Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனே வன்முறை தொடர்பாக 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது

Featured Replies

புனே வன்முறை தொடர்பாக 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது

இந்த ஆண்டு தொடக்கத்தில் மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் நடைபெற்ற சாதி அடிப்படையிலான வன்முறை தொடர்பாக 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செயற்பாட்டாளர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான செயற்பாட்டாளர் கௌதம் நவ்லாகா

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை தொடர்பான விசாரணையில், பிற இடது சாரி வழக்கறிஞர்கள் மற்றும் அறிஞர்களின் வீடுகளில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணை தொடர்பாக ஜூன் மாதம் மாவோயிஸ்டுகளோடு தொடர்புடையதாகக் குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நடைபெற்ற மிக பெரியதொரு பேரணியில் இந்த செயற்பாட்டளர்கள் தலித்துகளை தூண்டிவிட்டதால் நடைபெற்ற வன்முறையால் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பீமா கோரகான் சண்டையின் 200வது ஆண்டை நினைவுகூர்வதற்கு புனே நகரில் தலித் குழுக்கள் கூடியிருந்தன. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான முதல் சண்டையாக பிரிட்டிஷ் காலனியாதிக்க படைப்பிரிவுகேளோடு சேர்ந்து உயர் சாதி ஆட்சியாளருக்கு எதிராக தலித்துக்கள் சண்டையிட்டதுதான் கோரகான் மோதல்.

எராவாரா ராவ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஹைதராபாத் நகரில் கைது செய்யப்பட்ட வரவர ராவ்

எல்கார் பரிஷெத் வழக்கு தொடர்பாக மும்பையிலுள்ள செயற்பாட்டளர்கள் வெர்னன் கொன்சாலஸ் மற்றும் அருண் ஃபெரிரா வீடுகளில் புனே காவல்துறையினர் இன்று தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.

சோதனைக்கு பின்னர், அவர்களை காவல்துறையினர் புனேவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பிபிசியிடம் பேசிய கொன்சாலஸின் மகன் சுனில் கொன்சாலஸ், "காவல்துறையினர் எங்கள் வீட்டுக்கு காலை 6 மணிக்கு வந்தனர். பிற்பகல் 1.30 மணி வரை வீட்டில் இருந்தனர். வீடு முழுவதும் சோதனையிட்ட அவர்கள், புத்தகங்களை சோதனையிட்டதோடு,கணினியின் டிஸ்க் மற்றும் செல்பேசிகளை கொண்டு சென்றனர். எங்கள் பென் டிரைவ்களையும் பரிசோதனை செய்தனர். எல்லா இடங்களில் கிடைக்கின்ற இலக்கியங்களையும் அவர்கள் எங்கள் வீடுகளில் இருந்து எடுத்து சென்றுள்ளனர். என்னுடைய வரலாற்று புத்தகமான "போல்ஷிவிக் புரட்சி" புத்தகத்தை கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலைமையில் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

செயற்பாட்டாளர் அருண் ஃபெரீராவும் தானேயிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று மதியம் புனேவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஹைதராபாத், டெல்லி, மும்பை, மும்பை, ராஞ்சி போன்ற பல்வேறு இடங்களில் தேடுதல் நடைபெற்று வருவதை இந்த புலனாய்வின் ஒரு பகுதியாக இருக்கின்ற புனே மூத்த காவல்துறை அதிகாரி உறுதி செய்துள்ளார்.

காவல்துறையால் தேடுதல் வேட்டை நடத்தப்படுகின்ற வீடுகள் மற்றும் அலுவலகங்களில், டெல்லியிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளரும், பத்திரிரகையாளருமான கௌதம் நவ்லாகா, ஹைதராபாத்திலுள்ள எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான வரவர ராவ், மும்பையிலுள்ள செயற்பாட்டாளர் வெர்னன் கொன்சால்வஸ் மற்றும் அருண் ஃபெரீரா, டெல்லியிலுள்ள சிவில் உரிமைகள் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் மற்றும் ராஞ்சியிலுள்ள ஸ்டான் சுவாமி ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களும் அடங்குகின்றன.

இந்த கைதுகளுக்கு எதிராக பல்வேறு தரப்பிலும் இருந்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

https://www.bbc.com/tamil/india-45332900

  • தொடங்கியவர்

செயற்பாட்டாளர்கள் அதிரடியாக கைது: போலீசார் கூறும் காரணம் என்ன?

