Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ச பிரதமரானார் -பின்னணியில் நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச பிரதமரானார் -பின்னணியில் நடந்தது என்ன?

ranil_maithri-300x169.jpg

Gகடந்த 26.10.2010 வெள்ளியன்று இலங்கையின் பிரதமரான ரனில் விக்ரமசிங்கைவைப் பதவி நீக்கம் செய்த அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, மகிந்த ராஜபக்சவைப் பிரதமாராக நியமித்தார். இந்தியா அமெரிக்கா உட்பட இலங்கையைச் சூறையாடும் நாடுகளின் இனப்படுகொலைத் திட்டத்தை கோரமாக நடத்திக்காட்டிய மகிந்த ராஜபக்ச பிரதமராவது நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாவதற்கு இணையானது.

ரனில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசின் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் வாழ்கைச் செலவை அதிகரித்திருந்தது. கடந்த நான்கு ஆண்டுகள் இலங்கையின் பொருளாதாரம் உழைக்கும் மக்கள் குறித்து எந்தக் கவலையுமின்றி பல் தேசிய நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்பட்டது.

இலங்கை மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்ட ரனில் விக்ரமசிங்க அரசை மக்களின் ஏகோபித்த எதிர்ப்பின்றி மகிந்த ராஜபக்சவால் பிரதியிட முடிந்திருக்கிறது. பெரும்பானமையாக நிறுவிக்கொள்வதற்கு முன்பாகவே, மக்களின் வாழ்க்கைச் செலவு குறித்தும், பண முறி மோசடி குறித்தும், மகிந்த அறிக்கைவிடுத்துள்ளார்.

சதிப்புரட்சி போன்று இரவோடு இரவாக மகிந்த ராஜபக்சவைப் புதிய பிரதமராக மைத்திரி அறிவித்த நிகழ்வு மக்களின் எதிர்ப்பைப் பெறப் போவதில்லை என்பது ஒரு புறமிருக்க அதன் மறுபக்கத்தில் இதன் பின்புலம் என்ன என்ற கேள்விகள் இன்றைய அரசியல் களத்தின் விவாதப் பொருளாக மாற்றமடைந்துள்ளது.
தவிர, பேரினவாதத்தையே தனது அரசியல் கோட்பாடாகக் கொண்டுள்ள மகிந்த ராஜபக்சவின் மீட்சி சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்ச மீட்சியின் அரசியல் பின்புலம்:

2011 ஆம் ஆண்டு ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கொழும்பு சர்வதேச கொள்கல முனையம் international South Container Terminal சீனாவிற்கு 35 வருடக் குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதே வேளை ஹம்பாந்தோட்ட துறைமுகம், போர்ட் சிட்டி ஆகியன 99 வருடக் குத்தகை அடிப்படையில் சீனாவிற்குத் தாரை வார்கப்பட்டது. கொழும்பு நகரின் பல பகுதிகளில் சீனத் தொழிலாளர்களின் தங்குமிடங்கள், உணவகங்கள் துருத்தலாகத் தெரிந்தன.

போருக்குப் பின்னான ராஜபக்சவின் சீனாவுடனான இறுக்கம் மேற்கு நாடுகளையும், இந்தியாவையும் அச்சுறுத்திக்கொண்டிருக்க, ராஜபக்ச ஆட்சியில் அமைச்சராகப் பதவிவகித்த மைத்திரிபால சிரிசேனவை மேற்கும் இந்தியாவும் வாங்க்கிகொள்ள இலங்கையில் புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. ராஜபக்ச தோல்வியைத் தழுவ, 2015 ஜனவரிமாதம் 9ம் திகதி பதவியேற்றுக்கொள்கிறார் சிரிசேன. சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆதரவுடன் வெற்றிபெற்ற சிரிசேன, ராஜபக்சவின் ஊழல் மிகுந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஜனநாயக ஆட்சியை அமைக்கப்போவதாக உறுதியளிக்க, இலங்கைத் தீவு முழுவதும் புதிய நம்பிக்கை சுடர்விட ஆரம்பிக்கிறது.

தனது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் அமைச்சரவையை உருவாக்கிய மைத்திரிபால, ரனில் விக்ரமசிங்கவைப் பிரதமராகத் தெரிவுசெய்கிறார். ந;ல்லாட்சி அரசு என்று அழைக்கப்பட்ட புதிய அரசு, மகிந்த ராஜபக்ச சாம்ராஜியத்தில் நடத்தப்பட்ட ஊழல்களை ஆரம்பத்தில் வெளிக்கொண்டு வந்தாலும், யாரும் தண்டிக்கபடவில்லை. கடந்த மூன்று வருடங்கள் ரனிலின் ஆட்சியில் பொருட்களின் விலை உயர்ந்தது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாதவாறு தரமிறங்கியது. மறுபுறத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறை தணிந்திருந்து. நேரடியான அரசியல் அச்சுறுத்தல்கள், கடந்தல்கள் என்பன குறைந்திருந்தன.
சீனாவுடனான ஒப்பந்தங்கள் நீக்கப்படாவிட்டாலும், புதிய ஒப்பந்தங்கள் எதுவும் எழுதப்படவில்லை.

