Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை - மக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை - மக்கள் ஆர்ப்பாட்டம்

 

 
 

இரத்தினபுரி - கொலுவாவில - பாம்காடன் தோட்ட பிரதேசத்தில் போதைக்கு  எதிராக  குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

42261188_1015112008694031_19225762338460

மேற்படி   சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா தலைமையில் நேற்று பகல் பாம்கார்டன் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதில் பெருந்திரலான தோட்ட மக்கள் கலந்து கொண்டனர். 

மேற்படி ஆர்ப்பாட்டம் சில மணி நேரம் இடம்பெற்றது.

42229915_1878975498876654_25633044286354

சந்தேகநபரை  உடனடியாக கைதுசெய்வதாக. பொலிஸார் உறுதியளித்ததையடுத்து ஆரப்பாட்டம் கைவிடப்பட்டது.

மேற்படி பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

42182339_290013205182689_635432385867310

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/40866

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி   சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா தலைமையில் நேற்று பகல் பாம்கார்டன் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

செய்தியின் சாராம்சத்தையே பிழையாக புரிந்து கொண்டேன். உண்மையில் "மேற்படி சம்பவத்துடன் தொடர்புள்ள சந்தேகநபரை(அல்லது சந்தேக நபர்களை) கைது செய்யுமாறு கோரி ............. " என்று எழுதப்படவேண்டும்.

  • தொடங்கியவர்

இரத்தினபுரி கொலை சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது - பொலிஸ் பலத்த பாதுகாப்பு

 

 
 

இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்த தனபால் விஜேரத்னம், மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ratna.jpg

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கரவண்டியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பாமன்கார்டன் பகுதியிலுள்ள ஒரே முகவரியில் வசிக்கும் 24 மற்றும் 23 வயதான இருவரே சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயற்பட்டதே, இந்த கொலைக்கான காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

http://www.virakesari.lk/article/40871

  • தொடங்கியவர்

விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் அஞ்சலி

 

 

கடந்த 19 ஆம் திகதி கடந்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தை சேர்ந்த  விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் இன்று(22) இறுதி அஞ்சலி செலுத்தினார். 

manoganesan.jpg

இதன்போது இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா, தமிழ் முற்போக்கு முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

http://www.virakesari.lk/article/40990

 

 

விஜேரத்தினத்தின் மரணத்திற்கு நீதிகோரி இரத்தினபுரியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

 

இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில்  சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட  விஜேரத்தினம் என்பர் நேற்று முன்தினம் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறுகோரி இன்று பகல் இரத்தினபுரி மணிகூட்டு கோபுரத்திற்கும் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கும்  முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

20180921_175615.png

மேற்படி ஆரப்பாட்டத்தில் மழை என்றும் பாராது பெருந்திரலான மலையக மக்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி நகரில் பல மணி நேரம் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.

20180921_175640.png

இந்நிலையில் கொலையுடன் சம்பந்தப்பட்ட  சந்தேகநபர்களுக்கு ஆதரவு வழங்காமல் உடனடியாக சந்தேகநபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இவ்வாரான சம்பவம் இனிமேலும் இடபெற கூடாது என்றும் பதாதைகள் ஏந்தி கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேற்படி ஆரப்பாட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் ரூபன் பெருமாள் இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா மற்றும் வர்த்தகர்கள் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட  பெருந்திரலானோர் இதில் கலந்து கொண்டனர். 

20180921_175816.png

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் ரூபன் பெருமாள் மற்றும் இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா ஆகியோர் தலைமையிலான குழுவினருக்கும் இரத்தினபுரி பொலிஸ் அதிகாரிகளுக்கிடையே கலந்துரையாடல் ஒன்றும் இன்று பகல் இடம்பெற்றது.

இதன்போது மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் நான்கு முச்சக்கர வண்டிகள் உட்பட இரண்டு மோட்டார் சைக்கில்கள் என்பன  கைபற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

42338157_1086214698226349_67871678925100

இதற்கு பதிலளித்து கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள், நான்கு முச்சக்கர வண்டிகள் கைபற்றினால் அதன் உரிமையாளர்கள் எங்கே?

இரண்டு  சைக்கிள் வண்டிகள் கைபற்றினால் அதன் உரிமையாளர்கள் எங்கே? என்று கேள்வி எழுப்பி ஆவேசம் அடைந்தார்கள். இதன் முக்கிய சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறும் அவர்கள் பொலிஸாரிடம் ஆவேசத்துடன் கோரிகை விடுத்தனர்.

received_833782230079027.jpeg

மேற்படி தோட்டப்பகுதிக்கு குருவிட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/40989

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.