கைது செய்யப்பட்ட பிரபல செயற்பாட்டாளர்கள்: போலீசார் கூறும் காரணம் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியா எங்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) பல சமூக மற்றும் சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வீடுகளில் போலீசார்சோதனைகள் நடத்தினர். முக்கிய செயற்பாட்டாளரான வரவர ராவ் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரவர ராவின் வீடுகள் மற்றும் அவரது மகள்களின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

வரவர ராவை தவிர போலீசார் அருண் ஃபெரேரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோரை மும்பையில் கைது செய்துள்ளனர், சிவில் உரிமைகளுக்கான மக்கள் யூனியனை (பியூடிஆர்) சேர்ந்த சுதா பரத்வாஜை ஹரியானாவிலும், டெல்லியில் பியூடிஆரை சேர்ந்த கெளதம் நவ்லாகாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 பிரபல செயற்பாட்டாளர்கள்: பின்ணணி என்ன?படத்தின் காப்புரிமைBBC / ALOK PUTUL

ஹைதராபாத், மும்பை, டெல்லி, ராஞ்சி ஆகிய பல இடங்களில் இந்த சோதனைகள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

குறிப்பாக செயற்பாட்டாளர் ரோனா வில்சனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம் தொடர்பாக இந்த கைதுகள் நடந்துள்ளன. ஆனால், சிவில் உரிமைகள் அமைப்பு மற்றும் இடதுசாரி அமைப்புகள், இந்த நடவடிக்கைகள் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை குற்றவாளிகளாக்க மற்றும் ஒடுக்க செய்யப்படும் ஒன்றே தவிர வேறொன்றுமில்லை என்று கூறுகின்றன.

இந்த நடவடிக்கைகள் குறித்து புனே போலீசின் சட்டம் ஒழுங்கு பிரிவின் இணை ஆணையரான சிவாஜி போடாக்கே பிபிசியின் வினீத் கரேயிடம் கூறுகையில், ''இவர்கள் மாவோயிஸ்ட் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளுக்கு முக்கிய பின்புலம் இவர்கள்தான். இது தொடர்பான குற்றப்பத்திரிகை எப்போது பதிவு செய்யப்படும் என்பது நாளை முடிவு செய்யப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரத்தை நாங்கள் நீதிமன்றத்தில் சமர்பிப்போம். பொதுவெளியில் அதனை பகிர முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பிரபல செயற்பாட்டாளர்கள்: போலீசார் கூறும் காரணம் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக கொலை சதி செய்யப்படுவதாக கூறப்படும் கடிதம் குறித்து கடிதம் பற்றி கேட்டதற்கு, 'கருத்து கூற விரும்பவில்லை' என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, 'பஞ்சநாமா (போலீஸ் ஆவணம்) அறிக்கையை உள்ளூர் மொழியில்தான் அளித்திருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு அதனை மராத்தியில் தந்துள்ளார்கள்' என்று வரவர ராவின் நெருங்கிய உறவினரும், மூத்த பத்திரிகையாளருமான என். வேணு கோபால் குறிப்பிட்டார்.

செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷன் இந்த சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். போலீசார் பதிவு செய்த ஆவணத்தில், வரவர ராவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் பற்றிய விவரம் வேறு எதுவும் இல்லை.

மஹாராஷ்டிராவின் பீமா கோரேகான் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளியிடப்பட்ட புனே காவல்துறை ஆணையரின் அறிக்கையை தவிர , இந்த சோதனை நடவடிக்கைகள் எந்த காரணத்தினால் நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்களை போலீஸ் வெளியிடவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த கைது? எல்கார் பரிஷத் செய்தது என்ன?

இந்த ஆண்டு ( 2018) ஜூன் மாதத்தில் மஹாராஷ்டிராவின் பீமா கோரேகான் பகுதியில் சில ஆர்ப்பாட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன.

கைது செய்யப்பட்ட பிரபல செயற்பாட்டாளர்கள்: போலீசார் கூறும் காரணம் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எல்கார் பரிஷத் அமைப்பின் பெயரில் தலித் அறிவுஜீவிகள் மற்றும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் ஆத்திரமூட்டும் உரைகளை நிகழ்த்தியதாக குற்றம்சாட்டி போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

ரோனா வில்சன் உள்பட 5 பேர் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீமா கோரகான் சண்டையின் 200வது ஆண்டை நினைவுகூர்வதற்கு புனே நகரில் தலித் குழுக்கள் கூடியிருந்தன. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான முதல் சண்டையாக பிரிட்டிஷ் காலனியாதிக்க படைப்பிரிவுகேளோடு சேர்ந்து உயர் சாதி ஆட்சியாளருக்கு எதிராக தலித்துக்கள் சண்டையிட்டதுதான் கோரகான் மோதல்.

பிரதமர் நரேந்திர மோதியை கொல்ல சதி?

