Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை ஒசாமா என்று அழைத்த ஆஸி. வீரர்: மொயீன் அலி வெளிப்படுத்தும் ‘இனப்பாகுபாடு’ சம்பவங்கள்!

Featured Replies

என்னை ஒசாமா என்று அழைத்த ஆஸி. வீரர்: மொயீன் அலி வெளிப்படுத்தும் ‘இனப்பாகுபாடு’ சம்பவங்கள்!

 

 
moen_ali87

 

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தன்னுடைய சுயசரிதையை எழுதி வருகிறார். அதன் சில பாகங்கள் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளிவருகின்றன. அதில் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தை குறித்து கூறியதாவது:

2015 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் என்னிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒரு சம்பவம் என்னை பாதித்தது. மைதானத்தில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ஒசாமா (பின்லேடன்) என அழைத்தார். அவர் என்னிடம் அப்படிக் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்தது. மைதானத்தில் ஒருபோதும் நான் கோபமாக இருந்ததில்லை. அணி வீரர்களிடம் இதுகுறித்துக் கூறினேன். இதை ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லேமனிடம்  எடுத்துச் சென்றார் இங்கிலாந்துப் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ். 

அந்த வீரரிடம் டேரன் லேமன் கேட்டார், மொயீன் அலியை ஒசாமா என அழைத்தாயா? என்று. ஆனால் அந்த வீரர் தான் அவ்வாறு சொல்லவில்லை என்று கூறிவிட்டார். பகுதிநேரப் பந்துவீச்சாளர் என்றுதான் கூறினேன் என்றார். எனக்கு இது ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும். எனினும் அந்தப் போட்டியில் நான் கோபமாகவே இருந்தேன். 3-2 என ஆஷஸ் தொடரை நாங்கள் வென்றபிறகும் அந்த வீரரிடம் இதுகுறித்துக் கேட்டேன். அப்போதும் அதை மறுத்தவர், தனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் இருப்பதாகக் கூறினார் என்று தான் சந்தித்த இனப்பாகுபாடு சம்பவம் குறித்து தன்னுடைய சுயசரிதையில் மொயீன் அலி எழுதியுள்ளார்.

இங்கிலாந்தின் பிர்மிங்கமில் பிறந்த மொயீன் அலியின் தாய் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். தந்தை, பாகிஸ்தானியர். தி டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர்கள் குறித்துக் கூறியதாவது:

நான் விளையாடிய அணிகளில் மிகவும் வெறுப்பது ஆஸ்திரேலிய அணியைத்தான். அவர்கள் பழைய எதிரி என்பதற்காகச் சொல்லவில்லை. அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தாலும் மக்களையும் வீரர்களையும் அவமரியாதையாக நடத்துவதாலும்தான். நான் அவர்களிடம் தொடர்ந்து விளையாடும்போதுதான் அவர்களின் மோசமான நடத்தையை முழுவதுமாக உணர்ந்தேன்.

2015 ஆஷஸ் தொடரில் இன்னும் மோசமாக நடந்துகொண்டார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் நல்லவிதமாகப் பழகுவார்கள். ஓர் அணி சிரமங்களை மேற்கொள்ளும்போது அவர்கள் மீது பரிதாபம் ஏற்படும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தின்போது ஆஸ்திரேலிய அணி மீது பரிதாபமே ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/sep/15/moeen-ali-alleges-racial-abuse-during-2015-ashes-3000884.html

  • தொடங்கியவர்

எப்போது உன் கெபாப் ஷாப்பைத் திறப்பாய்?- வசையினால் ஆஸி.மீதான மொயீன் அலியின் வெறுப்பு

 

 
moeen%20ali2

படம்.| ராய்டர்ஸ்.

மொயீன் அலி தன் சுயசரிதை நூலில் ஆஸ்திரேலிய வீரர்களை, அதன் ரசிகர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு வீரர் இவரை ஒசாமா என்று வர்ணித்தச் சம்பவம் தற்போது சர்ச்சையைக் கிளப்ப ஆஸ்திரேலிய அணி அதன் ரசிகர்கள் என்று மொயீன் அலி தன் நூலில் ஒருவரையும் விட்டு வைக்காமல் சாத்தியுள்ளார்.

