டும் என்ற தேவை­யி­னையும் நல்­லாட்சி அர­சாங்கம் இனங்­கண்­டுள்­ள­தா­கவும் அவர் குறித்த கூட்டத் தொடரில் மேலும் சுட்டிக் காட்­டி­யி­ருந்தார்.

நல்­லி­ணக்கப் பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வது தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த வர­லாற்றுப் பணி­யாகும். இலங்கை மக்­களின் தேவைகள் மற்றும் அபி­லாஷைகளைப் பிர­தி­ப­லிக்கும் நிறு­வ­னங்­களை வடி­வ­மைக்கும் பொருட்டு பதி­னொரு உறுப்­பி­னர்­களைக் கொண்ட செய­ல­ணியின் தலை­மையில் அர­சாங்கம் பொது­மக்­க­ளிடம் ஆலோ­ச­னை­களைப் பெறும் செயல்­மு­றையைத் தொடங்­கி­யது. நல்­லி­ணக்க நிறு­வ­னங்­களின் வடி­வ­மைப்பில் தங்கள் கருத்­துக்­களை சமர்ப்­பிக்க பொது­மக்­களை ஊக்­கு­விக்கும் முக­மாக நாடெங்கும் இவ் ஆலோ­சனை கோரல் செயன்­மு­றை­களை நடத்தி வரு­கின்­றது.

வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட்ட யுகம்

சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் இந்­நாட்டு மக்­க­ளுக்கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை ஒரே இரவில் செய்து விட முடி­யாது. கடந்த மூன்­றாண்­டு­க­ளாக பொது எதி­ர­ணியின் மூலம் காலத்­துக்கு காலம் கொண்டு வரப்­ப­டு­கின்ற சவால்­க­ளையும் முறி­ய­டித்து குறித்த அடை­வு­களை அடைந்துகொள்­வ­தற்­காக நல்­லாட்சி அர­சாங்கம் பல்­வேறு முன்­னெ­டுப்­புக்­களை எடுத்­துள்­ளது. நல்­லி­ணக்­கத்­தினை நோக்­கிய பய­ணத்தில் அனை­வ­ருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் செயற்­ப­டு­வது அத்­தி­ய­வ­சி­ய­மாகும்.

வினைத்­திறன் மிக்­க­தாக நல்­லி­ணக்க பொறி­மு­றைகள் நில­வு­வதை உறு­திப்­ப­டுத்தும் பொருட்டு பிர­த­மரின் அலு­வ­ல­கத்தின் கீழ் நல்­லி­ணக்க பொறி­மு­றை­களைக் கூட்­டி­ணைப்­ப­தற்­கான செய­லகம் ஒன்று ஸ்தாபிக்­கப்­பட்டு செயற்­பட்டு வரு­கின்­றது.

உண்­மை­களைக் கண்­ட­றிதல், நீதி, பொறுப்­புக்­கூறல் மற்றும் ஈடு­செய்தல் பொறி­மு­றை­களை வடி­வ­மைத்து செயற்­ப­டு­வ­தற்­கா­கவே முற்­று­மு­ழு­தாக சிவில் சமூகப் பிரதி­நி­தி­களை உள்­ள­டக்கும் ஒரு சிறப்பு செய­ல­ணி­யாக அது ஸ்தாபிக்­கப்­பட்­டது.

மீள நிக­ழாமை எய்­து­வதை நோக்­காகக் கொண்ட பரந்­து­பட்டு நல்­லி­ணக்க விட­யங்­களில் மேற்­படி செய­லணி செயற்­பட்டு வரு­கின்­றது.

நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான பொறி­மு­றைகள் மையப்­ப­டுத்­தப்­படும். அரசு கீழ்­வரும் பொறி­மு­றை­களை கவ­னத்தில் கொள்ளும் என ஏற்­க­னவே அறி­வித்­துள்­ளது.

1. விசேட வழக்கு தொடுப்­ப­வரை உள்­ள­டக்­கிய நீதிப்­பொ­றி­முறை.

2. உண்மை, நீதி, நல்­லி­ணக்கம் மற்றும் மீள்­நி­க­ழாமை தொடர்­பான ஆணைக்­குழு.

3. காணாமல் போனோர் தொடர்­பான விட­யங்­களைக் கையாள்­வ­தற்­கான அலு­வ­லகம்.

4. இழப்­பீ­டு­க­ளுக்­கான அலு­வ­லகம்.

