Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திக்கு – அடிக்கல் நட்டார் மைத்திரி!!

Featured Replies

மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தியை – இன்று ஆரம்பிக்கின்றார் மைத்திரி!!

myliddy-pier-release-1-750x405.jpg

மயி­லிட்­டித் துறை­மு­கம் 425 மில்­லி­யன் ரூபா செல­வில் இரண்டு கட்­டங்­க­ளாக அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது. முதல் கட்ட அபி­வி­ருத்­திப் பணி­கள் அரச தலை­வர் மைத்­தி­ரி­ பால சிறி­சே­ன­வால் இன்று காலை 10 மணிக்கு ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இது தொடர்­பில் வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் செய­ல­ணி­யின் செய­லர் வே.சிவ­ஞா­ன­சோதி அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது-,

போருக்கு முற்­பட்ட காலத்­தில் இலங்­கை­யின் மீன்­பிடி உற்­பத்­தி­யில் 30 சத­வீ­தத்­துக்கு மேல் பங்­க­ளிப்­புச் செய்த ஒரு பிர­பல்­ய­மான மீன்­பிடி துறை­மு­கம் மயி­லிட்டி. இந்­தத் துறை­மு­கம் போரால் செய­லி­ழந்­தமை வடக்கு மாகா­ணத்­துக்­கும் தேசிய உற்­பத்­திக்­கும் பெரிய பாதிப்­பாக அமைந்­தது.

நல்­லாட்சி அர­சின் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத் திட்­டத்­தில் 150 ரூபா மில்­லி­யன் நிதி ஒதுக்­கப்­பட்­டது. இதன்­கீழ் 50 மீற்­றர் நீள­மான கப்­பல்­துறை சுவர் (குவே வோல்), ஹார்­பர் பேசின் மற்­றும் நுழை­வா­யிலை ஆழப்­ப­டுத்­து­தல், அலை தடுப்பு கட்­டு­மா­னம், அலை­தாங்கி, இறங்­கு­துறை மறு­சீ­ர­மைப்பு, எரி­பொ­ருள் நிரப்­பும் நிலை­யம், குளி­ரூட்­டப்­பட்ட அறை­கள், நீர் மற்­றும் மின்­சார வழங்­கல் என்­பன போன்­றவை அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டும்.

ஜக்­கிய நாடு­கள் அபி­வி­ருத்தி நிகழ்­சித் திட்­டத்­தின் கீழ் ரூபா 30 மில்­லி­யன் நிதி­யில் நிர்­வா­கக் கட்­ட­டம், மீன்­பிடி வலை­கள் பின்­னும் நிலை­யம், நீர்­தாங்­கி­கள், கழி­வ­றை­கள் என்­பன அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டும்.

இரண்­டாம் கட்­ட­மாக ரூபா 245 மில்­லி­ய­னில் அலைத் தடுப்பு கட்­டு­மா­னத்­தின் முழு­மை­யான மறு­சீ­ர­மைப்பு, ஏல­மி­டும் நிலை­யம், ஹார்­பர் பேசின் மற்­றும் நுழை­வா­யிலை மேலும் ஆழப்­ப­டுத்­து­தல் என்­பன மேற்­கொள்­ளப்­ப­டும் – என்­றுள்­ளது.

இன்­றைய நிகழ்­வில் மீன்­பிடி அமைச்­சர் விஜித் விஜி­த­மு­னி­சொய்சா, பிரதி அமைச்­சர் அமீர் அலி, இரா­ஜங்க அமைச்­சர் திலீப் வெத­ஆ­ராச்சி ஆகி­யோர் கலந்து கொள்­ள­வுள்­ள­னர்.

https://newuthayan.com/story/08/மயிலிட்டித்-துறைமுக-அபிவிருத்தியை-இன்று-ஆரம்பிக்கின்றார்-மைத்திரி.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திக்கு – அடிக்கல் நட்டார் மைத்திரி!!

myliddy-pier-release-1-750x405.jpg

யாழ்ப்பாணம் மயி­லிட்­டித் துறை­மு­க அபி­வி­ருத்­திப் பணி­களுக்கான அடிகல் நடப்பட்டுள்ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன  முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்­வில் மீன்­பிடி அமைச்­சர் விஜித் விஜி­த­மு­னி­சொய்சா, பிரதி அமைச்­சர் அமீர் அலி, இரா­ஜங்க அமைச்­சர் திலீப் வெத­ஆ­ராச்சி  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

https://newuthayan.com/story/11/மயிலிட்டித்-துறைமுக-அபிவிருத்திக்கு-அடிக்கல்-நட்டார்-மைத்திரி.html

