Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜே.வி.பி.க்கும் இடையில் அவசர சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan-and-anurakumara-720x450.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜே.வி.பி.க்கும் இடையில் அவசர சந்திப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் விடுதலை முன்னணி சந்திக்கவுள்ளது.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் அரசியல் குழப்பநிலைக்கு வித்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

இவ்விடயத்தில் நடுநிலை வகிக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், ஐ.தே.க.வின் பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன் பின்னணியில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இதேவேளை, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரேரணை எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழ்-தேசியக்-கூட்டமைப்ப/

  • கருத்துக்கள உறவுகள்

ஐ தே கவின் தூதுவராக சம்பந்தர் செயற்படுகிறார் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

சதி முயற்சி ஊடாக அரசாங்க்ததை அமைப்பதற்கும், அரசாங்கத்தை கவிழ்க்கவும் இடமளிக்கப்படாது…

November 5, 2018

anura-sambandan-3.jpg?resize=650%2C455இலங்கையில், கடந்த வௌ்ளிக்கிழமை (26.11.18) இடம்பெற்றது அரசியல் சதி முயற்சி எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க சதி முயற்சி ஊடாக அரசாங்க்ததை அமைப்பதற்கும், சதி முயற்சி ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்கவும் இடமளிக்கப்படாது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனுடன் இடம்பெற்ற விசேட கலரந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “எமது நாட்டில் ஜனநாயகம் மீறப்படுவதால், பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே எனவும், விசேடமாக வடக்கு மக்கள், அரசியல்வாதிகள் என்போரே ஜனநாயகம் மீறப்படுவதால், பல இழப்புக்களைச் சந்திக்கின்றனர். எனவே ஜனநாயகத்துக்கு எங்கு மிரட்டல் விடுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் முன்னிற்க தயாராகவுள்ளோம்” எனத்தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் கலந்துரையாடலை முன்னெடுக்க காரணம், இந்த ஜனநாயக மீறல்களுக்கு எதிராக எம்மால் ஒனறிணைய முடியுமா? ஒன்றிணைந்து கடமையாற்ற முடியுமா? ஜனநாயகத்தை பாதுகாப்பது எவ்வாறு என்பது தொடர்பில் எதிர்கட்சிகளான நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பது குறித்து கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுடன் இது குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் இந்த அரசியல் சதியை நாடாளுமன்றத்திலும் தோற்கடிக்க எமது தலையீட்டை முன்னெப்பது குறித்தும் எமது இரு தரப்பினருக்குமிடையில் இணக்கபாடு காணப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, பிமல் ரத்னாயக்க, கே.டி லால்காந்த ஆகியோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

anura-sambandan-2.jpg?resize=650%2C433

ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் அரசியல் சாசனம் பின்பற்றப்பட வேண்டும்

ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் அரசியல் சாசனம் பின்பற்றப்பட வேண்டும், அரசமைப்பை மீறி எந்தச் செயல்களிலும் ஈடுபட முடியாது. அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் அரசமைப்பைக்கு மாறானவை என எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.

இன்று (5.11.18) எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பதவி நீக்கம், புதிய பதவி நியமனம் இவையெல்லாம் அரசமைப்பு முரணான் செயற்பாடுகள் என்றார்.

இந்த செயல்கள் ஜனநாயகத்தின் இறையாண்மையை இல்லாமல் செய்கின்றது. இந்த செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் இயன்றவரை இவற்றைத் தடுப்பது எமது கடமை . எம் மக்கள் சார்பாக நாம் ஆற்ற வேண்டிய கடமை. இதிலிருந்து நாம் தவறமாட்டோம். நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கொடுத்து வாங்கப்படுகின்றனர். இவ்விதமானச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் செயல்கள் தீவிரமடைந்தால் இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது என்பதே எமது நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2018/102109/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.