உண்­மையைக் கண்­ட­றிதல் நடை­மு­றையில் மிக முக்­கிய ஆக்கக் கூறா­கவும் இடைக்­கால நீதி நிகழ்ச்சி நிரலில் முதன்மை வகிக்கும் பொறி­மு­றை­யா­க­வு­முள்ள காணாமற் போனோர்­க­ளுக்­கான நிரந்­த­ர­மா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான அலு­வ­லகம் இன்று தமது பணி­யினை நாடு தழு­விய ரீதியில் முன்­னெ­டுத்துச் செல்­கின்­றது. குறிப்­பாக அண்­மைக் காலங்­களில் வடக்கு, கிழக்கு பகு­தி­க­ளுக்கும் சென்று அங்கு தமது பிராந்­திய அலு­வ­ல­கங்­களை ஸ்தாபித்து, அம்­மக்­களின் கருத்­து­களை பெற்று வரு­கின்­றது. இது இலங்­கையின் நல்­லி­ணக்க செயன்­மு­றையின் ஒரு மைல்­கல்­லாகும்.

மேலும், காணாமற் போனோர் தொடர்­பாக காணாமற் போன­மைக்­கான அத்­தாட்சிப் பத்­தி­ரத்தை வழங்­கு­வ­தற்கு வச­தி­யாக 2010ஆம் ஆண்டு 19ஆம் இலக்க இறப்புப் பதிவுச் சட்­டத்தில் திருத்தம் செய்­யப்­பட்­டது. அத்­துடன் வலுக்­கட்­டா­ய­மாக காணா­மற்­போகச் செய்­வ­தி­லி­ருந்து அனைத்து நபர்­க­ளையும் பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச உடன்­ப­டிக்கை வலுப்­ப­டுத்­தப்­பட்­ட­துடன், உடன்­ப­டிக்­கையின் ஏற்­பா­டு­க­ளுக்கு சட்ட அங்­கீ­கா­ரத்­தினை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன.

மோதல்­களால் பாதிக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்து வாழ்­கின்ற மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு பற்­றிய ஒரு தேசிய கொள்கை பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்­களின் பின்னர் ஐக்­கிய நாடுகள் அமைப்­பி­லி­ருந்து பெற்றுக் கொண்ட தொழில்­நுட்ப ஆத­ர­வுடன் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

சித்­தி­ர­வதை மீதான பூச்­சிய பெறுமைக் கொள்­கையை அர­சாங்கம் பேணு­கின்ற போதிலும் கூட இந்த நிகழ்வு குறைக்­கப்­பட்­டுள்ள போதிலும் அது முழு­வ­து­மாக நிறுத்­தப்­ப­ட­வில்லை. ஆகவே சித்­தி­ர­வ­தைக்கு எதி­ராக போரா­டு­வ­தையும் அதனை ஒழிப்­ப­தையும் நோக்­காகக் கொண்டு இலங்­கை­யி­லுள்ள தேசிய மனித உரி­மைகள் ஆணைக்­குழு மற்றும் பொலிஸ் ஆணைக்­குழு ஆகி­ய­வற்றின் உத­வி­யினை அர­சாங்கம் பெற்று பல்­வேறு திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

மேலும் வட, கிழக்கு பகு­தியில் இரா­ணு­வத்தின் வச­முள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­விக்கும் பணிகள் மிக துரித கதியில் இடம்­பெற்று வரு­கின்­றன. 2020ஆம் ஆண்­ட­ளவில் இலங்­கை­யினை மிதி­வெடி அற்ற நாடாக மாற்றும் திட்­டத்­திற்கு இணங்க குறித்த பகு­தியில் மிதி வெடி அகற்றும் பணிகள் உய­ரிய தொழில்­நுட்­பத்­தினை பயன்­ப­டுத்தி முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. குறித்த பணி­க­ளுக்கு சமாந்­த­ர­மாக காணி விடு­விப்பும் இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

ஜன­நா­யகம், அபி­வி­ருத்தி மற்றும் நல்­லி­ணக்கம் ஆகிய மூன்று விட­யங்­களின் அடிப்­ப­டையில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்ள இவ்­வ­ர­சாங்­க­மா­னது இலங்­கைக்­கான புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்கும் வேலை­யிலும் ஈடு­பட்­டுள்­ளது. முழு பாரா­ளு­மன்­றத்­தி­னையும் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்றி குறித்த பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் பல்­லின, பல்­ச­மய, பன்­மொழி நாடா­க­வி­ருந்து சக­ல­ருக்கும் சம உரி­மை­களும், நீதியும், கௌர­வமும் வழங்­கப்­படும் என்­ப­துடன், சுதந்­திரம் பெற்­ற­தி­லி­ருந்து கொள்ளை நோயாகப் பரவி நாட்டில் ஒரே இனம் என்­கின்ற எமது ஐக்­கி­யத்­தினை தடை­செய்து கொண்­டி­ருக்­கின்ற சில விட­யங்­க­ளுக்கு தீர்வும் வழங்கும் வகையில் பொது­மக்­களின் கருத்­துக்­களை பெற்று நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