அவரது சுயசரிதை டைம்ஸ் இதழில் தொடராக வெளி வருகிறது.

 

மொயீன் அலியின் தந்தை பர்மிங்ஹாமில் வசிக்கும் பாகிஸ்தானியர் தாய் பிரிட்டனைச் சேர்ந்தவர். தான் நிறவெறி ரீதியாக ஆஸ்திரேலிய ரசிகர்களால் வசைபாடப்பட்டதை நினைவு கூரும் மொயீன் அலி, கடந்த ஆஷஸ் தொடரில் ரசிகர் ஒருவர் தன்னிடம் வந்து ‘உன் கெபாப் ஷாப் எப்போது திறப்பாய்?’ என்று கேட்டதை கோபத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்.

“ஆஸ்திரேலியா மிகவும் முரட்டுத் தனமான இடம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கெபாப் ஷாப் போன்ற நிறவெறி வசைகளெல்லாம் நான் கேட்டதில்லை, பயிற்சி ஆட்டங்களில் கூட இப்படிப்பட்ட வசைகளை எதிர்கொண்டேன்.

மைதானத்தில் ஆடும் ஆஸி.வீர்ர்கள் முதல், பார்வையாளர்கள் வரை எதிரணியையோ அந்நாட்டு மக்களையோ மதிப்பவர்கள் அல்ல. என்னுடைய ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே ஆஸ்திரேலிய அணியை நான் வெறுக்குமளவுக்கு வேறு அணிகளை வெறுத்ததில்லை. காரணம் அவர்கள் அப்படி தங்களை நடத்திக் கொள்கிறார்கள், வீரர்களையும் எதிரணி நாட்டின் மக்களையும் அவர்கள் மதிப்பதில்லை.

2015 உலகக்கோப்பைக்கு முன் சிட்னியில் நான் அவர்களை எதிர்த்து ஆடியபோது, அவர்கள் உங்களிடம் கடுமையாக மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வசைபாடுவார்கள். முதலில் சரி என்று விட்டு விடுவேன், ஆனால் போகப்போக அவர்கள் நடத்தை மோசமாகி வந்தது. ஆஷஸ் தொடர் என்றால் அவர்கள் மேலும் கொடூரமானவர்களாக மாறி விடுகின்றனர். தனிநபர்களாக அவர்கள் ஓகே. ஆனால் அணியாக இறங்கினால் அவ்வளவுதான்.

கடைசியாக ஆடிய ஒருநாள் தொடரில் நன்றாக நடந்து கொண்டார்கள்.

இவ்வாறு கூறியுள்ளார் மொயின் அலி.

https://tamil.thehindu.com/sports/article24955449.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா கிறிக்கட் அணியையும் அதன் ரசிகர்கள் பற்றியும் முழு உலகமும் அறியும்.

  • தொடங்கியவர்

சூடு பிடித்துள்ள மொயின் அலியின் ஒசாமா விவகாரம்

cover-photo-14-696x522.jpg
 

அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் தன்னை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு இனவெறியுடன் அவமதித்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவரான மொயின் அலி.

மொயின் அலி எழுதியுள்ள தனது சுயசரிதை புத்தகம் ஒன்றிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 31 வயதான மொயின் அலி பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இங்கிலாந்தில் தான் என்றாலும், பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டவர். இங்கிலாந்து அணிக்காக 2014ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் அவர் தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியிருப்பதாவது:–

 

2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கார்டிப்பில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் நாங்கள் வெற்றி பெற்றோம். அது தான் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக எனது முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியாகும். இதில் எனது தனிப்பட்ட செயல்பாடு (மொத்தம் 55 ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட் எடுத்தார்) மகிழ்ச்சி அளித்தாலும், இன்னொரு சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது.

