Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த, கோட்டாவுடன் பூஜித் பாதுகாப்புத் தொடர்பில் அவசர ஆலோசனை!

Featured Replies

IMG-20181027-WA0012-1.jpg

இலங்கைப் பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலில் மேலும் பல பொலிஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துவந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவருடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் மேலும் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், புதிய பிரதமர் பொலிஸ் மா அதிபரை சந்தித்துள்ளார்.

http://athavannews.com/மஹிந்த-கோட்டாவுடன்-பூஜி/

  • தொடங்கியவர்

மக்கள் அமைதியாக வீடுகளில் இருக்க வேண்டும்; மஹிந்த தரப்பு அவசர கோரிக்கை!

கூட்டு எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளின் கீழ் மக்கள் புத்தி சாதூரியமாக செயற்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் கோரியுள்ளளனர்.

ஈட்டப்பட்டுள்ள வெற்றியை சீர்குலைக்கும் நோக்கில் சில நாசகார சக்திகளும் சந்தர்ப்பவாதிகளும் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பவாதிகள் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

மக்களை வீதியில் இறக்க சிலர் முயற்சிக்கின்றார்கள் எனவும் இதன் ஊடாக குழப்பங்கள் விளைவிக்கப்படக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே மக்கள் இந்த நிலைகைளை புரிந்து கொண்டு அமைதியாக வீடுகளில் இருக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/108115

  • தொடங்கியவர்

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் பொலிஸ் மா அதிபர் பூஜித

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

puitha.jpg

pujitha.jpg

இதேவேளை,பொலிஸ் மா அதிபருடன் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, மஹிந்தானந்த அழுத்தகமாகே, கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/43303

  • தொடங்கியவர்

ஐ.தே கவிடம் மஹிந்த கோரிக்கை!!!

mahindha_rajapaksha.jpg

நாட்டின் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறு ஐ.தே கவிடம்  புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று நாட்டின்  புதிய பிரதமாரக பதவியேற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் மதிப்பளித்து  செயற்படுமாறு ஐக்கிய தேசிய கட்சியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/43311

  • தொடங்கியவர்

ரணிலுக்கு அவசர காலக்கெடு?

போர்க்களமாக மாறுகிறதா அலரிமாளிகை?

அலரி மாளிகையில் உள்ள ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்னும் பசொற்ப நேரத்துக்குள் வெளியேறவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இதற்காக பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதானி ஒருவர் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் ஆலோசனை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/108130?ref=bre-news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.