Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சியில் பதற்றம் – மீனவர்கள்- பொலிஸார் இடையே முறுகல்!!

Featured Replies

யாழில் பெரும் பதற்றம்! பொலிசார் குவிப்பு!!

 

 
 
Image

யாழ் வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர்.

இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பல பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் அழிக்கப்படுவதால் இவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன.

இதனையடுத்து கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினர்களும் அந்த மீனவர்களை வெளியேற்றுவது கூறியிருந்தார் போதிலும் அங்கு தொடர்ந்தும் அவர்கள் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்

இவ்வாறு வடமராட்சி கிழக்கின் தாளையடிப் பகுதியில் தங்கியிருந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்களும் எட்டு மீனவர்கள் வடமராட்சி கடறபரப்பிற்கைள் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட போது வடமராட்சி மீனவர்களும் மடக்கி பிடிக்கப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்குன்றனர் இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸாரும் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து தாம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல முற்பட்ட போதும் அதற்கு அப்பகுதி மீனவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

மேலும் சட்ட விரோதமான தொழில்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் இந்த விடயத்தில் தமக்கு சாதகமான முடிவு பெருக்கு வாய்ந்த தரப்பினர்கள் தெரியப்படுத்தும் வேண்டுமென்றும் அப் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/106267

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வடமராட்சியில் பதற்றம் – மீனவர்கள்- பொலிஸார் இடையே முறுகல்!!

 
 
42059029_234288027263595_555919604776855
 

வடமராட்சியில் கடலட்டை பிடித்த மூன்று படகுகளுடன் எட்டு வெளிமாவட்ட மீனவர்களை இன்று அதிகாலை சுற்றிவளைத்துப் பிடித்த வடமராட்சி மீனவர்கள், அவர்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மீனவர்களை பருத்தித்துறை பொலிஸார் பொறுப்பெடுக்க முயற்சித்த போதும் கடலட்டை பிடிப்பதை கடற்றொழில் அமைச்சு தடுக்கும் வரை அவர்களை விடுவிப்பதில்லை என்று வடமராட்சி மீனவர்கள் பிடிவாதமக உள்ளனர்.

இதனால் மீனவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலமை ஏற்பட்டுள்ளது என்று உதயன் செய்தியாளர் சம்பவ இடத்தில் இருந்து தெரிவித்தார்.

42045179_453359911858410_41473708264773341869218_475800802912367_39532095155323542195206_897872130417688_18173084580267920180918_075719.jpg20180918_075043.jpg20180918_0800100.jpg20180918_075723.jpg

https://newuthayan.com/story/10/வடமராட்சியில்-பதற்றம்-மீனவர்கள்-பொலிஸார்-இடையே-முறுகல்.html

  • தொடங்கியவர்

யாழ். பருத்தித்துறையில் பதற்றம்  ; தென்னிலங்கை மீனவர்களை மீட்பதில் பொலிஸார் - மீனவர்களுக்கிடையில் இழுபறி

 

 

வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2c658c3b-035c-4c53-aef9-07543d9a1ee7.jpg

ஆனாலும் அந்த மீனவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.

ae768f2f-4eb8-4bc4-a763-eb155bd34352.jpg

இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையினரை களமிறக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

d139c7ac-7a25-473d-8a86-564403b1086b.jpg

இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தத நிலையில் திடீரென தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை பொலிஸார் தம்முடன் அழைத்துச்சென்றனர். 

c4efefbc-1cca-421e-8469-078f97405e83.jpg

இதனால் மேலும் குழப்பம் அதிகரித்ததுடன் பொலிஸ் மற்றும் அப் பகுதி மீனவர்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏற்பட்டு பதற்றமானதொரு சூழல் நிலவியது.

613a3ff6-5c4c-4500-bf1c-83185aaf1c9e.jpg

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பேர்களில் ஆறு பேரை பலவந்தமாக. பொலிஸார் மீட்டுச் சென்றனர் .

ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து அங்குள்ள அருட்தந்தை ஒருவர் மூலமாக ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.

