Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் சமயம் எது?

Featured Replies

தமிழர் சமயம் எது?

தமிழர் சமயம் எது? இது என்ன கேள்வி? சைவ சமயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழமை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சைவ சமயம் தழைத்து இருந்திருக்கிறது என்பதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு என்று சைவர்கள் வாதிடுகிறார்கள்.

கடவுள், மதம், மொழி இவற்றுக்குத் தொன்மையான வரலாறு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவை மேலானவை, உயர்வானவை என்ற ஒரு தவறான எண்ணம் தமிழர்களிடம் இருப்பதால்தான் இப்படி அறிவுக்கு ஒத்துவராத, வரலாற்றுக்கு முரணான புராணக் கதைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் எழுகிறது.

மனிதனது வரலாற்றுக் காலத்தில் 14,000 ஆண்டுகள் நீண்ட காலம் அல்ல. ஆனால் மனிதன் தன்னைப்பற்றி கல்லிலும், களிமண்ணிலும், தோலிலும் குறிப்புக்கள் எழுதிய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 14,000 ஆண்டுகள் மிக நீண்ட காலமாகும்.

மாந்த இனம் மனிதக் குருங்கில் இருந்து பிரிந்து தனியே வளர்ச்சி அடையத் தொடங்கிய காலம் சுமார் 30 இலட்சம் ஆண்டுகள் இருக்கும் என மனிதநூலார் (Anthropologists) சொல்கிறார்கள். அந்த மனிதக் குரங்கு இனம் Hominids என்று அழைக்கப்பட்டார்கள்.

அதன்பின் உரு மலர்ச்சியில் (evolution) 18-10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கோமோ இறக்டஸ் ( Homo- erectus) என்ற மாந்த இனம் தோன்றியது. இவர்கள் ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் 300,000 ஆண்டுகள் முன்வரை வாழ்ந்தார்கள்.

அவர்களைத் தொடர்ந்து கோமோ சேப்பியன்ஸ் (Home-sapiens) தோன்றினார்கள். இவர்களது காலம் 200,000-300,000 ஆண்டுகளாகும். இவர்களைத் தொடர்ந்து நியாந்தர்தால் (Neanderthal) என்ற மாந்த இனம் தோன்றியது.

பின்னர் 40,000-30,000 ஆண்டுவரை இன்றைய நவீன மனிதன் தோன்றினான். நியாந்தர்தால் மனிதன் சில காலம் மனிதனோடு சம காலத்தில் வாழ்ந்ததும் உண்டு. ஆனால் நியாந்தர்தால் மனிதர்கள் 27,000 ஆண்டளவில் முற்றாக மறைந்து போனார்கள்.

தொல்லியளார்களது கண்ணோட்டத்தில் மாந்த இனத்தின் நாகரிக வளர்ச்சிக் காலத்தைப் பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.

பழைய கற்காலம் - 20 இலட்சம் ஆண்டுகள்

இடைக் கற்காலம் - கி.மு. 10,500- 4,300

புதிய கற்காலம் - கி.மு.4,300- 3300

வெண்கலக் காலம் - கி.மு. 3300 - 1200

இருப்புக் காலம் - கி.மு.1200- 586

சிந்துவெளி நாகரிகம் (கரப்பன் மற்றும் மொகென்ஜதாரோ) - கி.மு. 3000- 1900

மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியர் குடியேற்றம் சிந்து பள்ளத்தாக்கு - கி.மு.1300

ஆரியர் குடியேற்றம் கங்கை பள்ளத்தாக்கு - கி.மு.1000

இருக்கு வேதம் - கி.மு. 1200- 900

இராமாயண காலம் - கி.மு. 1500

பாரத காலம் - கி.மு.1300

ஏனைய வேதங்கள் உபநிடதங்கள் - கி.மு.500

மகாவீரர் காலம் - கி.மு.550

புத்தர் காலம் - கி.மு. 563-483

மேலே தரப்பட்டுள்ள தரவுகள் வரலாற்றுக்கு முந்திய (கி.மு.3000-1200) மனித நாகரிக வளர்ச்சியின் முக்கிய மைல் கற்கள் ஆகும்.

சிந்துவெளி மக்கள் சைவ சமயத்தவர் அல்லது நால்வேத மதத்தவர்கள் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட அதன் காலம் 5,000 ஆண்டுகள் மட்டுமே. அதனால் சைவம் 14,000 ஆண்டுகளாக நிலைத்து வருகிறது என்ற கூற்று முற்றிலும் உயர்வு நவிர்ச்சியே!

