Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஸ்.பியின், உரை குறித்த நிலைப்பாடு, விரைவில் அறிவிக்கப்படும்…

Featured Replies

எஸ்.பியின், உரை குறித்த நிலைப்பாடு, விரைவில் அறிவிக்கப்படும்…

saliya-pieris1.jpg?resize=700%2C350
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகின்ற எவரிடமும் விசாரணைகளை நடத்துவதற்கான அதிகாரம் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு உண்டெனத் தெரிவித்த, அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் உரை குறித்த நிலைப்பாட்டை, விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில், கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இறுதி யுத்தக் காலத்தில் சரணடைந்தவர்கள், படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற பொருள்பட கருத்து வெளியிட்டிருந்தார். அதேநேரம், இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் பலர், காணாமல் போனமை தொடர்பிலான முறைப்பாடுகள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன எனத் தெரிவித்த சாலிய பீரிஸ், எவ்வாறாயினும், அரசியல் மேடைகளில் இடம்பெறும் கருத்துகளுக்குப் பதில் கருத்து வெளியிடுவதைத் தவிர்க்கத் தீர்மானித்துள்ளதாகக் குறி்பிட்டுள்ளார். இருப்பினும், முன்னாள் அமைச்சரின் உரை குறித்த அலுவலகத்தின் நிலைப்பாடு, விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

காணாமல் போனோர் அலுவலகத்தின் அடுத்த மக்கள் சந்திப்பு கொழும்பில்…

வலிந்து காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அடுத்த மக்கள் சந்திப்பு, கொழும்பில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இந்த வகையில் மேல்மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பை, கொழும்பில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேசக் கற்கைகளுக்கான நிலையத்தில், குறித்த சந்திப்பு நடத்தப்பவுடவுள்ளதெனவும், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் 7ஆவது மக்கள் சந்திப்பு இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது இதன்போது, மேல் மாகாணத்தில் காணாமல் போனோர், காணாமல் போன சந்தர்ப்பம், திகதி என்பன குறித்த தரவுகள் திரட்டப்படவுள்ளனவெனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம், ஏனைய கலவர நிலைமைகளின் போது காணாமல் போனோர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தரவுகளைத் திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்தும் வரும் நிலையிலேயே,குறித்த அலுவலகத்தின் அடுத்த பொதுமக்கள் சந்திப்பு, கொழும்பில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/96844/

  • கருத்துக்கள உறவுகள்
Quote

கொழும்பில், கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இறுதி யுத்தக் காலத்தில் சரணடைந்தவர்கள், படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற பொருள்பட கருத்து வெளியிட்டிருந்தார்.

பொருள் பட இல்லை அச்சொட்டாக "சரணடைந்தவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்" என தெரிவித்து இருந்தார். இது பொய் எனில் திருமதி மகேஸ்வரனை பதவி விலக்கியது போல் (தானாக விலக சந்தர்ப்பம் இல்லை. அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் பதவியில் இருந்து) எஸ்.பி பதவி விலக்கப்பட மாட்டார் அவர் சிங்களவர் என்பதால் என்பதை உறுதியாக நம்பலாம்.

  • தொடங்கியவர்

உயிருடன் சரணடைந்த கேர்ணல் ரமேஸை இராணுவம் கொலை செய்ததா? பதிலளிக்கும் சரத் பொன்சேகா

 

நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் எஸ் பி திசாநாயக்க ஆகியோர் புத்தி சுவாதீனம் இன்றி கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அமைசர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின்போது, கேர்னல் ரமேஷ் என்பவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தபோதும், அதன் பின்னர் இராணுவத்தால் அவர் கொலைசெய்யப்பட்டதாக அண்மையில் எஸ்.பி திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் அப்போதைய இராணுவத்தளபதியாக இருந்த அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என எஸ். பி திஸாநாயக்க கூறியது தொடர்பில், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் அறியாத விடயங்களையும் வெளியிட்டுவரும் குறித்த இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/194172?ref=imp-news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.