513c624a-3dfc-4e10-b049-b827d2ce40c6.jpg

இவ்வாறு குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது போதிலும் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

34a3fe8f-933b-477c-8b24-d60221e8fd01.jpg

இதேவேளை அங்கு நின்ற அப் பகுதி மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் பலரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

7b632b9c-7247-4857-b58b-d05161e92b28.jpg

http://www.virakesari.lk/article/40632

  • தொடங்கியவர்

தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்கும் முயற்சி தோல்வி – கொட்டகைகளை அமைத்து மீனவர்கள் போராட்டம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ed8279f7-1cc8-4189-9db7-5c361eeb7418.jpg
வடமராட்சி பருத்தித்துறை கடலில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களையும் விடுவிப்பதற்கு கடற்தொழில் நீரியல் வளம் திணைக்களம் பணிப்பாளர் வர வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வடமராட்சி பருத்தித்துறை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

 

மீனவர்களை விடுவிக்குமாறு கோரி நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ச்சியான போராட்டத்தையும் மீனவர்கள் ஆரம்பித்து உள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் அத்து மீறி சட்ட விரோதமாகத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் நேற்றிரவு வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் நுழைந்த போது வடமராட்சி பருத்தித்துறை மற்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்குன்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டடிருந்த நிலையில் பருத்தித்துறை காவல்துறையினர் பிரதேச செய்லர் மாவட்ட கடற்தொழில் நீரையும் வளம் திணைக்களம் பணிப்பாளர் உள்ளிட்ட மீனவர்களுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற்றது..

ஆனாலும் மீனவர்களை விடுவிக்கும் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது தொடர்ந்தும் தாம் பாதிக்கப்பட்டு வருவதற்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றும் கடற்தொழில் பணிப்பாளர் நேரடியாக வருகை தர வேண்டுமென்றும் ஐந்து கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

ஆயினும் அந்தப் கோரிக்கைக்கு சாதகமான பதில் அல்லது முடிவு கிடைக்காத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள கொள்ளப்பட்டு அதனை நிறைவேற்றும் வரையில் தாம் கடலுக்கு செல்லக் போவதில்லை எனத் தெரிவித்துள்ள மீனவர்கள் கொட்டகைகளை அமைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

2a9ec894-b0fa-4746-a4b9-0b1a03b78bc1.jpg2be7ded8-7fb4-4695-98ed-d069d526b493.jpg5d938c18-4d34-43b0-99a3-f78deb4bbf01.jpgad949d49-de80-45eb-9254-a864ef1accb0.jpgae82eed3-b465-48fc-853f-7f4d255d6d42.jpg

http://globaltamilnews.net/2018/96129/

  • தொடங்கியவர்

கடலட்டை பிடித்தோரை- மடக்கிப் பிடித்தும் ஏமாற்றம் அடைந்த வடமராட்சி மீனவர்கள்!!

 
 
42206692_1733968076728794_22005357454651

 

 

வட­ம­ராட்சி கிழக்­குக் கட­லில் கட­லட்டை பிடித்த வெளி­மா­வட்ட மீன­வர்­கள் பிர­தேச மீன­வர்­க­ளால் திட்­ட­மிட்டு மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர். மடக்­கிப் பிடித்த மீன­வர்­களை வைத்து உரி­மை­யா­ளர்­களை இனங்­காண பிர­தேச மீன­வர்­கள் திட்­ட­மிட்­ட­போ­தும், பொலி­ஸார் அச்­சு­றுத்­தும் வகை­யில் செயற்­பட்டு பிடிக்­கப்­பட்ட மீன­வர்­களை மீட்­டுச் சென்­ற­னர்.

வட­ம­ராட்சி கிழக்­குக் கட­லில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­ப­டு­கின்­ற­மையை ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பிக்க முயன்ற பிர­தேச மீன­வர்­கள் மனச் சோர்­வு­டன் திரும்­பி­னர்.

தொட­ரும் பிரச்­சினை

வட­ம­ராட்சி கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­ப­டு­கின்­ற­னர் என்­றும், அத­னால் தமது வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது என்­றும் வட­ம­ராட்­சிக் கிழக்கு மீன­வர்­கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­ற­னர்.

வட­ம­ராட்சி கிழக்­குக் கடல்­ப­ரப்­பில் வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளால் மேற்­கொள்­ளப்­ப­டும் கட­லட்­டைத் தொழி­லைத் தடை செய்ய வேண்­டும் என்று அவர்­கள் பல தரப்­பி­ன­ரி­டம் கோரிக்­கை­கள் விடுத்­தி­ருந்­த­து­டன், பல போராட்­டங்­க­ளை­யும் செய்­தி­ருந்­த­னர்.

