Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை -- சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையை ஏன் எதிர்க்கிறார்கள்?

Featured Replies

இலங்கை -- சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையை ஏன் எதிர்க்கிறார்கள்?

 
இலங்கை இந்திய வர்த்தக உடன்படிக்கையும் எமக்கு சாதகமாக அமையவில்லை
pg5-2.jpg?itok=Ar7u1AEb

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் (SLSFTA) 2018 ஜனவரி 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே இலங்கை இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இதுபோன்ற இருபக்க தாராள ஒப்பந்தங்களை இலங்கை செய்துள்ளது. எனினும் அந்த ஒப்பந்தங்களுக்கு இல்லாத எதிர்ப்பு சிங்கப்பூர் ஒப்பந்தத்திற்கு ஏற்படக்காரணம் இலங்கையரிடையே காணப்படும் சிங்கப்பூர் மேனியா என்னும் அச்சமாக இருக்கலாம்.

சிறியதொரு நாடு மிகப்பலமான ஒரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி ஆச்சரியப்படுத்தியபோது அதனை உதாரணமாகக் கொண்டு இலங்கையையும் கட்டியெழுப்ப கனவு கண்டார் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன. அப்போதைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் சிங்கப்பூரிலிருந்தே மத்திய வங்கி ஆளுநரைத் தெரிவு செய்தார். கடந்தகாலத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் காரணமாகவோ என்னவோ அழுத்தக் குளுக்கள் குறிப்பாக தொழில்வாண்மைச் சங்கங்கள், வைத்திய அதிகாரிகள் சங்கம் என்பன இவ்வொப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றன. சிங்கப்பூருக்கு இலங்கையை தாரைவார்க்கும் நடவடிக்கை என ஜே.வி.பியை அடிப்படையாகக் கொண்ட சங்கமொன்று சாடியது. எனவே இந்த ஒப்பந்தம் பற்றிய ஒரு அலசலை மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

இவ்வொப்பந்தமானது ஏனைய இரு நாடுகளுடனான (இந்தியா - பாகிஸ்தான்) வர்த்தக ஒப்பந்தத்தை விட ஒருபடி மேலே சென்று சில சேவைத்துறைகளையும் இணைத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்படி பொருட்கள், சேவைகள், இலத்திரனியல் வர்த்தகம் e- _ commerce, தொலைத்தொடர்பு, வெளிநாட்டு நேரடி முதலீடு, புலமைச்சொத்துக்கள் மற்றும் அரசாங்க பண்டக் கொள்வனவு (public procurement) போன்றன ஒப்பந்தத்தின் கீழ் வருகின்றன. சிங்கப்பூர் கம்பனிகள் மேற்படி துறைகளில் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை சலுகை அடிப்படையில் மேற்கொள்ளலாம்.

அடுத்துவரும் 15 வருடகாலப் பகுதியில் இலங்கையானது சிங்கப்பூரில் இருந்து வரும் இறக்குமதிகள் மீதான தீர்வைகளின் 80 வீதத்தைப் படிப்படியாகக் குறைக்க இதன்கீழ் இணங்கியுள்ளது. மறுபுறம் 99 வீதமான பண்டங்களுக்கு ஏற்கனவே தீர்வைகளை நீக்கியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூர் வருடாந்தம் 10 மில்லியன் சிங்கப்பூர் டொலர் பெறுமதியான பொருட்கள் சேவைகள் மீதான தீர்வை சேமிப்பை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வொப்பந்தத்தில் நெகிழ்தன்மை கொண்ட Rules of oregin எனப்படும் பொருளின் உற்பத்தி இடம் தொடர்பான நிபந்தனைகள் காணப்படுகின்றன. 35 வீத உள்நாட்டு பெறுமதிச் சேர்க்கை இருப்பது போதுமானதெனவும் பொருளின் சர்வதேச வகைப்படுத்தலை மாற்றியமைக்கவும் ஏற்பாடுகள் இருப்பதனால் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கான ஏற்றுமதிகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்.