ஒசாமா என்று அழைத்தார்

இந்த போட்டியில் நான் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர், என் பக்கமாக திரும்பி, இந்த ஓசாமாவை சீக்கிரம் எடுக்க வேண்டும் (அவுட் ஆக்க வேண்டும்) என பேசினர். இதைக்கேட்ட நான் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றேன். என்னால் நான் கேட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு கோபத்தில் கன்னம் சிவந்தது. இதற்கு முன்பு கிரிக்கெட் களத்தில் இது மாதிரி கோபமடைந்ததில்லை.

அவுஸ்திரேலிய வீரர் என்னை மோசமாக வசைபாடியதை சக வீரர்கள் சிலரிடமும், எங்களது பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிசிடமும் சொன்னேன். அவர் அதை அப்போதைய அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமனின் கவனத்துக்கு கொண்டு சென்றார். பயிற்சியாளர் லீமன், சம்பந்தப்பட்ட அந்த அவுஸ்திரேலிய வீரரிடம்மொயின் அலியை ஒசாமா என்று அழைத்தீர்களா?’ என்று கேட்டதற்கு அந்த வீரர் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்தார். ‘அதை எடுத்துக் கொள்பகுதி நேர பந்துவீச்சாளர் (Part Timer)’ என்று தான் சொன்னேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கு ஒசாமா என்ற வார்த்தைக்கும், ‘பார்ட் டைமர்என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன? இருந்தாலும் அந்த வீரரின் வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இருப்பினும், அந்த ஆட்டம் முழுவதும் நான் கோபத்திலேயே இருந்தேன்.

 

 

இந்த ஆஷஸ் தொடரை நாங்கள் 3–2 என்ற கணக்கில் கைப்பற்றினோம். தொடர் நிறைவடைந்ததும் அந்த அவுஸ்திரேலிய வீரரிடம் மீண்டும் இது பற்றி கேள்வி எழுப்பிய போது அதே போன்றே பதில் அளித்தார். இவ்வாறு மொயின் அலி சுயசரிதை புத்தக்கத்தில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மூர்க்கத்தனமாக செயல்படும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்களுக்காக அனுதாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மொயின் அலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில்நான் விளையாட விரும்பாத ஒரே அணி எது என்றால், அது அவுஸ்திரேலியாதான். அவர்கள் எங்களது பழைய எதிரிதான். என்றாலும், அவர்கள் வீரர்களுக்கும் மக்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை. அவர்கள் எனக்கு எதிராக கடினமாக மட்டும் நடந்து கொள்ளவில்லை. என்னை இழிவுப்படுத்தினார்கள்.  

  • ali1.jpg
  • ali2.jpg

 

 

2015 கார்டிப்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இதேபோல, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் போட்டித் தடைகளுக்கு ஆளாகியுள்ள ஸ்மித், வோர்னர் மற்றும் பேன்ட்கிராப்ட் ஆகிய மூவர் மீதும் சிலருக்கு அனுதாபம் ஏற்படலாம். ஆனால், அவர்களுக்காக வருத்தப்பட கடினமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வருடம் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது மொயின் அலி களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது பார்வையாளர் அரங்கில் இருந்த ஒருவர், எப்போது உங்களுடைய ஹிஜாப் கடை திறக்கப்படும் என கோஷமிட்டார். எனினும் போட்டி நடைபெற்ற மைதானத்தில் குளிரான காலநிலை நிலவியதால் அவர் தனது காதை அடைத்துக் கொண்டிருந்ததாகவும், இதனால் எதையும் அவரால் கேட்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட் அவுஸ்திரேலிய விசாரணை

மொயின் அலியின் குற்றச்சாட்டை விசாரிக்க தொடங்கியுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, அது தொடர்பான விபரங்களை உடனடியாக தரும்படி இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் கோரியுள்ளது.

 

இதுதொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘இது போன்ற எல்லை மீறிய விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதற்கு எங்களது விளையாட்டு சமூகத்தில் இடமில்லை. தேசத்திற்காக விளையாடும் போது, எங்களுக்கு என்று மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். எனவே இந்த விவகாரத்தை நாங்கள் ரொம்ப தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்.’ என்றார்.

