Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்புச் சட்டையில் மு.க அழகிரி.... தொடங்கியது அமைதிப் பேரணி!

Featured Replies

கருணாநிதி நினைவிடத்துக்கு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் இன்று அமைதிப் பேரணி

 

 
newPic1624jpgjpg

மு.க.அழகிரி | கோப்புப் படம்.

சென்னை அண்ணா சாலையிலி ருந்து கருணாநிதி நினைவிடம் வரை தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று அமைதிப் பேரணி நடத்துகிறார்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைந்து சில நாட்கள் அமைதியாக இருந்த அழகிரி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘‘கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர்'' என்றார்.

 

இதைத் தொடர்ந்து செப். 5-ம் தேதி கருணாநிதி நினை விடத்துக்கு அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையிலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை அழகிரி அமைதிப் பேரணி நடத்துகிறார். இதுதொடர்பாக அழகிரி கூறும்போது, ‘‘பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். எனது அடுத்தகட்ட நடவடிக் கையை பேரணியின் முடிவில் அறிவிப்பேன்'' என்றார்.

திமுக நிர்வாகி நீக்கம்

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அழகிரியை வரவேற்ற சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் மு.ரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24869126.ece?utm_source=HP&utm_medium=hp-latest

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலைஞ்சருக்கே நாடு தாங்கல.. ?

alagiri-postera-1536118106.jpg

அசுர குரு சுக்ராச்சாரியாருக்கும் தேவ குரு பிரகஸ்பதிக்கும் "டப் கொம்படிசன்" கொடுக்கினம்.. ?

alagiri-poster23334-1536118016.jpg

பேரு    "பாட்டில் மணி"   .. ஒரே டமாஸ்தான் ?

  • தொடங்கியவர்

கறுப்புச் சட்டையில் மு.க அழகிரி.... தொடங்கியது அமைதிப் பேரணி! #LiveUpdates

 

கரங்கள் கோர்ப்போம், கழகம் காப்போம்:

மு.க அழகிரி தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டுள்ள அவரது ஆதரவாளர்கள் பெரிய பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில் கரங்கள் கோர்ப்போம், கழகம் காப்போம் என்று எழுதப்பட்டுள்ளது. 

kara_11392.jpg

 

 

பேரணியின் முடிவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அழகிரி அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். 

மு.க அழகிரி தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணிக்காக சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 

ala_auto_11345.jpg

பேரணியில் தனது ஆதரவாளர்களுடன் பேசும் மு.க அழகிரி....... 

ala_11311.jpg

கறுப்புச் சட்டை அணிந்து மு.க அழகிரி அமைதிப் பேரணி தொடங்கும் திருவல்லிக்கேணி பகுதிக்கு வந்தார். அவரின் மகன் தயாநிதி அழகிரியும் உடன் உள்ளார். இதைத்தொடர்ந்து அமைதிப் பேரணி தொடங்கியது.

mask_11166.jpg

அழகிரி சார்பில் நடத்தப்படும் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அழகிரி மாஸ்க் அணிந்துள்ளனர். பேரணியில் கலந்துகொண்டுள்ளவர்கள் அழகிரி படங்கள் கொண்ட பதாகைகளை கையில் கொண்டுள்ளனர். 

 

அழகிரியின் அமைதிப் பேரணி

அமைதிப் பேரணி தொடங்கும் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் வரை அதிக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ala1_10590.jpg

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரின் மகனாக மு.க அழகிரி, தன்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் நான் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்வேன் என வலியுறுத்திவந்தார். இதற்கிடையில் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதியின் 30-வது நாள் நினைவுநாள் அமைதிப் பேரணி நடைபெறும் என்றும் இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார். இன்று அந்தப் பேரணி தொடங்கவுள்ள நிலையில், நேற்று இரவு முதல் மதுரையில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு கருணாநிதியின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டது.

malar_10444.jpg

இன்று காலை 10 மணியளவில் அமைதிப்பேரணி தொடங்கவுள்ளது. இதற்காக மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்து அழகிரியின் ஆதரவாளர்கள் சென்னை வந்துள்ளார்கள். 

https://www.vikatan.com/news/tamilnadu/136004-azhagiris-silent-march-to-marina.html

  • தொடங்கியவர்

அழகிரியின் அமைதிப் பேரணி ஆரம்பமானது: ஆதரவாளர்கள் தொகையில் ஏமாற்றம்

 

sgs-720x450.png

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரின் ஆதரவாளர்கள் ஒன்று கூடும் அமைதிப்பேரணி ஆரம்பமாகியுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டதற்கு இணங்க இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என்ற போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க 2000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடபடுத்தப்பட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஆதரவாளர்கள் உன்று கூடுவார்கள் என அழகிரி தெரிவித்திருந்தார்.