  • தொடங்கியவர்

மயிலிட்டி மகா வித்தியாலயம் இரு வாரங்களில் விடுவிக்கப்படும்!- யாழில் ஜனாதிபதி உறுதி

 

President-Maithripala-720x450.jpg

யாழ்ப்பாணம் மயிலிட்டி மகா வித்தியாலயம் இரு வாரங்களுக்குள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

யுத்த காலத்தில் செயலிழந்து காணப்பட்ட மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவை தொடர்ந்து அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”மயிலிட்டி மகா வித்தியாலயத்தின் நிலை தொடர்பாக பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதனம், நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இன்று எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதன்படி குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வித்தியாலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/மயிலிட்டி-மகா-வித்தியாலய/

  • தொடங்கியவர்

மயிலிட்டி பாடசாலையும், காணிகளும் இரண்டுவாரத்தில் விடுவிக்கப்படும் – ஜனாதிபதி..

maithri-1.jpg?resize=500%2C355
பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலிருந்த வட பிரதேச காணிகளில் 88 சதவீதமான காணிகள் தற்போது அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள 12 சதவீதமும் வெகுவிரைவில் அம்மக்களிடம் கையளிக்கப்பட வேண்டுமென்ற தெளிவான கொள்கையை அரசாங்கம் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பாதுகாப்பு படையினரின் பொறுப்பில் காணப்படும் மயிலிட்டி பாடசாலை மற்றும் அதனையண்டிய காணிகளை எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் மீள் செயற்படுத்தல் நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (22) முற்பகல் இடம்பெற்றபோதே ஜனாதிபதி ; மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த மீன்பிடித் துறைமுகத்தையண்டிய தமது சொந்த நிலங்களை இழந்துள்ள மக்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுதல் நாட்டு மக்களின் பொறுப்பாகவும் குறிக்கோளாகவும் காணப்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து, தேசிய சொத்துக்களை சிதைத்து, நாட்டினை பின்னோக்கி கொண்டு சென்ற கொடூர பயங்கரவாதம் எவ்வகையிலும் மீண்டும் உருவாக இடமளிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் தமது பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றி சர்வதேசத்தினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்தும் நாட்டை விடுவித்துக்கொள்ள தற்போதைய அரசாங்கம் கடந்த மூன்று வருட காலத்தினுள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்கு நாட்டிற்கு கிடைத்துள்ள சுதந்திரத்தினை உரியவாறு சகல மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தியை மீண்டும் மேற்கொண்டு அம்மக்களின் அபிவிருத்திக்கான உரிமைகளை வென்றெடுக்கவும் அரசாங்கம் முக்கியமாக கவனம் செலுத்தி வருகின்றதென தெரிவித்தார்.

எந்தவொரு ஜனாதிபதியும் தம்மைப்போன்று வட மாகாணத்திற்கு அடிக்கடி விஜயம் செய்யவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி வடக்கு மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களுக்கான தேவைகளை வழங்க வேண்டிய தனது பொறுப்பினை உரியவாறு நிறைவேற்றவே தாம் அவ்வாறு அடிக்கடி விஜயம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் வட மாகாணம் உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் பாரிய சவாலாக மாறியுள்ள போதைப்பொருள் பிரச்சினை தொடர்பிலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சிறைச்சாலைகளில் இருந்தவாறே போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுதல் உள்ளிட்ட சட்டதிட்டங்கள் எதுவித தயக்கமும் இன்றி அமுல்படுத்தப்படுமென தெரிவித்தார்.

அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி, பிரதி அமைச்சர்கள் அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா, டி சித்தார்த்தன் உள்ளிட்ட வட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

http://globaltamilnews.net/2018/92364/

 
  • தொடங்கியவர்

மயிலிட்டி துறைமுக அடிக்கல் நாட்டும் நிகழ்வு  ஜனாதிபதி தலைமையில்

 

 

மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது.

02.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீன்பிடித்துறை அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா .பிரதி அமைச்சர் . பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் . நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோரால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

05.jpg

இதற்கமைய, முதற்கட்டத்தில் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

03.jpg

அத்துடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நிர்வாகக் கட்டிடம், மீன்பிடி வலைகள் பின்னும் நிலையம், நீர்த்தாங்கிகள், கழிவறைகள் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

7.jpg

இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் 245 மில்லியன் ரூபாவில், அலைதடுப்பு கட்டுமானத்தின் முழுமையான புனரமைப்பு, ஏலமிடும் நிலையம், நுழைவாயிலை மேலும் ஆழப்படுத்தல் முதலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

9.jpg

இந்நிகழ்வில் பெருமளவான மக்கள், மற்றும் வலி.வடக்கு பிரதேச அதிகாரிகள், பொலிஸ்மா அதிபர் என பலரும் கலந்து கொண்டனர்.