ஏற்கனவே அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர், கெமரூன் பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டத்தில் தடையை அனுபவித்து வரும் நிலையில், மேலும் ஒரு அவுஸ்திரேலிய வீரர் சர்ச்சையில் சிக்கி இருப்பது கிரிக்கெட் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியர்கள் இனவெறியர்களா?

அவுஸ்திரேலியர்கள் உலகின் மிகச் சிறந்த இன வெறியர்கள் என்பது உலகம் அறிந்த விடயம். வெள்ளை இனத்தவர்கள்தான் உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பது அவர்களது தாழ்மையான எண்ணம். ஏனைய யாரையும் அவர்கள் திறமையானவர்களாக அங்கீகரிப்பதில்லை.

அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் முன்னிலை அணியாக விளங்குகின்ற அவுஸ்திரேலியாவில் சர்வதேச கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு விளையாடும் போது இனவெறியான செயற்பாடுகளில் அந்நாட்டு ரசிகர்கள் ஈடுபடுவது வழக்கமான ஒரு விடயமாகவும் மாறிவிட்டது. இதற்கு முன்பு இந்திய, இலங்கை வீரர்கள் மற்றும் தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களும் இதுபோன்ற இனவெறி இழிவுபடுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

முன்பு இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களே இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் கடுமையாக விமர்சித்து பெரும் சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம்.

 

 

அதேபோல, கடந்த 2006ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதன்போது இங்கிலாந்து அணிக்கும் நியூ சௌத் வேல்ஸ் அணிக்கும் இடையில் சிட்டினியில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில், இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் சீக்கியரான மொண்டி பனீசரும், தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த வெள்ளையரான கெவின் பீட்டர்சனும் விளையாடியிருந்தனர். எனினும் இப்போட்டியின்போது பனீசரையும், பீட்டர்சனையும் அவுஸ்திரேலிய ரசிகர்கள் துவேஷமாக விமர்சித்து தங்களது இன வெறியை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை வரலாறுகள் சான்று பகர்கின்றன.

இந்நிலையில், உலக கிரிக்கெட்டின் பிக் 3 நாடுகளில் ஒன்றாக விளங்குகின்ற அவுஸ்திரேலிய அணியிலும், நிற பேதம் மற்றும் இன பாகுபாடுகளைக் கொண்டு வீரர்களை அணிக்குத் தெரிவு செய்கின்ற நடைமுறை அரிதாக இருந்தாலும், அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அண்மையில் இடம்பிடித்து ஒரு சில போட்டிகளில் விளையாடி வருகின்ற பாகிஸ்தான் வம்சாவளி வீரரான உஸ்மான் கவாஜா நிற பேதம் மற்றும் இனவெறி விமர்சனங்கள் காரணமாக தான் சிறுவயது முதல் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக கடந்த வருடம் முதற்தடவையாக தெரிவித்திருந்தமை விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தண்டனை விதிக்கப்படுமா?

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளின் படி இனவெறி கருத்துக்களை தெரிவித்தாலோ அல்லது பேசினாலோ, வீரர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, அந்த நாட்டின் மீது ஆயுட்கால தடை விதிக்க முடியும். ஆனால், அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து வெளிநாட்டு அணிகளும் இந்தப் பிரச்சினையை சந்தித்து வருகின்றபோதிலும் இதுவரை அவுஸ்திரேலியா மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மாறாக, இனவெறி மற்றும் கறுப்பின வீரர்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற பாகுபாடு காரணமாக ஒரு காலத்தில் தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை ரத்து செய்தமை அனைவரும் அறிந்த விடயம்.

எனவே, விளையாட்டில் நிற பேதம் மற்றும் இன பாகுபாட்டுக்கு முன்னுரிமை அளித்தால் ஒருபோதும் அந்த நாடு விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் அடையாது என்பது நிதர்சனமான உண்மையாகும். அதேபோல, இன்று கால்பந்து, கிரிக்கெட், மெய்வல்லுனர் உள்ளிட்ட முக்கியமான விளையாட்டுக்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த அல்லது வம்சாவளி வீரர்கள் அதிகளவில் விளையாடி வருகின்றனர். இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதையும் எம்மால் அவதானிக்கலாம். ஆனால் சகோதரத்துவத்தை ஏற்படுத்துகின்ற முக்கிய ஆயுதமாக விளையாட்டு விளங்குகின்றமையினால், மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியிலும் அனைத்து வீரர்களுடனும் இன, மத, மொழி பாகுபாடின்றி வீரர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மொயின் அலியின் ஆஸி.வீரர் மீதான ‘ஒசாமா’ வசை புகார் புஸ்...: ஆதாரம் இல்லையென் கிரிக்கெட் ஆஸி. கைவிரிப்பு