எனினும் இதுவரையில் 15000 க்கும் உட்பட்ட ஆதரவாளர்களே கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரணியில் கலந்து கொண்டுள்ளவர்கள் கறுப்பு சட்டையணிந்துள்ள நிலையில் அஞ்சா நெஞ்சன் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளையும் ஏந்தியவாறு கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த பேரணி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை செல்லவுள்ள நிலையில், அங்கு தொண்டர்கள் முன் உரையாற்றும் மு.க. அழகிரி தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://athavannews.com/கருணாநிதி-நினைவிடத்தை-நோ/

  • தொடங்கியவர்

மெரினா வந்தடைந்தது அமைதிப் பேரணி; அஞ்சலி செலுத்திய அழகிரி

அழகிரி தலைமையில் திருவல்லிக்கேணியில் தொடங்கிய அமைதிப் பேரணி தற்போது சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தை அடைந்துள்ளது. அங்கு அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

https://www.vikatan.com/news/tamilnadu/136004-azhagiris-silent-march-to-marina.html

  • தொடங்கியவர்

``பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்துகொண்டனர்” - அஞ்சலி செலுத்திய அழகிரி பேட்டி#LiveUpdates

 

ala_cr_12466.jpg

ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்!

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க அழகிரி, ``கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கத்துடனும் இது நடத்தப்படவில்லை. பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்” என்றார். 

 

 

ala_mic_12013.jpg

அழகிரி தலைமையில் திருவல்லிக்கேணியில் தொடங்கிய அமைதிப் பேரணி தற்போது சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தை அடைந்துள்ளது. அங்கு அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

 

 

ala_mala_12046.jpg

https://www.vikatan.com/news/tamilnadu/136004-azhagiris-silent-march-to-marina.html

  • தொடங்கியவர்

‘ஸ்டாலினுக்கும் எனக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை'- பேரணிக்கு முன் அழகிரி பேட்டி

3349_thumb.jpg
 

`தனக்கும் ஸ்டாலினுக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை. குடும்பத்தில் எதுவும் இல்லை' என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

அழகிரி

தன்னை தி.மு.க-வில் இணைக்க வலியுறுத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க அழகிரி இன்று சேப்பாக்கம் முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி மேற்கொண்டு வருகிறார். பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கறுப்புச்சட்டை அணிந்து கலந்துகொண்டுள்ளனர்.

 

 

பேரணியில் கலந்துகொள்ளும் முன்பு மு.க அழகிரி ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ``கலைஞர் இறந்து இன்றுடன் முப்பது நாள் ஆகிறது. இந்த நாளில் பேரணி நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள அவரின் விசுவாசிகள் கேட்டுக்கொண்டனர். அதன் பின்னரே  தீர்மானிக்கப்பட்டு பேரணி நடைபெறுகிறது. என்னைக் கட்சியில் சேர்க்கவில்லை என்றால் தொண்டர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட முடிவுகள் அறிவிக்கப்படும். என்னைக் கட்சியில் இணைப்பது தொடர்பாக இதுவரை அவர்கள் (ஸ்டாலின்) தரப்பில் இருந்து என்னிடம் யாரும் பேசவில்லை. நானும் அவர்களிடம் பேசவில்லை. என்னைக் கட்சியில் சேர்த்தால் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் அதை ஊடகங்கள் பிரித்து, `நான் அவரைத் தலைவராக ஏற்கத் தயார்' எனக் கூறிவருகின்றனர். எங்கள் இருவருக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை உள்ளது. குடும்பத்தில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 

https://www.vikatan.com/news/politics/136017-mk-alagiri-speaks-about-his-rally-in-chennai.html

  • தொடங்கியவர்

'வந்தது 1 லட்சம் அல்ல; பத்தாயிரம்தான்!' - அழகிரியைக் கொதிக்க வைத்த ஆதரவாளர்கள் 

 

இன்று காலை 7 மணியில் இருந்தே பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்தபடியே இருந்தார் அழகிரி. 'வெயில் தொடங்குவதற்குள் பேரணியை ஆரம்பித்துவிட வேண்டும்' என நினைத்தார்.

'வந்தது 1 லட்சம் அல்ல; பத்தாயிரம்தான்!' - அழகிரியைக் கொதிக்க வைத்த ஆதரவாளர்கள் 
 

தி.மு.க தலைமைக்கு எதிராக நடந்த அமைதிப் பேரணி வெற்றியடையாமல் போனதில் மிகுந்த கொதிப்பில் இருக்கிறார் அழகிரி. 'பேரணியில் ஸ்டாலினுக்குக் கெடு விதிக்கும் முடிவில் இருந்தார். மெரினாவில் எதிர்பார்த்த கூட்டம் கூடாததால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் அழகிரி' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதியை நோக்கி இன்று அமைதிப் பேரணி நடத்தினார் மு.க.அழகிரி. கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கத்துடனும் நடத்தப்படவில்லை. பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி. இந்தப் பேரணியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்” என்றார். இதைக் கூறும்போது அவர் முகத்தில் பெரிதாக எந்த உற்சாகமும் தென்படவில்லை. 

அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். "தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் வீட்டில் யாராவது பெரியவர் இறந்து போனால், முப்பதாவது நாள் காரியத்தை கடைபிடிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் கருணாநிதி மறைந்த முப்பதாவது நாளில் அமைதிப் பேரணி நடத்த முடிவு செய்தார் அழகிரி. 'மீண்டும் தி.மு.கவில் இணைந்து செயல்பட வேண்டும்' என்பதுதான் அவரது நோக்கம். ஆனால், இதுகுறித்து ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. ஒருகட்டத்தில், 'கருணாநிதி இருக்கும்போதே பதவிக்கு ஆசைப்படாதவன் நான். கட்சியில் சேர்த்துக் கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்' என ஒருபடி கீழிறங்கி வந்து பேசினார். அப்போதும் அறிவாலயத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் ஆத்திரப்பட்டவர், 'நாம் யார் என்பதைக் காட்டியாக வேண்டும். 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் வரையில் பேரணியில் திரள வேண்டும்'  என உத்தரவிட்டார். மாவட்டத்துக்கு 50 வாகனங்கள்; தலைக்கு 500 ரூபாய் என பத்து நாள்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்களை அழைத்து வருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எங்கள் திட்டப்படி பெரிதாக எதுவும் நடக்கவில்லை" என ஆதங்கத்துடன் விவரித்தவர், 

 

 

அழகிரி நடத்திய பேரணி

"சென்னையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு நேற்றே வந்துவிட்டார் அழகிரி. இன்று காலை 7 மணியில் இருந்தே பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்தபடியே இருந்தார். 'வெயில் தொடங்குவதற்குள் பேரணியை ஆரம்பித்துவிட வேண்டும்' என நினைத்தார். ஆனால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் கூடவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துவிட்டார். 'கூட்டம் வந்துவிட்டதா?' என அவர் விசாரித்தபோது, ' செங்கல்பட்டு ஏரியாவில் 50 வண்டிகள் நின்று கொண்டிருக்கிறது. மற்ற வண்டிகள் டோல்கேட்டைத் தாண்டிவிட்டன. இதோ வந்துவிடுவார்கள்' என ஆதரவாளர் ஒருவர் கூறியுள்ளனர். ஒருகட்டத்தில் பொறுமையிழந்து கத்தத் தொடங்கிவிட்டார். பின்னர், இருக்கும் கூட்டத்தை வைத்து 11.15 மணிக்குத்தான் பேரணியைத் தொடங்கினார். இதே கோபத்தில், கூட்டத்தில் ஆதரவாளர்களை அவர் அடிக்கும் காட்சிகளும் வெளியானது. பேரணி முடியும் தருணத்தில், அறிவாலயத்துக்குக் கெடு விதிக்கும் வகையில் பேசுவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். கூட்டம் கூடாததால், 'எதுவும் பேச வேண்டாம்' என்ற முடிவுக்கு வந்துவிட்டார். பேரணி ஏற்பாடுகளில் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். சொல்லப் போனால், 'ஒரு லட்சம் பேருக்கும் மேல் திரள்வார்கள்' எனக்கூறி அழகிரியை ஏமாற்றிவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்" என்றார் விரிவாக. 

 

 

"அழகிரி குறித்து கழக நிர்வாகிகள் எந்தக் கருத்தையும் பேசக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் ஸ்டாலின். கட்சியின் பொருளாளர் ஆன பிறகு இன்று காட்பாடி தொகுதிக்குச் சென்றார் துரைமுருகன். அப்போது அழகிரி குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோதும், 'நோ கமென்ட்ஸ்' எனக் கூறிவிட்டார். அதேபோல், 'அழகிரி குறித்து எந்தக் கேள்வி வந்தாலும் பதில் அளிக்கக் கூடாது; தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கு பெறக் கூடாது' என உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின். குறிப்பாக, ஒரு தொலைக்காட்சியைக் குறிப்பிட்டு, 'அந்தச் சேனலில் இருந்து எந்த விவாதத்துக்கு அழைத்தாலும் செல்ல வேண்டாம்' எனக் கூறிவிட்டார். இதே கட்டுப்பாடுதான் குடும்ப உறுப்பினர்களுக்கும்" என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர். 

https://www.vikatan.com/news/tamilnadu/136056-azhagiris-plan-fails-as-just-10000-members-arrive-for-the-event.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.