உறுதி மொழி­கள்

இது தொடர்­பாக கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆயி­யோர் கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத்­துறை அமைச்­சர் நாடா­ளு­மன்­றில் சந்­தித்­தி­ருந்­த­னர்.

வட­ம­ராட்சி கிழக்­கில் வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­கள் தொடர்­பில் அமைச்­ச­ருக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. கட­லட்டை பிடிப்­ப­தற்­கான அனு­மதி வழங்­கப்­ப­டும் விதிக்­கப்­ப­டும் நிபந்­த­னை­களை மீறி தொழில் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­போ­தும், கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுப்­ப­தில்லை என்­றும், கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் அமைச்­ச­ருக்­குச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

கட­லட்டை பிடிப்­ப­தற்கு விதிக்­கப்­ப­டும் நிபந்­த­னை­கள் உரிய முறை­யில் பின்­பற்­றப்­ப­டு­வதை உறுதி செய்­யு­மாறு, கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளப் பணிப்­பா­ள­ருக்கு அமைச்­சர் உட­ன­டி­யா­கவே பணிப்­புரை விடுத்­தி­ருந்­தார். அதன்­பின்­ன­ரும் வட­ம­ராட்­சிக் கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளால் கட­லட்­டைத் தொழில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தது.

வட­ம­ராட்சி கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் இரவு வேளை அனு­ம­தி­யின்­றிக் கட­லட்டை பிடித்­த­னர் என்று தெரி­வித்­துக் கடற்­ப­டை­யி­ன­ரால் 81 மீன­வர்­கள் கடந்த மாதம் 18 ஆம் திகதி அதி­காலை கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­க­ளின் பட­கு­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டன. பின்­னர் அவர்­க­ளி­டம் இர­வில் கட­லட்டை பிடிப்­ப­தற்­கான அனு­மதி உள்­ளது என்று தெரி­வித்து கடற்­ப­டை­யி­னர் அவர்­களை விடு­வித்­த­னர். அத­னால் உள்­ளூர் மீன­வர்­கள் முரண்­பட்­ட­னர். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணம் வரும்­போது எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­ப­டு­வ­தற்கு மீன­வர்­கள் திட்­ட­மிட்­ட­னர்.

அதை­ய­டுத்து கடந்த மாதம் 22ஆம் திகதி கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத்­துறை அமைச்­சர் காமினி விஜித் விஜி­த­முனி செய்சா யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து வட­ம­ராட்சி கடற்­றொ­ழில் சமா­சத் தலை­வர் வர்­ண­கு­ல­சிங்­கம், மீன­வர் சங்­கப் பிர­தி­நி­தி­க­ளைச் சந்­தித்­தார்.

இந்­தச் சந்­திப்பு கடற்­றொ­ழில் சமா­சத் தலை­வர் வே.தவச்­செல்­வத்­தால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. யாழ்ப்­பா­ணம் நக­ரில் உள்ள விடுதி ஒன்­றில் சந்­திப்பு நடை­பெற்­றது.

“கடற்­றொ­ழில் அமைச்­சர் வட­ம­ராட்சி கிழக்­கில் நடை­பெ­றும் கட­லட்­டைத் தொழி­லுக்கு தடை விதிக்­கப்­ப­டும் என்று உறு­தி­ய­ளித்­தார். அங்கு கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­ப­டும் இரு நிறு­வ­னங்­க­ளின் செயற்­பா­டு­க­ளும் நிறுத்­தப்­ப­டும் என்­றும் இர­வில் ஒளி­பாய்ச்சி மீன்­பி­டிப்­ப­தற்­கும் தடை­வி­திக்­கப்­ப­டும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

அமைச்­ச­ரின் உறு­தி­மொ­ழியை அடுத்து போராட்­டம் நடத்­தும் முடிவை மீனவ சங்­கங்­கள் கைவிட்­டன. இந்த உறு­தி­மொ­ழி­கள் நிறை­வேற்­றப்­ப­டா­விட்­டால் போராட்­டங்­கள் நடத்­து­வது பற்றி ஆலோ­சிப்­பது என்று மீனவ சங்­கங்­கள் முடி­வெ­டுத்­துள்­ளன.”- என்று இந்­தச் சந்­திப்­பின் பின்­னர் கடற்­றொ­ழில் சமா­சத் தலை­வர் வே.தவச்­செல்­வம் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­தச் சந்­திப்பை அடுத்து அரச தலை­வர் வரு­கை­யின்­போது நடத்­தத் திட்­ட­மிட்­டி­ருந்த போராட்­டத்தை வட­ம­ராட்சி கிழக்கு மீன­வர்­கள் கைவிட்­ட­னர்.