இன்று தமிழில் கிடைக்கக் கூடிய மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். இது ஒரு இலக்கண நூல்.

இதனை இயற்றியவர் தொல்காப்பியர். இவரது காலம் எதுவென்று அறிதியிட்டுச் சொல்ல முடியாது இருக்கிறது. எனினும் இவர் இடைச் சங்க காலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. எனவே இவர் கி.மு.500-300 இடையில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

எது எப்படி இருப்பினும் தொல்காப்பியம் தமிழ்மக்களின் மிகப் பழமையான ஒரு சமுதாயக் கட்டுமானத்தை படம் பிடித்துக் காட்டுகிறது என்பதில் ஐயம் எதுவுமில்லை.

குறிஞ்சி நில (மலை) மக்கள் வேட்டையாடியும்,

முல்லை நில (காடு) மக்கள் ஆனிரை மேய்த்தும்,

மருதநில (ஆற்றுப்படுக்கை) மக்கள் பயிர் செய்தும்,

நெய்தல் நில (கடலோரம்) மக்கள் மீன் பிடித்தும்

வாழ்ந்த சமுதாயத்தையே தொல்காப்பியத்தில் காணக் கூடியதாக இருக்கிறது.

பிறமொழியும், பிறபண்பாடும் தமிழ் மொழியோடும் தமிழ்ப் பண்பாடோடும் உறவுகொள்ளத் தொடங்கிய காலத்தில்தான் தொல்காப்பியம் தோன்றியிருக்கிறது.

தொல்காப்பியரே தனது நூற்பாக்களில் கூறப்படும் விதிகளுக்கு தனக்கு முன்னரும் தனது காலத்திலும் இருந்த புலவர்களது கூற்றுக்களைச் என்ப, என்மனார் புலவர், மொழிப, யாப்பென மொழிப யாப்பறி புலவர் என்று சான்று காட்டுவார்.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் மூன்றுக்கும் இலக்கணம் வகுக்கின்றது. பொருளதிகாரம் உலகத் தோற்றம், உயிர்களின் வகைப்பாடு, வௌ;வேறு நிலம், அந்த நிலத்துக்குரிய தெய்வங்கள், மக்கள், மக்களின் அகவாழ்க்கை, புறவாழ்க்கை நெறிகள், ஆடவர்க்குரிய பண்புகள், பெண்களுக்குரிய பண்புகள், மரங்கள், விலங்குகள், இலக்கிய வகைகள், இலக்கியக் கோட்பாடுகள், இலக்கிய மரபுகள், இலக்கியத் திறனாய்வுகள், உடலிலும் உள்ளத்திலும் தோன்றும் மெய்ப்பாடுகள் இப்படி ஒட்டு மொத்த சமூகத்தைப் பற்றிச் சொல்கிறது.

தொல்காப்பியத்தில் சமயம் அல்லது மதம் என்ற சொல் இல்லை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த முழுமுதற் கடவுள் அல்லது பரம்பொருள் என்ற வரைவிலக்கணத்துக்கு அமைய ஒரு முழுமுதற் கடவுள் குறிப்பிடப்படவில்லை. கடவுள் என்ற சொல் மிக அருமையாகப் பயன்படுத்தும் இடத்தில் அது தேவர்களைக் குறிக்கவே கையாளப்பட்டுள்ளது.

எடுத்துக் காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால் பொருளதிகாரம,; புறத்திணையியல் (27)-

"கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே."

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்பதன் பொருள் ஞாயிறு, திங்கள், தீ மூன்றையும் வாழ்த்துவதும் அமரர் வாழ்த்துபட போலவே ம் வரும் என்பதே.

"காமப் பகுதி கடவுளும் வரையார்

ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்."

(தொல்.பொருள்-புறத்திணையியல் -சூத்திரம் 23)

"இன்பப் பகுதிகளைக் கடவுளிடமிருந்தும் நீக்கமாட்டார்கள். மக்களிடமிருந்தும் நீக்க மாட்டார்கள் என்று புலவர் கூறுவர்" என்பதே இதன் பொருள். அது கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர் மாட்டு மானிடப் பெண்டிர் நயபனப்பவும், கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும், பிறவும் ஆம்" என்பது நச்சினார்க்கினியர் உரை.

தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் பல தெய்வ வணக்கங்கள் இருந்தன. திருமால், முருகன், இந்திரன், வருணன், கொற்றவை, ஞாயிறு, திங்கள், தீ முதலியவைகளைத் தமிழர்கள் தெய்வங்களாக வணங்கி வந்தனர். இமையவர்கள் என்ற தேவர்களையும் தெய்வங்களாகக் கொண்டிருந்தனர்.