டெல்லியை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான ரோனா வில்சனிடம் இருந்து மாவோயிஸ்டுகள் எழுதிய ஒரு கடிதத்தை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது போல தற்போதைய பிரதமர் நரேந்திர மோதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், இந்த சதித்திட்டத்துக்கு வரவர ராவ் நிதியுதவி அளிப்பதாகவும் சில தகவல்கள் இந்த கடிதத்தில் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரபல செயற்பாட்டாளர்கள்: போலீசார் கூறும் காரணம் என்ன?படத்தின் காப்புரிமைEPA

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள வரவர ராவ், இவை பொய்யான தகவல்கள் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய் நிருபம் உள்பட சில தலைவர்கள் மற்றும் பல ஆர்வலர்கள், அமைப்புகள் இந்த கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து தங்களின் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறைந்து வரும் தங்கள் செல்வாக்கினை நிலைநிறுத்தவும், மக்களிடம் அனுதாபத்தை சம்பாதிக்கவும் மோதி அரசு இது போன்ற நாடகங்களை நடத்துவதாக அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நகர்ப்புற மாவோயிஸ்ட்கள்

அண்மைய காலமாக 'நகர்ப்புற மாவோயிஸ்ட்கள்' என்ற சொற்றொடரை மத்திய அரசு பயன்படுத்துகிறது.

பீமா கோரேகான் கலவரத்தின்போதும், அதற்குப்பிறகு குறிப்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாய்பாபாவின் கைதின் போதும் சில நகர்ப்புற நக்சல் அமைப்பினர் பெருநகரங்களில் தங்கள் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் அவர்கள் முக்கியத்துவம் பெற முயல்வதாக மத்திய அரசு கூறுகிறது. அதன் பிறகு பல விவாதங்களில் இந்த வார்த்தை அடிக்கடி இடம்பெறுகிறது.

கைது செய்யப்பட்ட பிரபல செயற்பாட்டாளர்கள்: போலீசார் கூறும் காரணம் என்ன?படத்தின் காப்புரிமைGONZALVIS

'தங்களின் இருப்பை தெரியப்படுத்தவும், முக்கியத்துவம் பெறவும் முயன்று வரும் மாவோயிஸ்டுகளுக்கு பலர் பல்வேறு விதங்களில் உதவி வருகின்றனர்' என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரோனா வில்சனின் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கடிதம் தொடர்பாக நடத்தப்பட்ட கைது நடவடிக்கைகள் இதையொட்டியே நடைபெற்றுள்ளது.

நக்சல் அமைப்பினர் முன்பு போல் அல்லாமல் தங்கள் செயல்பாடுகளில் தீவிரமாக இல்லை என அரசு கூறி வருகிறது. இதே கருத்தை ஊடகங்களிடம் பேசியபோது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தலித் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் போராடிவரும் சில வழக்கறிஞர்கள் மற்றும் பேராசிரியர்களின் நடவடிக்கைகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.

இன்றைய நடவடிக்கையின் மூலம் தனது எண்ணத்தை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தீவிர இடதுசாரி அனுதாபிகளாக கருதப்படும் நகர்ப்புற அறிவுஜீவிகள் மீது தற்போது அரசின் கவனம் திரும்பியுள்ளது தெரியவருகிறது.

இந்த நாடு எங்கே செல்கிறது?

'பட்டப்பகலில் மக்களை கொல்லும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலித் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் வீடுகளில் இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. நாடு எங்கே செல்கிறது என்பதை இது காட்டுகிறது. இதற்கு நியாயம் கேட்டோ அல்லது பெருமபான்மை இந்து சமூகத்திற்கு எதிராக ஏதாவது குரல் கொடுத்தாலோ அவர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்படுகின்றனர். வரவிருக்கும் தேர்தல்களுக்காக இவை செய்யப்படுகின்றனவா?' என்று எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் பிபிசியிடம் தெரிவித்தார்.

செயற்பாட்டாளர்கள் மீது குற்றம்சாட்டி அவர்களை தண்டிப்பதன் மூலம் பிரதமர் மோதி அனுதாபம் பெற விரும்புகிறார் என்று மனித உரிமை ஆர்வலர் வி.எஸ். கிருஷ்ணா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பிணை கிடைக்க சிரமமாக உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குகளை பதிவுசெய்து, எதிர்ப்பு குரல்களை அடக்க நினைக்கிறது என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-45331385

  • தொடங்கியவர்

செயற்பாட்டாளர்கள் கைது: வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட ஐந்து செயற்பாட்டாளர்களையும் வரும் வியாழக்கிழமை வரை வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செயற்பாட்டாளர்கள் கைது: வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா மற்றும் வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் செயற்பாட்டாளருமான பிரஷாந்த் பூஷண் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அந்த மனுவை புதன்கிழமை விசாரித்தது. இடைக்கால நடவடிக்கையாக, கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் ஐந்து பேரையும் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வியாழக்கிழமை வரை அவர்களது சொந்த வீட்டில் காவலில் வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