 

http://www.virakesari.lk/article/38970

  • தொடங்கியவர்

விளம்பரம் தேடும் – மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி!!

 
 
20180821_125005-780x405.jpg

வடக்கு மீன்­பி­டித் துறை­யின் புதிய அத்­தி­யா­ய­மொன்று இன்று ஆரம்­ப­மா­கி­றது. இலங்­கை­யின் மொத்த மீன்­பி­டி­யில் மூன்­றில் ஒரு பங்கை தன்­ன­கத்தே கொண்­டி­ருந்த பெருந்­து­றை­மு­கத்தை மறு­சீ­ர­மைப்­ப­தற்­கான பணி இன்று ஆரம்­பித்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இலங்­கை­யின் மீன்­பிடி
வர­லாற்­றில் ‘மயி­லிட்டி’
தனித்­து­வம் பெற்­ற­தொன்று
மயி­லிட்டி என்ற பெய­ரைத் தெரி­யா­த­வர்­களே இலங்­கை­யில் இருக்க முடி­யாது. மீன்­பிடி என்­றால் உடனே நினை­வுக்கு வரக் கூடிய பெயர். வட­ப­கு­தி­யின் மிகப்­பெ­ருந் துறை­மு­கம். மயி­லிட்டி மக்­க­ளுக்கு கடல் அன்னை வாரி வாரி இறைத்­துக் கொடுத்­தாள். மயி­லிட்­டி­யில் மீன்­பி­டித் தொழில்­துறை முத­லா­ளி­க­ளுக்கு உத­வி­யா­ளர்­க­ளாக பணி­பு­ரி­வ­தற்­கென்றே வேறு இடங்­க­ளி­லி­ருந்­தும் பலர் இங்கு வரு­வார்­கள். அப்­ப­டிக் கோலோச்­சிக் கொண்­டி­ருந்த துறை­மு­கம் மயி­லிட்டி.

1990ஆம் ஆண்­டில்
இடம்­பெ­யர்ந்­த­னர்
மயி­லிட்டி மக்­கள்
1990ஆம் ஆண்­டில் இலங்­கை­யில் இடம்­பெற்­று­வந்த போர் எல்­லா­வற்­றை­யும் புரட்­டிப்­போட்­டி­ருந்­தது. தற்­கா­லி­க­மா­கத் தானே இடம்­பெ­யர்­கி­றோம் என்ற எண்­ணத்­தில் மூன்று நாள்­க­ளில் ஊர்­தி­ரும்பி விட­லாம் என்ற நம்­பிக்­கை­யு­டன் தமது பொருள் பண்­டங்­களை போட்­டது போட்­ட­படி விட்­டு­விட்டு வெளி­யே­றி­ய­வர்­கள் மயி­லிட்டி மக்­கள். ஆனால் அது அவர்­க­ளுக்கு கன­வா­கிப் போனது. 2009ஆம் ஆண்டு வரை போர் உச்­சம். மயி­லிட்டி விடு விக்­கப்­ப­டும் என்­ப­தும், மயி­லிட்­டித்­து­றை­மு­கத்தில் இருந்து கடலுக்குச் சென்று மீன்­பி­டிக்­க­லாம் என்­ப­தும் நினைத்­துப் பார்க்க முடி­யா­த­தா­கவே இருந்­தது.

போர் முடிந்த பின்­னர் வலி.வடக்­கில் திக்­குத் திக்­காக சில பகு­தி­கள் விடு­விக்­கப்­பட்­டன. 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் வலி.வடக்­கில் 6 ஆயி­ரத்து 384 ஏக்­கர் நிலப் பரப்பு விடு­விக்­கப்­ப­டவே மாட்­டாது என்று அறி­விக்­கப்­பட்­டது.

அப்­போது பாது­காப்பு அமைச்­சின் செய­ ல­ராக இருந்த கோத்­த­பாய ராஜ­பக்­ச­வி­னால் அது தொடர்பான அர­சி­த­ழும் வெளி­யி­டப்­பட்­டது. மயி­லிட்­டித் துறை­மு­கத்­தில் மீண்­டும் கால் பதிக்­க­லாம் என்று எண்­ணி­யி­ருந்த மக்­க­ளுக்கு பெரும் ஏமாற்­றமே மிஞ்­சி­யது. இதன் பின்­னர்­தான் வலி.வடக்கு காணி விடு­விப்­புக்­கான போராட்­டம் தீவி­ர­மா­னது. வலி.வடக்கு மீள்­கு­டி­யேற்ற புனர்­வாழ்­வுச் சங்­கத்­தின் தலை­வ­ராக இருந்த அ.குண­பா­ல­சிங்­க­மும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பி­ன­ரும் இணைந்து பர­வ­லா­கப் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தார்­கள். நீதி­மன்­றில் வழக்­கும் தொடுக்­கப்­பட்­டது.

