Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – அமெரிக்கா ஆழ்ந்த கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – அமெரிக்கா ஆழ்ந்த கவலை

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முடிவு குறித்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீச்சகப் பக்கத்தில், இதுதொடர்பான பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதான செய்தி குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைகிறது. இது அரசியல் நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்யும்.

சிறிலங்காவின் அர்ப்பணிப்புள்ள பங்காளர் என்ற வகையில், உறுதிப்பாட்டையும் செழிப்பையும் உறுதி செய்வதற்கு, ஜனநாயக அமைப்புகளும், செயல்முறைகளும் மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/11/10/news/34216

 
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் உதவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

November 10, 2018

Eluyat.jpg?zoom=3&resize=335%2C191இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்கா வழங்கும் உதவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றார் என அமெரிக்காவின் சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழுவின் தலைவராக உள்ள எலியட் ஏஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மூன்று பிரதிநிதிகளின் கையெழுத்துடன் எலியட் ஏஞ்சல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்லேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நாட்டின் பாராளுமன்றத்தை கலைத்து பிரதமரை அரசியலமைப்புக்கு முரணான விதத்தில் நீக்கிய நடவடிக்கை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி தற்போதைய நெருக்கடிக்கு ஜனநாயக வழிமுறைகள்ஊடாக தீர்வை காணுமாறும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

அத்துடன் 2015 இல் மைத்திரி தெரிவு செய்யப்பட்டமையானது இலங்கையில் ஜனநாயக சீர்திருத்தம் பொறுப்புக்கூறப்படுதல் மற்றும் நல்லிணக்கம் குறித்த புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியிருந்தன எனவும் இதன் காரணமாகவே அமெரிக்கா இலங்கையுடன் முதலீடு செய்வதற்கான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் துரதிஸ்டவசமாக தற்போதைய நடவடிக்கைகள் சரிசெய்யப்படாவிட்டால் உங்கள் நாட்டின் ஜனநாயக அபிவிருத்தி மற்றும் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நாங்கள் அச்சமடைந்துள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையானது இலங்கையில் அண்மையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் எம்சிசி திட்டத்திற்கும் அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிக்கும் அமெரிக்காவின் ஏனைய திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

http://globaltamilnews.net/2018/102866/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.