இதற்கிடையில், மகாராஷ்டிர அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. அந்த பதில் தொடர்பாக வேறு எந்தத் தரப்பாவது பதில் மனு தாக்கல் செய்ய விரும்பினால் அடுத்த நாள் தாக்கல் செய்யலாம் என்றும், அடுத்த விசாரணை 6-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செயற்பாட்டாளர்கள் கைது: வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவுபடத்தின் காப்புரிமைபடத்தின் காப்புரிமைGONZALVIS

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிராவின் பீமா கொரேகானில் நடந்த கலவரம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். வரவர ராவைப் பொருத்தவரை, பிரதமர் நரேந்திர மோதியை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

ஏற்கெனவே, சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா ஆகிய இருவரும் டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை மகாராஷ்டிர போலீசார் புனே நகருக்கு கொண்டு செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. அதையடுத்து, அவர்கள் இருவரும் டெல்லியில் வீட்டுக் காவலில் வைக்கபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயற்பாட்டாளர்கள் கவுதம் நவ்லாகா மற்றும் சுதா பரத்வாஜ் ஆகிய இருவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதனால், இடைக்கால நடவடிக்கையாக, வரவரராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னோன் கொன்சால்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டால் அவர்களும் வீட்டுக் காவலிலேயே வைக்கப்படுவதில் ஆட்சேபணையில்லை என்று தெரிவித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவ்வாறே உத்தரவிடுவதாக அறிவித்தனர்.

தங்களது உத்தரவின் அடிப்படையில், டெல்லியில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட கவுதம் நவ்லாகா மற்றும் சுதா பரத்வாஜ் ஆகியோரை தொடர்ந்து அப்படியே வைக்கவும் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பான விவாதத்தின்போது, `சம்பவம் நடைபெற்று ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்களைக் கைது செய்வது ஏன்? அவர்கள், ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக குரல் கொடுக்கிறார்கள்' என்று நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்..

மேலும், `ஜனநாயகத்தில், எதிர்ப்பு என்பது ஒரு பாதுகாப்பு வால்வைப் போன்றது. அதை அழுத்த முயன்றால் வெடித்துவிடும்' என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் யாரும் இல்லாத நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்று மகாராஷ்டிர அரசின் சார்பில் வாதிடப்பட்ட போதிலும், இது மிக முக்கியப் பிரச்சனை என்று கூறி அந்த வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர்.

பீமா கோரேகானில் ஜனவரி 1-ஆம் தேதி நடந்த கலவரம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத்தான் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மகாராஷ்டிர அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் நடத்த திட்டம்

இந்த மாவோயிஸ்டுகளுக்கு மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், தற்போதுள்ள அரசியல் நடைமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் புனே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பிற சட்டவிரோத குழுக்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும், பெரிய அளவிலான சதித்திட்டத்தில் ஈடுபாடு இருப்பது குறித்தும் வலுவான ஆதாரங்கள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 35 கல்லூரிகளில் இருந்து உறுப்பினர்களை தங்கள் குழுவில் சேர்த்து, தாக்குதல் நடத்த செயற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ரொமிலா தாபர், தேவிக ஜெயின், சதீஷ் தேஷ்பாண்டே உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க மகாராஷ்டிர அரசு முயல்வதாகவும், ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுப்பதை தடுத்து, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முயல்வதாவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கையில் அவர்களது பெயர் இல்லாத போதிலும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மூத்த வழக்கறிஞர்கள் பிரஷாந்த் பூஷண், அபிஷேக் சிங்வி, இந்திரா ஜெய்சிங், ராஜு ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்க முயல்வதாக சிங்வி வாதிட்டார். சுதா பரத்வாஜ் மற்றும் கவுதம் நவ்லாகா ஆகியோர் டெல்லியில் இருந்து புனேவுக்கு அழைத்துச் செல்வதற்கான டிரான்சிட் ரிமாண்ட் மட்டுமே தடை செய்யப்பட்டிருப்பதாகவும் மற்ற மூவர் உள்பட ஐந்து பேரையும் அடுத்த விசாரணை வரை வீட்டுச் சிறையிலேயே வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

வரவர ராவ் உள்பட மூவரும் புனே நகருக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் சொந்த வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்படுவார்களா அல்லது புனே நகரில் விருந்தினர் இல்லங்களில் வைக்கப்படுவார்களா என்பது நீதிமன்ற உத்தரவில் தெளிவுபடுத்தப்படவில்லை.

https://www.bbc.com/tamil/india-45343820

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.