அரசாங்கத்துறை நிறுவனங்கள் கொள்வனவு ஒப்பந்தங்களையும் சேவை ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளும்போது அதில் போட்டியிட்டு கேள்வி மனுக்களை சமர்ப்பிக்க இவ்வொப்பந்தம் வகை செய்கிறது. வெளிநாட்டுக் கம்பனிகள் அரசாங்கத்தின் விலைமனுக்கோரல்களில் ஈடுபடுவதை அனுமதிக்கும் ஒப்பந்த ரீதியான ஏற்பாடு இவ்வொப்பந்தத்திலேயே உள்ளது. எனவே உள்ளூர் நிறுவனங்களைப் போலவே சிங்கப்பூர் நிறுவனங்களும் போட்டி அடிப்படையில் இவற்றில் ஈடுபடலாம்.

கடந்த இரு தசாப்தங்களாக சிங்கப்பூர் நிறுவனங்கள் இலங்கையில் முக்கிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.

1. வீடமைப்புத்துறை : உதாரணம் Overseas Reality Ceylon Ltd.

2. சுற்றுலாத்துறை : உதாரணம் Shangri La Hotels.

3. உணவு மற்றும் குடிபான உற்பத்தித்துறை : Prima Ceylon மற்றும் Asia Pacific Brewery.

4. பாதுகாப்பு : Certis Cisco.

5. தொலைத்தொடர்பாடல் : உதாரணம் Lanka Bell.

6. கட்டட நிர்மாணம் : Woh Hub, Ley Choon.

7. உட்கட்டுமாணம் : Shing Kwan Group, Next Story Group.

இவற்றுள் பல நமக்கு ஏற்கனவே பரிச்சயமான நிறுவனங்களாகும். சிங்கப்பூர் நிறுவனங்கள் பல இலங்கையில் தமது முதலீடுகளை விஸ்தரிக்க முன்வந்துள்ளன.

1. களஞ்சியப்படுத்தல் வசதிகள் மற்றும் வர்த்தக அடிப்படைச் சேவைகள்.

2. தளபாட உற்பத்தி.

3. தொடர்மாடிகள்.

4. தொழில்வாண்மைப் பயிற்சி நிலையங்கள்.

 

 
 

5. தீப்பற்றல் பாதுகாப்பு இயந்திரவியல்.

6. சூரிய மின்கலத் தொகுதிகள்.

7. சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளன.

மறுபுறம் இலங்கை சிங்கப்பூரிடமிருந்து பின்வரும் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்க்கிறது.

1. உட்கட்டுமாணத்துறை.

2. வியாபார சேவைகளின் வெளிச்சேவை (Business Process Outsourcing) மற்றும் ஆபரணங்கள்.

8. வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவைகள்.

இதில் இறுதியாகக் கூறப்பட்டுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவை வழங்களில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிராகவே இலங்கை வைத்திய சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

ஏற்கனவே இந்தியாவிலிருந்து அப்பலோ வைத்தியசாலை இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டபோது சில எதிர்ப்பு அலைகள் கிளம்பிய போதிலும் பின்னர் அதே வைத்தியசாலையில் இலங்கை வைத்தியர்களும் பணியாற்றச் சென்றதை பலர் மறந்து போயிருக்கலாம். இப்போது அந்த வைத்தியசாலை உள்ளூர் பெரும்புள்ளிகளுக்கு சொந்தமாகியுள்ளமை வேறுவிடயம்.