தெல்­லிப்­பழை துர்க்கை அம்­மன் கோவி­லில் அடை­யாள உணவு ஒறுப்­புப் போராட்­டம், மாவிட்­ட­பு­ரம் கந்­த­சு­வாமி கோயி­லில் தொடர் போராட்­டம், தெல்­லிப்­பழை பிர­தேச செய­லக முன்­ற­லில் போராட்­டம் என்று போராட்­டங்­கள் பரந்து விரிந்­தன. அப்­போது அரச தலை­வ­ராக இருந்­த­வர் மகிந்த ராஜ­பக்ச. அவ­ரது அமைச்­ச­ர­வை­யில் அங்­கம் வகித்­த­வர் டக்­ளஸ் தேவா­னந்தா. மகிந்­த­வின் செல்­லப்­பிள்­ளை­யாக, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் யாழ்ப்­பாண அமைப்­பா­ள­ராக இருந்­த­வர் அங்­க­ஜன் இரா­ம­நா­தன்.

மயி­லிட்டி விடு­விப்­புக்­காக
மக்­கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட
போராட்­டங்­கள் முன்­னெ­டுப்பு
மயி­லிட்டி விடு­விப்­புக்­காக மக்­கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட போராட்­டங்­கள் அர­சுக்கு எதி­ரா­கக் கிளர்ந்து எழுந்­த­பொ­ழுது, ஒட்­டுக்­கு­ழுக்­களை ஏவி அடக்கு முறை திணிக்­கப்­பட்­டது. போராட்­டங்­க­ளில் கலந்து கொண்­ட­வர்­கள் மீது தாக்­கு­தல், போராட்­டங்­க­ளுக்கு மக்­களை ஏற்றி வந்த சிற்­றூர்­தி­க­ளின் கண்­ணாடி உடைப்பு, கழிவு ஒயில் வீச்சு, மக்­களை சிற்­றூர்­தி ­க­ளில் ஏற்றி வரும்­போது வீதி­யில் முள்­தைத்த பலகை வைத்­தல் என்று போராட்­டத்தை ஒடுக்­கு­வ­தற்­கான பலம் பயன்படுத்தப்பட்டது. இவை எல்­லா­வற்­றுக்­கும் மேலாக நலன்­புரி நிலை­யங்­க­ளில் தங்­கி­யி­ருந்த மக்­க­ளுக்கு நேர­டி­யா­கச் சென்று கொலை மிரட்­டல்­கள் விடுக்­கப்பட் டன

இவை எல்­லா­வற்­றை­யும் தாண்­டித்­தான் போராட்­டங்­கள் நடந்­தன. இந்­தப் போராட்­டங்­க­ளின் சேதா­ரங்­க­ளுக்கு கூட்­ட­ மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே தங்­கள் பணத்­தைக் கொடுத்­தார்­கள். போராட்­டங்­கள் தொடர்ந்து நடத்­து­வ­தற்கு பக்­க­ப­ல­மாக இருந்­தார்­கள்.

மயி­லிட்டி உள்­ளிட்ட காணி­கள் விடு­விக்­கப்­ப­டாது என்று அர­சி­தழ் அறி­விப்பு வெளி­யா­ன­போது ஏன் என்று கேள்வி கேட்­கா­த­வர்­கள், போரா­டிய மக்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­போது கண்­டிக்­காது கைகட்டி வேடிக்கை பார்த்­த­வர்­கள், இப்­போது மயி­லிட்டி விடு­விப்­புக்கு உரிமை கோரு­கின்­றார்­கள். வீதி­கள் எங்­கும் சுவ­ரொட்­டி­கள் ஒட்­டு­கின்­றார்­கள்.

இதை­தான் ஊர் வழக்­கத்­தில் சொல்­லு­வார்­கள், ‘‘சூரி­ய­னும், சந்­தி­ர­னும் பேசா­மல் இருக்க விளக்கு விளம்­ப­ரம் தேடிச்­சாம்’’ என்று!

https://newuthayan.com/story/11/விளம்பரம்-தேடும்-மயிலிட்டித்-துறைமுக-அபிவிருத்தி.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.