Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும். இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

cluster-bomb.jpg

யாழ். நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான சபா.குகதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

இனப்படுகொலையும் கிளஸ்டர் கொத்துக்குண்டுகளின் பயன்பாடு குறித்து மேலும் சபா குகதாஸ் விளக்குகையில் வன்னிப் பகுதியின் இறுதிப் போரில் விடுதலை புலிகளின் இராணுவ இயந்திரத்தை சிதைப்பதற்காக இலங்கை இராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகள் பெருமளவு அப்பாவி மக்களை கொன்றுறொழித்தது.

யுத்தம் முகமாலை பகுதியில் ஆரம்பித்தபோது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இராணுவம் சுதந்திரபுரம் வந்ததும் மிகத் தீவிரமாக கிளஸ்ரர் குண்டுகள் மக்கள்மீதும் குடியிருப்புக்கள் மீதும் பாய்ந்தன.

இதற்கான ஆதாரங்கள் யுத்தம் முடிவடைந்து 2011 ஆம் ஆண்டின் பின் கண்ணிவெடி அகற்றும் ஹெலோ ரஸ்ற் (Hello Trust) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

குறிப்பாக பச்சிலைப்பள்ளி சுண்டிக்குளம் சாலை சுதந்திரபுரம் புதுக்குடியிருப்பு ஆனந்தரபுரம் மாத்தளன் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் கரை போன்ற இடங்களில் ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இக் கிளஸ்டர் குண்டுகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக உள்நாட்டு யுத்தத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் 118 நாடுகள்தடை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன. ஆனால் இலங்கை அதில் ஒப்பம் இடவில்லை ஆகவே சர்வதேச சட்டங்களை மீறியமை மிகப் பிரதானமான போர்க்குற்றம் ஆகும். இறுதிப் போரில் கிளஸ்டர் குண்டுகள் மிக் விமானங்கள் மூலமாக பெருமளவில் வீசப்பட்டன. அத்துடன் எவ்.௭ வன் விமானங்களும் தாக்குதல் நடாத்தின. ஆட்லறி ஷெல்களுக்கு பதிலாகவும் பயன்ழுடுத்தின. போர்த் தவிர்ப்பு வலயத்தில் இக் குண்டுத் தாக்குதல் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆனந்தபுரம் சண்டையில் 600 இற்கும் மேற்பட்டபுலிகளின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது. என்பது கிளஸ்டர் குண்டுகளும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டமை இதனால் தான் உடல்கள் சிதைந்தும் கருகியும் காணப்பட்டன.

யுத்தம் முடிவடைந்த பின் பெருமளவு தடயங்கள் அப்போதைய மகிந்த அரசாங்கம் அழித்துவிட்டது. காரணம் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யுத்தம் நடந்த பகுதியை பார்வையிட செல்லும் முன் அவ்வேலைகள் இடம்பெற்றுள்ன.

உண்மையில் இங்கு பயன்படுத்தப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் ரஷ்யா நாட்டுத் தயாரிப்பு என்பதனை உறுதி செய்துள்ளன. யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுள் இக்குண்டின் சிதைவுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

 

http://www.virakesari.lk/article/42497

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ்

யார் இந்த ஆள் இவ்வளவு நாளும் எங்கிருந்தார் ?

  • கருத்துக்கள உறவுகள்

கொத்துக்குண்டுகளின் பாவனை பற்றிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரசுரம் ஒன்றினைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கொத்துக்குண்டுகள் பற்றிய விளக்கம்


