Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்புக்கூறுவதில் இருந்து அரசாங்கம் விலக முடியாது;ஐ.நா காட்டம்

Featured Replies

உயிரிழப்புகள் தொடர்பில் அரசு பொறுப்புக் கூற வேண்டும்

City-Page-01-ColorGMGPage1Image0019-d6676758f13fad81c8c2c600ddb95685bbd8b2da.jpg

 

வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவேண்டும்; ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்து 

(நியூயோர்க்கிலிருந்து எம்.பி.எம்.பைறூஸ்)  

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை யிலான இலங்கை அரசாங்கம் தனது பொறுப் புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகளை காப்பாற் றும் என நம்புகிறோம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள்  

தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும்" என ஐ.நா. செயலாளர் நாயகத்தினன் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ரெஹாம் அல் பர்ரா புலமைப் பரிசில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஐ.நா. மனித உரிமை பேரவை கைவிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் ஐ.நா. வின் நிலைப்பாடு என்ன என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பில் தனது பொறுப்புக் கூறலில் இருந்து விலக முடியாது. சிறிசேன அரசாங்கம் இது விடயத்தில் ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம். இது விடயமாக நாம் தொடர்ந்தும் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்ட விவாதம் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகிறது. இதன் முதல் நாளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-20#page-1

un.jpg

போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதில் இருந்து அரசாங்கம் விலக முடியாது என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் இது தொடர்பான விடயத்தில் ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம்.

இது குறித்து தொடர்ந்தும் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://thinakkural.lk/article/18921

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.