Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாணத்திற்கு புதிய தாதி உத்தியேகத்தர்கள் உட்பட வைத்திய நிபுணர்களும் நியமனம் :

Featured Replies

வட மாகாணத்திற்கு புதிய தாதி உத்தியேகத்தர்கள் உட்பட வைத்திய நிபுணர்களும் நியமனம் :

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Gunaseelan.-HEALTH-MINISTER.jpg?resize=8
வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் புதிய தாதி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (17) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

 

-வடமாகாணத்திற்கு என தெரிவு செய்யப்பட்ட 71 தாதி உத்தியோகத்தர்களுக்கும் இன்று திங்கட்கிழமை (17) காலை வடமாகாண சுகாதார அமைச்சில் வைத்து நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்திற்கு 24 தாதிய உத்தியோகத்தர்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 12 தாதி உத்தியோகத்தர்களும், மன்னார் மாவட்டத்திற்கு 13 தாதிய உத்தியோகத்தர்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 10 தாதி உத்தியோகத்தர்களும், வவுனியா மாவட்டத்திற்கு 12 தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுணர் வெற்றிடத்திற்கு வைத்திய நிபுணர் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். -மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு காது,மூக்கு,தொண்டை போன்ற வற்றிற்கான விசேட வைத்திய நிபுணர் ஒருவரும் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

-இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் இடம் பெற்ற அசம்பாவிதம்; ஒன்றை தொடர்ந்து வைத்திய சாலையில் இருந்து வெளியேறிய மகப்பேற்று வைத்திய நிபுணரை உடனடியாக மீண்டும் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் கடமையில் ஈடுபடுத்த வடமாகாண சுகாதார திணைக்களம் மற்றும் வடமாகாண சுகதார அமைச்சர் ஆகியோர் மத்திய சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன் வைத்த நிலையில் குறித்த மகப்பேற்று வைத்திய நிபுணரை உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று கடமையினை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சு காரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில தினங்களில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் குறித்த மகப்பேற்று வைத்திய நிபுணர் கடமையில் ஈடுபடுவார் எனவும் வடக்கு சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/96034/

 

 

 

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் விசேட மகப்பேற்றியல் வைத்தியர் கடமைகளை பொறுப்பேற்றார்

 

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் விசேட மகப்பேற்றியல் நிபுண வைத்தியர் டி.எல்.டபிள்யூ குணவர்த்தன தமது கடமைகளை இன்று உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

kili_hospital.jpg

கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்களின் பிரகாரம் கடந்த மாதம் 30. ஆம் திகதியன்று மத்திய சுகாதார அமைச்சில் அறிக்கையிட்ட மகப்பேற்று வைத்தியநிபுணர் உடன் அமுலுக்கு வரும்வகையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

எனினும் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விடுமுறையான (settlement leave) 14 கடமை நாட்கள் விடுமுறையின் பின்னர் அவர் இன்று தமது கடமைகளை கிளிநொச்சி  வைத்தியசாலையில்  பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

தமது வெளிநாட்டுக் கற்கைநெறியினைப் பூர்த்திசெய்த பின்னர் கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் சுகாதார அமைச்சில் அறிக்கையிட்ட மகப்பேற்றியல் நிபுணரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிப்பதற்கு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வடக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகள் இதனை விசாரித்து அறியாத நிலையில், சிலர் மக்களைப் பிழையாக வழிநடத்தி கிளிநொச்சியில் மத்திய அரசுக்கும், சுகாதார அமைச்சிற்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு கடந்த மாதம் 31. ஆம் திகதியன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.                          

இனிவரும் காலங்களிலாவது மத்திய சுகாதர அமைச்சும் மாகாண சுகாதார அமைச்சும்  சுமூகமான தொடர்பாடல்களை மேற்கொண்டு இடையுறாத சுகாதாரசேவைகள் மக்களுக்குக் கிடைக்க ஆவனம் செய்யவேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

http://www.virakesari.lk/article/40596

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.