Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லாட்சிக்கு வாக்களித்தவர்கள் ஏமாற்றப்பட்டனர் – ஹிருணிகா

Featured Replies

Hirunika-1-720x450.jpg

 

 

இலங்கையில் மாற்றத்தை எதிர்பார்த்து நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்த மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றிவிட்டாரென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், அதன் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”எனது தந்தையை கொலைசெய்தவர்களுடன் இன்று ஆட்சியாளர்கள் கைகோர்த்துவிட்டனர்.

தான் தோற்றிருந்தால் இன்று புதைகுழியில் இருந்திருப்பேன் என அன்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று மஹிந்தவுடன் சிரித்த முகத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் உண்மையான முகம் இன்றுதான் வெளிப்பட்டுள்ளது. இது நாட்டிற்கு சிறந்த விடயமல்ல” எனக் கூறியுள்ளார்.

http://athavannews.com/நல்லாட்சிக்கு-வாக்களித்/

  • தொடங்கியவர்

நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றி விட்டது – திகாம்பரம்

மக்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்லி இந்த நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் கொண்டுவந்தார்கள். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென்று மஹிந்தவை பிரதமராக்கியுள்ளார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கே என அவர் தெரிவித்தார்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அவசர கூட்டம் கூடியது. இதில் பிரசன்னமாகியிருந்த அமைச்சர், பின்னர் ஊடகங்களுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது பின்கதவால் செய்யப்பட்ட வேலை.

ஆனால் ரணில் விக்ரமசிங்கவே சட்ட ரீதியான பிரதமர். எனவே அவருக்கு ஆதரவாக சிறுபான்மையின கட்சிகளாக நாம் இருக்கின்றோம்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளது. ஆகவே பெரும்பான்மை ஆதரவோடு பிரதமர் தொடர்ந்தும் ஆட்சியை நடத்துவார்” என்று தெரிவித்தார்.

http://athavannews.com/நல்லாட்சி-அரசாங்கம்-ஏமாற/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.