Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் திருமாவளவன்

66.jpg

கார்த்திகை மாதம் ஈழத் தமிழர்களின் புனித மாதம். இந்த மாதத்தில்தான் மாவீரர் நாள் அங்கே கடைபிடிக்கப்படுகிறது. தமிழர்கள் வசிக்கும் பகுதியை ஆளும், வடமாகாண சபை 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தீர்மானத்தை ஒட்டி தமிழ் தேசிய பசுமை இயக்கத் தலைவரும், முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தமிழ் ஈழத்தில் இந்த ஆண்டு கார்த்திமை மாதம் பெரிய அளவில் மர நடும் விழாக்களை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று இலங்கை சென்றிருக்கிறார்.

தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பை ஏற்று திருமாவளவன், நான்கு நாள் பயணமாக இன்று (9.11.2018) மதியம் கொழும்பு விமான நிலையத்தில் சென்றிறங்கினார். அவரை தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் வரவேற்றனர்.

கொழும்பிலிருந்து சிலாபம், வவுனியா, கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணம் செல்லும் திருமாவளவன், நாளை (10.11.2018) மாலை யாழ்பாணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக நாளை பிற்பகல் மூன்று மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ள மரநடுகை மற்றும் மலர்கண்காட்சி திறப்புவிழாவில் கலந்துகொள்கிறார். இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்கிறார்.

ஈழத்துப் பள்ளி பிள்ளைகளுக்கு தாய்மண் அறக்கட்டளையின் சார்பில் ரூபாய் ஆறரை லட்சம் மதிப்புள்ள சைக்கிள்களை திருமாவளவன் தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் மூலம் வழங்குகிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

 

https://minnambalam.com/k/2018/11/09/66

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் யாழ்ப்பாணத்தில்

November 10, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_0401.jpg?resize=653%2C490

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பின் பேரில் யாழ் வந்துள்ள திருமாவளவன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். இதற்ககமைய இன்று காலை கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் மரங்களை நாட்டி வைத்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 IMG_0402.jpg?zoom=3&resize=335%2C446IMG_0403.jpg?resize=653%2C490IMG_0404-1.jpg?resize=800%2C600

IMG_0404.jpg?resize=800%2C600

 

http://globaltamilnews.net/2018/102840/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியல் எதிர்வரும் நாட்களில் இஸ்த்திரமற்ற நிலையை நோக்கி செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்நிலையில் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் இனங்களுக்கிடையே மு றுகல் நிலையையும் குழப்பங்களையும் தூண்டிவிடப்படும் என எதிர்பார்க்கலாம். அச்சந்தர்ப்பத்தில் இவ்வாண்டின் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு மிகவும் சவால் நிறைந்ததாகவே அமையக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.