Colombo-International-Container-Terminal

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையம் இரண்டு பெரும்பகுதிகளைக் கொண்டிருந்தது. அதன் தென்பகுதி சீனாவின் கைகளில் இருந்தாலும், அதன் கிழக்குப் பகுதியையும் கையகப்படுத்த சீனா எடுத்த முயற்சிகள் ரனிலின் ஆட்சி காலத்தில் கைகூடவில்லை.
இத் துறைமுகங்கள் இந்தியாவின் தென்பகுதித் துறைமுகங்களோடு நேரடித் தொடர்பிலிருந்தவை. தூத்துக்குடி துறைமுகத்தின் பெரும்பகுதிக் கப்பல்கள் கொழும்பின் ஊடாக வர்த்தகத்தில் ஈடுபட்டவை. தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையிலான கடல்வழிப் பாதை இந்தியாவின் நிறுவனங்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்தது. கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு வரும் பாரிய கப்களிலிருந்து பொருட்கள் இறக்கப்பட்டு தூத்துக்குடி உட்பட பல்வேறு துறைமுகங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதால் இத் துறைமுகம் இந்திய பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு அவசியமாக அமைந்தது. வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் தனது ஆலையை அமைத்துக்கொள்ள இலங்கைத் துறைமுக வசதியும் ஒரு காரணமாக அமைந்தது.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது. இலங்கைத் துறைமுகங்கள் தொடர்பான இந்த ஒப்பந்தத்தில் கொழும்பு கொள்கல முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இந்த வருட நடுப்பகுதியில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இலங்கையின் கிழக்குத் துறைமுகத்தை இந்திய அரசிற்கு வழங்குவதை நிராகரித்ட அதே வேளை மேற்குத் துறைமுகத்தை அபிவிருத்திக்காக இந்தியாவிற்கு வழங்குவதாகக் கூறுகிறார். பாரிய கப்பல்களை உள்வாங்கும் திறனற்ற மேற்கு முனையம் இந்தியாவிற்குப் பயனற்றதாக அமைந்ததால் இந்தியா தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோக்கித்தும் பயனற்ற நிலையே தொடர்ந்தது.

ஒக்க்ரோபர் மாதம் 19ம் திகதி இந்தியாவிற்கு சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த ரனில் கிழக்குத் துறைமுகம் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்ட விவகாரம் பின்னதாக வெளியானது. இலங்கை திரும்பிய ரனில், இந்திய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த மைத்திரிபாலவுடன் பேச்சு நடத்துவதாகத் தெரிவிக்கிறார். 18ம் திகதி ஒக்ரோபர் மாதம், கிழக்கு துறைமுகம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித செனிவரத்ன, ஜனாதிபதிகும் பிரதமருக்கும் இது தொடர்பாகக் கருத்து மோதல் இடம்பெறவில்லை என்றும், துறைமுகத்திற்குப் பாரம்தாங்கிகள் வாங்குவது தொடர்பாகவே பேசப்பட்டதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறார்.

இந்த நிலையில் ரனிலின் தலைமையில் துறைமுகம் தனது கைகளில் வீழ்வதற்கான காலம் தாழ்ந்து போவதாகக் கருதிய இந்தியா, ஏற்கனவே மகிந்தவுடன் பேச்சுக்களை ஆரம்பித்திfருந்தது.

mahinda-subramanian-300x225.jpg

இந்தியாவின் கோப்ரட்அடியாளான(corporate hitman) சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பின் பெயரில் இந்தியா சென்ற மகிந்த, ஆளும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவாச் செயற்படுகிறார், வன்னிப் படுகொலைகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பங்களித்ததாக தொலைக்காட்சிகளில் மகிந்த நேர்காணல் வழங்க,ப.ஜ.க வின் தமிழ் நாடு அரசியல் வாதிகளும், அ.தி.மு.க வும் இணைந்து தி.மு.க மீது தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றன. தி.மு,க வைப் போர்க்குற்றவாளிக் கட்சியாக அறிவிக்க வேண்டும் என்கிறது எடப்ப்பாடி அரசு. இன்றைய திகதிக்கு பாரதீய ஜனதாவின் பிரதான எதிரிக் கட்சியாகக் கருதப்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ராஜபகசவைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலின் பின்புலத்தில் மகிந்தவிற்கும் பாரதீய ஜனதாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு வெளிப்பட்டது.

கிழக்குத் துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு ராஜபக்ச ஒப்புக்கொடதன் பின்புலத்திலேயே இவ்வளவு சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன என்பது தெளிவாக சரியாக ஒரு மாதங்கள் பொறுத்திரு வெண்டியிருந்திருக்கிறது.

anil.jpg

ராஜபக்ச பிரதமரானதை உலகின் பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. இந்தியா மூச்சுக்கூட விடவில்லை. போதாக் குறைக்கு, தமிழக பா.ஜ.க வின் தமிழிசை சவுந்தரராஜன், மகிந்த இனிமேல் தவறு செய்யமாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவிக்கிறார். அ.தி.மு.க வும் ஒரே குரலில் மகிந்த இனிமேல் பாரதீய ஜனதா என்ற “தமிழர் நலனில் அக்கறை கொண்ட” கட்சிகளை அனுசரித்து நடந்துகொள்வார் என்கிறது. ஆக, இந்திய அரசு துறைமுகம் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக மகிந்த என்ற இனக்கொலையாளியை நம்பியதன் விளைபலனே இலங்கையின் இன்றைய அரசியல் சூழல்.
மகிந்த ஆட்சி காலத்தில் கேரின் லங்கா என்ற நிறுவனத்தை ஆரம்பித்த வேதாந்தா நிறுவனமே தூத்துத்துகுடியில் நடத்தப்பட்ட 14 அப்பாவிப் பொதுமக்களின் படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்டது. இலங்கையின் கிழக்குத் துறைமுகக் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை நாளையிலிருந்து வேதாந்தா ஏற்றுக்கொண்டாலும் வியப்படைவதற்கில்லை.
-சபா நாவலன்

http://www.ft.lk/front-page/Govt–rejects-dispute-between-President-and-PM-over-East-Container-Terminal/44-664999
http://www.ft.lk/columns/East-Container-Terminal-blunder–Learn-from-Chinese/4-662984

 

http://inioru.com/whos-behind-mahindhas-return/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.