நேற்று நடந்­தவை

தமது கோரிக்­கை­க­ளுக்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாத நிலை­யில் அட்­டைத் தொழில் ஈடு­ப­டு­ப­வர்­களை கையும் மெய்­யு­மா­கப் பிடிப்­ப­தற்கு வட­ம­ராட்சி மீன­வர்­கள் திட்­ட­மிட்­ட­னர். வட­ம­ராட்சி மீன­வர் சங்­கங்­க­ளின் சமா­சத்­துக்­குட்­பட்ட 12 சங்­கங்­க­ளைச் சேர்ந்த மீன­வர்­க­ளும் நேற்­றுக் கட­லுக்­குச் செல்­ல­வில்லை.

சக்­கோட்­டைக் கரை­யில் அமர்ந்­தி­ருந்­த­னர். அதி­காலை 3 மணி­ய­ள­வில் கட­லட்­டைத் தொழி­லுக்­குச் சென்ற வெளி­மாட்ட மீன­வர்­கள் 8 பேரை மீன­வர்­கள் கையும் மெய்­யு­மா­கப் பிடித்­த­னர். அவர்­கள் பய­ணித்த பட­கு­க­ளும் கடற்­க­ரை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டன. பிடிக்­கப்­பட்ட மீன­வர்­கள் சக்­கோட்­டைக் கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கக் கட்­ட­டத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­ட­னர்.

மீன­வர்­கள் நிபந்­தனை

கடற்­றொ­ழில் அமைச்­ச­ரின் வாக்­கு­றுதி பொய்த்­துப் போயுள்­ளது. மீன்­பிடி அமைச்­சர் உடன் நடை­மு­றைக்­கு­வ­ரும் வகை­யில் கட­லட்­டைத் தொழி­லைத் தடை­செய்ய வேண்­டும், டைன­மெட் பாவ­னையை தடை செய்­ய­வேண்­டும், சுருக்கு வலை, ரோலர், ஒளி பாய்ச்சி மீன்­பி­டிக்­கும் தொழில்­க­ளைத் தடை செய்ய வேண்­டும்.

அது­வரை நாங்­கள் பிடித்­துள்ள மீன­வர்­களை விட­மாட்­டோம் என்று மீன­வர்­கள் தெரி­வித்­த­னர். பிடிக்­கப்­பட்ட வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளுக்கு உணவு, குடி­தண்­ணீர் வழங்கி அவர்­க­ளைப் பாது­காப்­பா­கத் தடுத்து வைத்­த­னர்.

பேச்சு

அர­சி­யல்­வா­தி­கள், பிர­தேச செய­லர், கடற்­தொ­ழில் நீரி­யல் வளத்­தி­ணைக்­கள அதி­கா­ரி­கள், பொலி­ஸார் காலை 10.30 மணி­ய­வில் சம்­பவ இடத்­துக்கு வந்­த­னர். அவர்­கள் மீன­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னர்.

“அனை­வ­ரும் வாக்­கு­றுதி வழங்­கு­கின்­ற­னர். ஆனால் அவை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. சட்ட விரோ­தத் தொழில்­கள் இடம்­பெ­று­கின்­றன. கடற்­தொ­ழில் அமைச்­சர் தடை உத்­த­ரவை வழங்­கிய போதும் கட­லட்­டைத் தொழில் இடம்­பெ­று­கி­றது. யார் அனு­மதி வழங்­கு­கின்­ற­னர்?. மீன­வர்­க­ளைப் பிடிப்­பது எமது நோகக்­க­மல்ல.

