Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மைத்திரியை எத்தனை தடவை சந்தித்தீர்கள்

Featured Replies

16833.jpg

மயிலிட்டி துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டு வதற்காக நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார்.

மயிலிட்டி துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டிவைத்த பின் நடந்த கூட்டத்தில் இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று இலங்கைத் தமிழ ரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராசா கேட்ட கேள்வி நியாயமானதாயினும் மயி லிட்டி துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டுகின்ற இடத்தில் வைத்துக் கேட்பதன் ஊடாக இனப் பிரச்சினைக்கான தீர்வை ஜனாதிபதி மைத்திரி முன்வைத்து விடுவாரா இல்லை என்பது மாவை சேனாதிராசா அவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆக, மாவை சேனாதிராசாவின் மேற்போந்த கோரிக்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதற்கப்பால், தனது இந் தக் கோரிக்கையை தமிழ் மக்கள் அறிய வேண்டும்.

அவ்வாறு அறிந்தால் அது தனக்கான அரசியல் வெற்றி என்பது அவரின் உள்நோக் கம் என்பதாக இருந்துள்ளமை புரிதற்குரியது.

இவை ஒருபுறம் இருக்க, ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறு வதற்கு தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய வாக்குகளே காரணமாகும்.

அவருக்கான தமிழ் மக்களின் ஆதரவு என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதற்கமையவே வழங்கப்பட்டதாகும்.

எனினும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி பால சிறிசேனவை தமிழ் மக்கள் ஆதரிப்பதற்காக, அவர் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்றவாறான எந்த நிபந்தனை களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைக்கவில்லை.

இதுதான் என்றால், பிரதமர் ரணில் விக் கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரே ரணையைத் தோற்கடிப்பதற்கு வழங்குகின்ற ஆதரவுக்காகவும் எந்த நிபந்தனையையும் கூட்டமைப்பு வெளிப்படுத்தவில்லை.

இவ்வாறு நல்ல சந்தர்ப்பங்களைத் தவற விட்டு விட்டு மயிலிட்டியில், மன்னாரில், கிளி நொச்சியில் வைத்து பொதுவெளியில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் எனக் கேட்பது எங்களின் பலவீனத்தையும் தமிழ் அரசியல் தரப்பின் பலவீனத்தையுமே காட்டி நிற்கும்.

ஆக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமாக நிற்பதால் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து எங்கள் நிலைமையை எடுத்துரைக்க முடியாதவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினர் உள்ளனர்.

இதைக்கூறும்போது யாரேனும் முகத்தைச் சுழித்துக் கொண்டால்; நாம் கேட்பதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி நிலையில் இருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் அவர் தரப்பும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவைச் சந்தித்த தடவைகள் எத் தனை என்பதைக் கூறினால் அதுபோதுமான தாக இருக்கும்.

தமிழ் அரசியல் தலைமை என்றால் ஆட்சித் தலைவர்களைச் சந்தித்து எங்கள் பிரச்சினையை ஆணித்தரமாக எடுத்துரைக்க வேண்டும். இதைவிடுத்து ஏதோ கேட்க வேண்டிய இடத்தில் எதையோ கேட்பது எந்த வகையிலும் பொருத்தப்பாடாகாது.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=16833&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

199_D7_AAC-9041-4_E2_A-9_EA4-7_B2682180_

Edited by Kavi arunasalam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.