தொல்காப்பியர் காலத்தில் நடுகல் வணக்கம் பரவலாக இருந்திருக்கிறது. நடுகல் வணக்கம்பற்றி தொல்காப்பியர் விரிவான செய்திகளைத் தந்திருக்கிறார்.

சைவ சமயத்தவர்களுக்கு ஏமாற்றம் தரும் செய்தி என்னவென்றால் தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இருக்கவில்லை. சிவனைக் குறிக்கும் சொல் 1610 தொல்காப்பிய நூற்பாக்களில் ஒன்றிலும் இல்லை. நால் வேதங்களில் முதல் வேதமான இருக்கு வேதமும் சிவனைக் குறிக்கவில்லை என்பதும் ஈங்கு கவனிக்கத்தக்கது.

சேயோன் என்ற சொல் சிவனைக் குறிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். சேயோன் என்றால் செம்மை, சிவந்த நிறத்தோன், எனவே சேயோன் சிவனைக் குறிக்கிறது என்பர். வேதத்தில் சிவன் உருத்திரன் எனக் குறிப்பிடப்படுகிறான். ஆனால் அவனது பெயரை உச்சரிக்கக் கூடாதென்றும், அவனை யாகசாலைக்கு அழைக்கக் கூடாதென்றும், பலி கொடுக்கும்போது ஊருக்கு புறத்தே கொடுக்கப்பட வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இருக்கு வேதத்தில் உருத்திரன் அச்சம் தரும் தெய்வமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான

நன்றி,

அரிய தகவல்களை உதாரணத்துடன் வழங்கியதிற்கு,

மிகவும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையான கட்டுரையையும் படித்து எழுத போதுமான நேரமில்லை. மனதுமில்லை ஆனால் சின்னதாகத் தோன்றுகின்ற ஒரு பதில்.

தொல்காப்பியர் காலத்தில், சிவவழிபாடு தமிழர்களிடம் இல்லை என்று சொல்கின்ற ஆசிரியர், இராமயணகாலம் தொடர்பாக, இவ்வாறு எழுதியிருக்கின்றார்.

இராமாயண காலம் - கி.மு. 1500.
தொல்காப்பியர், கிமு 300ம் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகின்றார். ஆனால் தை விட இராமயணம் 1200 ஆண்டுகள் முந்தியது என்று இவர் சொல்வதை வைத்துப் பார்த்தால்...

இராவணன் அக்காலத்தில் இலங்கையை ஆண்டான் என்றும், அவன் ஒரு சிவபக்தன் என்றும், அவன் தமிழன் என்றும் சொல்லப்படுவது குறித்து என்ன முடிவு எடுத்திருக்கின்றீர்கள் நண்பரே.

மேலோட்டமாகப் பார்க்கின்றபோதே, கட்டுரையில் நிறையக் குழப்பங்களும், பல தகவல்களை மறைக்கின்ற நிலையையும் தான் உணரமுடிகின்றது.

சொல்லப் போனால் தொல்காப்பியம் எல்லா விடயங்களையும் உள்ளடக்கியதா என்பது சந்தேகமே. அதன் நோக்கம் பக்தியை நோக்காகக் கொண்டிராததால் அது முழுமையான விடயங்களைத் தரவேண்டும் என்ற விதி ஏதுமில்லை.

அதை விட, தொல்காப்பியத்தை விட மூத்த நூலாகிய அகத்தியம், அகத்தியர் என்ற குறுமுனியால் எழுதப்பட்ட ஒன்று. அவர் ஒரு சிவபக்தர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சென்ற நூற்றாண்டுகள் வரை இருந்ததாகக் கருதப்படுகின்ற அவ்நூலினை தொலைத்து விட்டார்கள்.( அல்லது தொலைக்க வைத்து விட்டார்கள்)

கட்டுரையாளர் கிடைக்கின்ற ஆதாரங்களை மட்டும் வைத்து இறுதி முடிவைப் பற்றிக் கதைத்தது முழு முட்டாள்தனம் என்பதே என் கருத்து. என்னும் கடலினுள் மூழ்கிப்போன மதுரையைப் பற்றியோ, குமரிக்கண்டத்தைப் பற்றியோ, சோழபுரம் பற்றியோ எவ்வித ஆராட்சிகளோ, அல்லது தொலைக்கடிக்கப்பட்ட நூல்கள் பற்றிய ஒழுங்கான பெறுபேற்றையும் பெறாத நிலையில், வெறுமனே இது தான் முடிந்த முடிவு என்று கட்டுரை எழுதுவதில் உள்நோக்கமிருப்பதாகவே கருதமுடியும்.