தமது இருப்புக்கு ஆப்பு வந்துவிடுமோ என்பதனால் இதனைக் கடுமையாக வைத்தியர்களும் பணியாளரும் இங்குவந்து இலங்கையில் உன்னதமான நிலையில் இருக்கும் வைத்திய மற்றும் சுகாதாரத்துறையை சீரழித்து விடுவார்கள் என்பதே இவர்களது வாதம். இலங்கை அரசியல்வாதிகள் தமக்கு நோய் வந்தால் இலங்கை வைத்தியசாலைகளுக்கு செல்கிறார்களா அல்லது சிங்கப்பூர் நோக்கிப் பறக்கிறார்களா? அதே சேவைகளின் ஒருபகுதி பொதுமக்களுக்கும் கிடைக்க அனுமதிப்பதில் தவறேதும் உண்டா? ஏற்கனவே தனியார்துறை வைத்தியசாலைகள் அறவிடும் கட்டணங்கள் சாதாரண பொதுமக்களால் தாங்கமுடியாத அளவில் உள்ளன. வெளிநாட்டுப் போட்டி அதிகரிக்கும்போது கட்டணங்கள் குறையவும் சேவையின் தரத்தை அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும். சாதாரண மக்களுக்கு தாங்கிக்கொள்ளக்கூடிய மட்டத்தில் சுகாதார சேவைகளைப் பெற வாய்ப்பு ஏற்படும்.

2017இல் இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையிலான வர்த்தகப் பெறுமதி சுமார் 2.7 பில்லியன் சிங்கப்பூர் டொலர்களாக இருந்தது. இதில் 2.5 பில்லியன் சிங்கப்பூரின் ஏற்றுமதிகளாகவும் எஞ்சியது இலங்கையின் ஏற்றுமதிகளாகவும் இருந்து. எனவே இலங்கைக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்க வேண்டும். இலங்கை சிங்கப்பூருக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகைப் பொருட்களையே ஏற்றுமதி செய்கிறது. எனவே இவ்வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நன்மை பெறவேண்டுமாயின் சிங்கப்பூர் கம்பனிகள் வெளிநாட்டு நேரடி முதலீட்டை மேற்கொள்ள ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையில் இருந்தான ஏற்றுமதிகளை அதிகரிக்க முடியும்.

எந்தவொரு தாராள வர்த்தக ஒப்பந்தத்திலும் நன்மை தீமைகள் இருப்பது இயல்பே. ஆனால் அதில் ஈடுபட்டுள்ள அரசாங்கங்களும் தனியார்துறை நிறுவனங்களும் எவ்வளவு தூரம் "ஸ்மார்ட்டாக" இயங்குகிறார்கள் என்பதைப் பொருட்டே இவ்வொப்பந்தங்களிலிருந்து பெறக்கூடிய நன்மை தீமைகளும் அமையும்.

கிட்டத்தட்ட இரு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை எதிர்பார்க்கப்பட்ட நன்மைகளை இன்னும் அடையமுடியவில்லை. மாறாக இலங்கை இந்தியப் பொருட்கள் குவிக்கப்படும் ஒரு இடமாக மாறியுள்ளது. இலங்கையில் இந்திய முதலீடுகள் எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகரித்ததாகவும் கூறமுடியாது.

எனவே ஒப்பந்தங்களின் ஏற்பாடுகள் எவ்வளவுதூரம் சாதகமானதாக இருந்தபோதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலேயே அதன் நன்மைகள் தங்கியுள்ளன. இலங்கையின் கடந்தகால செயலாற்றங்களுக்கும் வர்த்தக ஒப்பந்தங்களுடனான அதன் முன்னேற்றங்களுக்கும் திருப்திப் பட்டுக்கொள்ளும் நிலையில் இல்லை. நாம் ஏலவே சுட்டிக்காட்டிய "ஸ்மார்ட்டைப்" இலங்கையில் இல்லை. அது உடனடியாக வரும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. இப்போதைய புறச்சூழலில் அது சாத்தியமும் இல்லை.

 

கலாநிதி எம். கணேசமூர்த்தி,

பொருளியல்துறை,

கொழும்புப் பல்கலைக்கழகம்.

http://www.vaaramanjari.lk/2018/08/19/கட்டுரை/இலங்கை-சிங்கப்பூர்-வர்த்தக-உடன்படிக்கையை-ஏன்-எதிர்க்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.