 

 

 
moeen%20ali

மொயீன் அலி. | படம்: ராய்ட்டர்ஸ்.

2015 ஆஷஸ் தொடரின் போது ஆஸி. வீரர் ஒருவர் தன்னை ‘ஒசாமா’ என்று பின்லேடனைக் குறிப்பிடுமாறு கூறி நிறவெறி வசை செய்ததாக இங்கிலாந்தின் மொயின் அலி எழுப்பிய புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தன் விசாரணையில் முடிவுக்கு வந்துள்ளது.

தன்னுடைய புதிய நூலின் ஒரு பகுதியில் மொயின் அலி 2015ம் ஆண்டு கார்டிப் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் தன்னை ஒசாமா என்று பயங்கரவாதியின் பெயரைக் குறிப்பிட்டு நிறவெறி வசை செய்ததாக எழுதியிருந்தார்.

 

இதனையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது, யார் அப்படிக் கூறியிருந்தாலும் நடவடிக்கை பாயும்... இதோ விசாரணை என்றெல்லாம் சூளுரைத்தது நினைவிருக்கலாம்.

இதனையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நேர்மைக்குழு ஆஸ்திரேலிய வீரர்கள் பலரை விசாரித்து கார்டிப் டெஸ்ட்டில் நடந்தது என்ன என்பதைப் பற்றி கேட்டறிந்தனர். இதன் விசாரணை வார இறுதியில் முடிந்தது.

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து இந்தச் சம்பவம் அப்போதே விசாரிக்கப்பட்டது. இதன் முடிவையும் மொயினிடம் தெரிவித்தோம். மொயீனும் இதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை. மேலும் புதிய விசாரணைகளில் அவரது புகாருக்கான புதிய ஆதாரங்களும் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருகிறது.

ஆனால் இம்மாதிரி நிறவெறிப்போக்குக்கு இங்கு சமூகத்திலும் இடமில்லை, கிரிக்கெட்டிலும் இடமில்லை, இதனை சிறிதளவும் பொறுத்துக் கொள்ள முடியாது. நாட்டை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் எந்தத் துறையினராக இருந்தாலும் உயர்தர நடத்தைகளையும் மதிப்பீடுகளையும் கொண்டிருக்க வேண்டும். இதில் அவர்கள் தவறினால் விளைவுகள் என்னவென்பதையும் வீரர்கள் அறிந்திருக்கிறார்கள்” என்றார்.

மொயின் அலியும், “இதனை நான் புகாராக எழுப்பியது உண்மைதான், ஆனால் இனி இதனை பெரிதாக கொண்டு செல்ல விரும்பவில்லை, அடுத்த கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். பெரிய விஷயம் ஒன்றுமில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது, கடுமையாக போராடி இரு அணிகளும் ஆடிய தொடர். களத்தில் நடந்ததை ரிப்போர்ட் செய்தேன் அவ்வளவே” என்று கூறியுள்ளார்.

அப்போதே லீ மேன் தன் வீரர்களிடம் ‘ஒசாமா’ என்று கூறினீர்களா என்று கேட்ட போது, பார்ட் டைமர் என்று கூறியதாக வீரர் ஒருவர் தெரிவித்த செய்தி வெளிவந்தது. ஆனால் மொயின் அலி ‘ஒசாமா’ என்ற வார்த்தைக்கும், ‘பார்ட்டைமர் என்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியாமலா புகார் எழுப்புவேன் என்றார்.

ஆனால் இப்போது இந்தவிவகாரம் முடிவுக்கு வந்தது.

https://tamil.thehindu.com/sports/article25028719.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.