அது மக்களின் மனதில், தங்களின் நச்சுக் கொள்கைகளை விதைத்தலாகும்.

Edited by தூயவன்

  • 7 years later...

இந்தக் கட்டுரை உண்மைகளைத் திரித்துக் காட்டுகின்றது. ஒரே ஒரு உதாரணம் பின்வருமாறு: " 'ஆவுரித்துத் தின்றுலையும் புலையரேனும் கங்கைவார் சடைசங்கரர்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் தெய்வமாமே' என்பதில் உள்ள 'உம்' வேற்றுமை உருபு சாதியை மறுக்கவில்லை. சாதிகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கிடையே சமரசம் காண முயற்சிப்பதாகவே உள்ளது. அதில்கூட அவர்கள் வெற்றிபெறவில்லை என்பதே உண்மையாகும்."  

மேலே குறிப்பிட்டதில், 'உம்' வேற்றுமை உருபு "அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே." என்ற பாடலில், "அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்" என்ற பகுதிக்கு உரியது. தொழுநோயால் பீடிக்கப்பட்டு, உடலெல்லாம் குறைந்து அழுகி, ஆவுரித்துத் தின்றுலையும் புலையராக இருந்தாலும், சிவபிரானுக்கு அன்பராக இருந்தால், அவரே நாம் வணங்கும் தெய்வமாம் என்று நாவுக்கரசர் கூறிய கருத்து "தொழுநோயராக இருப்பினும்" என்பதற்கே அல்லாமல், "புலையரேனும்" என்பதற்காக அல்ல என்பது முழுப் பாடலையும் படித்தால் மட்டுமே புரியும். "தொழுநோயராக இருப்பினும்"  என்பதை வஞ்சகமாக மறைத்துவிட்டு, சாதிச் சாயம் பூச முயல்வது கண்டனத்திற்குரியது. மற்ற பகுதிகளைப் பற்றிய விரிவான பதில் விரைவில்.

பேராசிரியர்.முனைவர்.ந.கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை, ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரை உண்மைகளைத் திரித்துக் காட்டுகின்றது. ஒரே ஒரு உதாரணம் பின்வருமாறு: " 'ஆவுரித்துத் தின்றுலையும் புலையரேனும் கங்கைவார் சடைசங்கரர்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் தெய்வமாமே' என்பதில் உள்ள 'உம்' வேற்றுமை உருபு சாதியை மறுக்கவில்லை. சாதிகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கிடையே சமரசம் காண முயற்சிப்பதாகவே உள்ளது. அதில்கூட அவர்கள் வெற்றிபெறவில்லை என்பதே உண்மையாகும்."  

மேலே குறிப்பிட்டதில், 'உம்' வேற்றுமை உருபு "அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே." என்ற பாடலில், "அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்" என்ற பகுதிக்கு உரியது. தொழுநோயால் பீடிக்கப்பட்டு, உடலெல்லாம் குறைந்து அழுகி, ஆவுரித்துத் தின்றுலையும் புலையராக இருந்தாலும், சிவபிரானுக்கு அன்பராக இருந்தால், அவரே நாம் வணங்கும் தெய்வமாம் என்று நாவுக்கரசர் கூறிய கருத்து "தொழுநோயராக இருப்பினும்" என்பதற்கே அல்லாமல், "புலையரேனும்" என்பதற்காக அல்ல என்பது முழுப் பாடலையும் படித்தால் மட்டுமே புரியும். "தொழுநோயராக இருப்பினும்"  என்பதை வஞ்சகமாக மறைத்துவிட்டு, சாதிச் சாயம் பூச முயல்வது கண்டனத்திற்குரியது. மற்ற பகுதிகளைப் பற்றிய விரிவான பதில் விரைவில்.

பேராசிரியர்.முனைவர்.ந.கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை, ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

 

நன்றி  முனைவர் ஐயா..

  • கருத்துக்கள உறவுகள்

எம் கண்முன்னே நடந்த முப்பது ஆண்டுகாலப் போர் பற்றியும் வாழ்வியல், இடப்பெயர்வு பற்றியுமே சிங்கள அரசு எத்தனை விதமாகத் திரித்தும் எம்மவர்களாலேயே அதை மறுத்து சரியான ஆதாரங்களுடன் எழுத முடியாதுள்ளபோது ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாறுகள் எப்படி எப்படியோ சிதைத்தும் புனைந்தும் எழுதப்பட்டிருக்கும் என்பது தெரிந்ததுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.