Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணி வெடி அகற்றல் - ஒருவர் மரணம்

Featured Replies

மிதிவெடி வெடிப்பு ; ஒருவர் பலி, ஒருவர் காயம்

 

 

மாங்குளம் பகுதியில் மிதி வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

vavuniya.jpg

சம்பவத்தில் உயிரிழந்தவர் 28 வயதுடையவர் ஆவார். அத்துடன் காயமடைந்த 25 வயதுடைய நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் முன்னெடுக்கப்படும் மிதி வெடிகள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிந்தே போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

http://www.virakesari.lk/article/39645

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குளத்தில், கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கையின் போது நடந்த வெடி விபத்தில், காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரில் ஓமந்தை பகுதியை சேர்ந்த வயது 25 நிசாந்தன் சிகிச்சை பலன் இன்றி மரணித்தார்.

http://www.dailymirror.lk/article/One-killed-one-injured-while-de-mining-154989.html

ஆபத்தான வேலையில் ஈடுபட்டு உயிர் தந்த, நிசாந்தன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

மிதிவெடி வெடித்ததில் மேலும் ஒருவர் பலி

 

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மதி வெடியகற்றும் போது காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பணியாளர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

MITHI.jpg

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை மிதிவெடி அகற்றும்  பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வெடி பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா, ஓமந்தையைச் சேர்ந்த 25 வயதுடைய  நிதர்சன் என்பவராவார். 

http://www.virakesari.lk/article/39823

 

 

மாங்குளம் மிதி வெடி விபத்தில் காயம் அடைந்தவரும் மரணம்…

Nitharsan.jpg?resize=339%2C360

 

மாங்குளம் பகுதியில் மிதி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிந்த போது குண்டு வெடித்ததில் படுகாயமடைந்தவரும் இன்று(05.09.18) பிற்பகல் உயிரிழந்துள்ளார். கடந்த மூன்றாம் திகதி மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த வவுனியா ஓமந்தையைச் சேர்ந்த இராஜேந்திரன் நிதர்சன் (28) என்பவரே இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிசைப்பெற்று வந்த நிலையில் இன்று(05) மாலை நான்கு மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை நேற்றையதினம்(04) இவரின் கர்ப்பிணியான மனைவி நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்ற போது உறவினர்களால் காப்பாற்றப்பட்டு பின்னர் சிகிசைக்கு பின் வழமைக்கு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஏற்கனவே உயிரிழந்த கிளிநொச்சியை சேர்ந்த பத்மநாதன் திலீபனின் மனைவியும் நிறைமாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2018/94371/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.