எனினும் இன்று பொது எதி­ர­ணி­யினர் நாட்டின் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண முற்­படும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு சேறு பூசும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து, அர­சாங்­கத்­தினை திசை திருப்பும் பணி­யினை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

அதேபோன்று, இவ்­வாட்­சியின் போது இது­வரை காலமும் எமது நாடு இழந்­தி­ருந்த ஐரோப்­பிய சங்­கத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலு­கை­யினை மீள பெற்றுக் கொண்டு இந்­நாட்டு ஏற்­று­ம­தி­க­ளுக்கு சிறந்­த­தொரு சந்தை வாய்ப்­பினை பெற்றுக் கொள்­வ­தற்கு வாய்ப்­புகள் கிடைத்­தன. மேலும், மனித உரி­மைகள் மற்றும் தொழி­லாளர் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச ஏற்­பு­களை இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­மையே குறித்த சலு­கைகள் மீண்டும் கிடைப்­ப­தற்கு கார­ண­மாக அமைந்­தது.

2018ஆம் ஆண்டு உலக சமா­தான சுட்­டியில் கடந்த வரு­டத்­தினை விடவும் இந்த வருடம் 5 இடங்கள் முன்­னேறி இலங்கை 67ஆவது இடத்தை பிடித்­துள்­ளது. ராஜ

பக் ஷ ஆட்சி காலத்தில் மனித உரி­மைகள் மீறப்­பட்­ட­மை­யினால் குறித்த சுட்­டியில் இலங்கை பின்­வ­ரி­சை­யி­லேயே தரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. மேலும் 2007 மற்றும் 2009ஆம் ஆண்­டு­களில் நாட்டில் நில­விய அசா­தா­ரண சூழ்­நி­லையின் விளை­வினால் குறித்த தரப்­ப­டுத்­த­லுக்கு விண்­ணப்­பிப்­ப­தற்கு கூட இலங்­கைக்கு முடி­யாமல் போனது.

எனினும் இன்று நாட்­டினுள் ஜனா­நாயம், மனித உரி­மை­களை ஏற்­ப­டுத்தல், அனை­வ­ரதும் உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளித்தல் போன்ற கார­ணங்­க­ளினால் நாம் நாடு என்ற ரீதியில் ஏ தரத்­திற்கு தர­மு­யர்த்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

நல்­லி­ணக்க பாலத்­தினை பலப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­நல்­லாட்சி அர­சாங்கம் தாம் கடந்து வந்த 3 ஆண்­டு­களில் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. சட்ட ரீதி­யாக பல்­வேறு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட அதே­வேளை மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் சிந்­தித்து பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்­தது. தெற்கில் வீரர்­களை நினை­வுட்­டு­வதைப் போன்று வடக்­கிலும் வீரர்­களை நினை­வுட்டும் நிகழ்ச்­சி­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளித்தல், கிரந்­தங்­களை மொழி­பெ­யர்த்தல், யாழ்ப்­பா­ணத்தில் சினிமா நிகழ்­வொன்றை ஏற்­பாடு செய்து அவர்­களின் ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு சந்­தர்ப்­ப­ம­ளித்தல் போன்ற ஒரு சில­வற்றை இங்கு சுட்டிக் காட்­டலாம்.

புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட விடு­தலை புலி உறுப்­பி­னர்­களின் உள்­ளத்தை உருக்கும் செயற்­பா­டுகள் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வெற்­றிக்கு ஒரு சிறந்த சான்­றாகும்.

நல்­லாட்சி அர­சாங்கம் சர்­வ­தே­சத்தின் நம்­பிக்­கை­யினை வென்று நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளினை முன்­னெ­டுத்­த­மை­யினால் இன்று நாம் இழந்­தி­ருந்த சர்­வ­தே­சத்தின் அங்­கீ­காரம் மற்றும் நன்­மை­களை அடைந்துக் கொள்ளக் கூடி­ய­தாக உள்­ளது. மேற்­கு­றிப்­பிட்ட பல்­வேறு விட­யங்­களை செயற்­ப­டுத்­து­வ­தற்கு வாய்ப்பும் அதன் மூலமே கிடைத்­தது. அபி­வி­ருத்­தி­யினை நோக்­காகக் கொண்டு பய­ணிக்­கின்ற இத்­த­ரு­ணத்தில், ஒரு­வரை ஒருவர் மதிப்­ப­ளித்து, ஜன­நா­ய­கத்­தினை ஏற்­ப­டுத்தி நாட்டின் நிலமை மற்றும் நல்­லி­ணக்­கத்­தினை உறுதிப்படுத்தும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப் படவேண்டும் என்பதுடன், கட்சி, நிற, மத வேறுபாடின்றி அனைவரும் அதன் பயன்களை புசிப்பதற்கும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-15#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.