எமது பகு­தி­க­ளில் இவ்­வா­றான தொழல்­கள் இடம் பெறு­வ­தைத் தடுப்­பதே நோக்­கம். இப்­போ­தும் அந்­தத் தொழிலை நிறுத்­து­வ­தற்கே மீன­வர்­களை பிடித்­துள்­ளோம். உடன் நடை­மு­றைக்கு வரும் வகை­யில் கடற்­தொ­ழில் அமைச்­சர் எமக்கு உத்­த­ர­வா­தம் தர­வேண்­டும். அது­வரை மீன­வர்­களை விடு­விக்க முடி­யாது” என்று வட­ம­ராட்சி மீன­வர்­கள் தெரி­வித்­த­னர்.

போராட்­டத்­துக்கு ஏற்­பாடு

கட­லட்­டைத் தொழி­லுக்­குத் தீர்வு கிடைக்­கும்­வரை தொடர்ந்து போரா­டு­வ­தற்கு மீன­வர்­கள் முடிவு செய்­த­னர். சக்­கோட்­டைக் கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கத்­துக்கு முன்­பாக கொட்­ட­கை­களை அமைத்து போராட்­டத்­துக்கு தயா­ரா­கி­னர்.

பொலி­ஸார் நட­வ­டிக்கை

அப்­போது காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் (தரம் 1) சம்­பவ இடத்­துக்கு வந்­தார். மீன­வர்­க­ளு­டன் பேச்சு நடத்­தி­னார். அவ­ருக்­கும் மீன­வர்­கள் தமது முடி­வைத் தெரி­வித்­த­னர். மீன­வர்­களை அச்­சு­றுத்­தும் தொனி­யில் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் நடந்­து­கொள்­ளத் தொடங்­கி­னார்.

மீன­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் கருத்­துத் தெரி­விக்­கத் தொடங்­கும்­போது, தனக்கு அரு­கில் இருந்த பொலிஸ் அதி­கா­ரி­யைப் பார்த்து “வீடியோ எடுங்­கள்” என்று உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கூறி­ய­வண்­ணம் இருந்­தார். அனை­வ­ரை­யும் வீடியோ எடுங்­கள் என்­றும் அடிக்­கடி கூறிக் கொண்­டி­ருந்­தார். அரு­கில் இருந்த அதி­கா­ரி­யும் மீன­வர்­க­ளைக் காணொலி எடுத்­தார். அத­னால் மக்­கள் தமது கருத்­தைத் துணிந்து கூற முடி­யாத நிலை ஏற்­பட்­டது.

நீங்­கள் செய்­வது சட்­டப்­படி சரி­யான நட­வ­டிக்கை அல்ல. எம்­மி­டம் உங்­கள் வீடி­யோக்­கள் உள்­ளன. உங்­கள் அனை­வ­ரும் கைது செய்ய முடி­யும். காணொ­லி­க­ளின் உத­வி­யு­டன் அனை­வ­ரை­யும் கைது செய்ய முடி­யும். 20 ஆண்­டு­கள் உங்­க­ளைச் சிறை­யில் அடைக்க முடி­யும் என்று கடுந்­தொ­னி­யில் காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கூறி­னார்.

பிடி­பட்­டோர் விடு­விப்பு

காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் (தரம் 1) ஒரு­பு­றம் மீன­வர்­களை அச்­சு­றுத்­தும் தொனி­யில் பேசிக் கொண்­டி­ருக்க ஏனைய பொலி­ஸார் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வெளி­மா­வட்ட மீன­வர்­களை மெல்ல மெல்­லத் தமது வாக­னத்­தில் ஏற்­றி­னார்­கள்.

அதைச் சற்­றுத் தாம­த­மா­கவே மீன­வர்­கள் அவ­தா­னித்து சங்க வளா­கக் கதவை மூட முயன்­ற­போ­தும், அதற்­குள்­ளாக பொலிஸ் வாக­னம் சீறி வெளி­யே­றி­யது. அப்­போது காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கேற்றை மூடச் சொன்­ன­வ­ரை­யும் வீடியோ எடுங்­கள் என்­றார்.

தடுத்து வைப்பு

மீட்­டுச் சென்ற வெளி­மா­வட்ட மீன­வர்­கள் பருத்­தித்­துறை பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­ட­னர். இந்த விட­யம் தொடர்­பில் மேல­திக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

https://newuthayan.com/story/09/கடலட்டை-பிடித்தோரை-மடக்கிப்-பிடித்தும்-ஏமாற்றம்-அடைந்த-வடமராட்சி-மீனவர்கள்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.