Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவிற்கு, பிரதமர் ஆசனம் இல்லை – கரு ஜயசூரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karu.jpg

மஹிந்தவிற்கு, பிரதமர் ஆசனம் இல்லை – கரு ஜயசூரிய

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்படாது என்றும், புதிய அரசாங்க உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்கட்சியிலேயே அமர வேண்டும் எனவும் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கிய வாக்குறுதிக்கு விரோதமாக செயற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி அல்லது 7 ஆம் திகதிக்கு கூட்டுவதாக தனக்கு வாக்குறுதி வழங்கியிருந்த போதும் அவர் அதனை மீறியுள்ளதாக கரு ஜயசூரிய குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதும், ஜனநாயகத்திற்கு எதிரானதும் என அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரிய இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை உட்பட முஸ்லீம் கட்சி உறுப்பினர்கள் 116 பேர் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கையொப்பமிட்டு தன்னிடம் வழங்கியுள்ளனர்.

இதன் படியே ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது என்றும், ஆனால் வாக்குறுதியை வழங்கிவிட்டு அதனை மீறி ஜனாதிபதி செயற்படுவது ஜனநாயகத்திற்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/வாக்குறுதிக்கு-விரோதமாக/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.