Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் உறுதி: ஆறுமுகன் தொண்டமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் உறுதி: ஆறுமுகன் தொண்டமான்

Nuwaraeliya-Ga-5-720x450.jpg

தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் எம்மால் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற பூரண நம்பிக்கை இருப்பதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இறம்பொடை தொண்டமான் கலாசார மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“புதிய அரசாங்கம், புதிய பிரதமர் என உருவாக்கப்பட்ட நிலையில் பெருந்தோட்ட அமைச்சு நமது வடிவேல் சுரேஷிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.  அதேபோன்று தோட்ட உட்கட்டமைப்பு சமூதாய அபிவிருத்தி தொடர்பில் அமைச்சு பதவி எனக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் புதிய பிரதமரிடம் கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் எம்மால் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற பூரண நம்பிக்கை இருக்கின்றது.

எதிர்வரும் 01.11.2018 அன்று பெருந்தோட்ட முதலாளிமார் கம்பனி அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் உள்ளடங்கலாக பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவிருக்கின்றது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் அரசாங்கத்திற்கும் நாம் அறிவித்துள்ளோம். இந்த நிலையில் குறித்த பேச்சுவார்த்தையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்கும் இலக்கினை முன்வைத்து கலந்துரையாடப்படவுள்ளது’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Ramboda-2-1.jpg

Nuwaraeliya-Ga-2.jpg

 

http://athavannews.com/தோட்டத்-தொழிலாளர்களுக்-7/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா நாணய பெறுமதி வீழ்ச்சி தொடர்ந்து பதிவாகி.. விலைவாசி எகிறி வரும் நிலையிலும்.. இன்னும் 1000 ரூபா கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இந்தச் சூழலைப் பயன்படுத்தி.. அதை 2000 ஆக்குங்கள். 

மலைய மக்கள்.. உழைத்த.. உழைக்கும் உழைப்புக்கு நாளுக்கு 2000 காணாது.

1000 ரூபா என்பது.. வெறும்.. 6 அமெரிக்க டொலர்.

சிந்தித்துப் பாருங்கள்... அந்த மக்கள் ஈட்டிக்கொடுக்கும் ஆண்டு வருமானம் என்ன.. அவர்களுக்கு அளிக்கப்படும் நாள் கூலி என்ன..???! 

மக்களை முட்டாள் ஆக்காதீர்கள்.. உங்கள் பதவி வெறிக்கு.

சந்தர்ப்பங்களை ஒற்றுமையாக.. தமிழர்கள் எல்லோரும் கலந்து பேசி உருப்படியாகப் பாவியுங்கள். ?

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னது...  ஒட்டுண்ணி அரசியலில் ஊறித் திளைத்த... ஆறுமுகம்  தொண்டைமான்.
இவர்... ஒவ்வொரு அரசாங்க மாற்றத்தின் போதும், ஆளும் கட்சியுடன்  இருந்து வரும், பணக்கார மனிதன்.
இதுவரை... உருப்படியாக... மலையக மக்களுக்கு செய்யதது என்ன? 
பதவி வெறி பிடித்த அரசியல் வாதிகள், தாங்கள்  சுக போக மாக... இருக்க, 
வாக்குறுதிகளை வழங்குவதை  இத்துடன் நிற்பாட்ட வேண்டும்.

இது.. வடக்கு, கிழக்கு... தமிழ் பம்மாத்து  அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.