இவை விமானத்திலிருந்தோ, நீண்டதூர ஆட்டிலெரிகள்மூலமோ, மோட்டர்க் குண்டுகள்மூலமோ அல்லது ஏவுகணைகள் மூலமோ காவிச் செல்லப்படுகின்றன. இக்குண்டுகள் ஏவப்படுமிடத்து பல நூறு சிறிய குண்டுகளாகப் பிரிந்து பரந்த நிலப்பரப்பொன்றினை இலக்குவைத்து ஏவப்படுகின்றன. ஏவப்படும் குண்டின் ரகத்தைப் பொறுத்து ஒரு தாய்க்குண்டில் சில டசின்களிலிருந்து 600 வரையான சிறிய குண்டுகள் காவிச் செல்லப்படுகின்றன. பாவிக்கப்படும் குண்டுகளின் அளவினைப்பொறுத்து சுமார் 30,000 சதுர மீட்டர் பரப்பளவினைக் கொண்ட நிலப்பரப்பினை தாக்க முடிகிறது. குறித்த இலக்கெதுவுமின்றி ஏவப்படும் இக்குண்டுகள், நிலத்தில் வீழும்பொழுது வெடிக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலான உலகநாடுகளின் ராணுவங்கள், மிகப்பெரிய பரப்பினுள் இருக்கும் எதிரி இலக்குகளான, கவசப் படைப்பிரிவுகள், துருப்புக்காவிகள் மற்றும் சாதாரண சிப்பாய்கள் போன்றவற்றின் மீது அதி உச்ச அழிவினை ஏற்படுத்துவதற்காக இக் கொத்துக் குண்டுகளை விரும்பிப் பாவிக்கின்றனர். ஆனால், இதுவரையில் கொத்துக் குண்டுகள் பாவிக்கப்பட்ட சந்தர்ப்பங்களைப் பார்க்கும்பொழுது, அவை பெரும்பாலும் அடர்த்தியான சிவிலியன் இலக்குகள் அல்லது சிவிலியன் கட்டமைப்புகள் உள்ள இடங்களிலேயே அதிகமாகப் பாவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெருவாரியான சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, சண்டை முடிந்தபின்னரும் இக்குண்டுகளால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்றும் பல நாடுகளில் மில்லியன் கணக்கான கொத்துக்குண்டுகள் ராணுவ ஆயுத தளபாடங்களில் பாவனைக்காக சேமித்துவைக்கப்பட்டிருக்கின்றன.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

கொத்துக்குண்டுகளின் பாவனை நிரூபிக்கப்பட்ட நாடுகள்

கொத்துக்குண்டுகளின் பாவனையினால் பெருமளவு பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நாடுகளாக பின்வரும் நாடுகள் இனங்காணப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்த்தான், அங்கோலா, அல்பேனியா, பொஸ்னியா - ஹெர்ஸகோவினா, கம்போடியா, சாட், கொலம்பியா, குரோஷியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, எரிட்ரியா, எதியோப்பியா, ஜோர்ஜியா - தெற்கு ஒஸெடீசியா , கயினா, ஈராக், இஸ்ரேல், கொசோவோ, கூவைட், லாவோஸ், லெபனோன், லிபியா, மொன்டொனேக்ரோ, மொரோக்கோ, மொசாம்பிக், செசென்யா, சேர்பியா, சியாரா லியோன், சோமாலியா, தென்சூடான், சிரியா, தஜிகிஸ்த்தான், உகன்டா, உக்ரெயின், வியெட்னாம், , யெமேன் ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம். 

இவற்றுள் , குறிப்பாக லாவோஸ் இன்றுவரை இக் கொத்துக் குண்டுகளின் பாவனையால இன்னல்களை எதிர்நோக்கி வருகிறது. 1960 முதல் 1970 வரையான காலப்பகுதியில் சுமார் 270 மில்லியன் கொத்துக்குண்டுகள் லாவோஸ் மீது பொழியப்பட்டுள்ளன. இவற்றுள் பெருமளவு கொத்துக்குண்டுகள் வீழ்ந்தும் வெடிக்காத நிலையில், இன்றும் மக்கள் உயிர் இழப்பிற்கும், அங்க இழப்பிற்கும் முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.
லாவோஸில், இக்கொத்துக் குண்டுகளினைச் செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் அரச நிறுவனம் ஒன்றின் புள்ளிவிபரப்படி, நாட்டின் 17 மாகாணங்களில் குறைந்தது 14 மாகாணங்களில் இக்குண்டுகள் சிதறிக் காணப்படுவதாகவும், சுமார் 25 வீதமான கிராமங்கள் இவ்வாறு இன்னும் வெடிக்காதிருக்கும் குண்டுகளால் வழக்கொழிந்துபோயுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
2014 இல், சுமார் 67 சதுரக் கிலோமீட்டர் நிலப்பரப்பு துப்பரவாக்கப்பட்டுள்ளதோடு சுமார் 60,000 வரையான வெடிக்கத நிலையிலிருந்த கொத்துக்குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.