Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமல் குமார என்பவர் ஜனாதிபதியின் உளவாளி : அம்பாறை மாவட்ட SLPP வேட்பாளராகிறார் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாமல் குமார என்பவர் ஜனாதிபதியின் உளவாளி : அம்பாறை மாவட்ட SLPP வேட்பாளராகிறார் !!

 
Namal-Kumara.jpg

பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதி செய்ததாக வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ள கருத்து பாரிய பிரச்சினைக்குரிய ஒன்றாகும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 48 மணித்தியாலத்துக்குள் பொலிஸ் மா அதிபரை பாராளுமன்றத்திற்கு அழைத்து இது தொடர்பில் விசாரித்து தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் அவர் கேட்டுள்ளார்.

நாமல் குமார என்பவர் ஜனாதிபதியின் உளவாளி எனவும், அவர் பொதுஜன பெரமுன கட்சியில் அம்பாறை மாவட்ட வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் சரத் பொன்சேகா எம்.பி. சுட்டிக்காட்டினார்.

http://www.ceylonfirst.com/பிரதான-செய்திகள்/நாமல்-குமார-என்பவர்-ஜனாத/

நாமல் குமார என்பவர் யார்? – வெளிப்படுத்தினார் ரஞ்சித் மத்தும பண்டார!

நாட்டின் அரசியல் சதித்திட்டத்திற்கு நாமல் குமார என்பவர் பயன்படுத்தப்பட்டுள்ளாரென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியபோதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

நாமல் குமார என்பவர் பொலிஸாருக்கு உளவு தகவல்களை வழங்கியவர் எனக் குறிப்பிட்ட ரஞ்சித் மத்தும பண்டார, அவர் இதற்கு முன்னர் அவன்ட் கார்ட் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளாரென சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, அவர் வெளியிட்ட குரல் பதிவுகளில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லையென்றும் கூறினார்.

அத்தோடு, இன்று தாமரை மொட்டு சின்னத்தில் நாமல் குமார போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாட்டின் அரசியல் சூழ்ச்சிக்கு நாமல் குமார பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிவதாக மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முதலில் நாமல் குமாரவே தகவல் வெளியிட்டார். ஊழல் எதிர்ப்பு படையணியின் பிரதானியாக செயற்படும் இவர் வெளியிட்ட தகவல், பின்னர் நல்லாட்சியை பிளவுபடுத்தி ஆட்சி மாற்றத்திற்கு பிரதான காரணமாக அமைந்துவிட்டது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் அவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே அனுமதி வழங்கியதாகவும், அதன்மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடடத்தக்கது.

 

http://athavannews.com/நாமல்-குமார-என்பவர்-யார்/

Edited by போல்

நான்காம் மாடிக்கு அழைப்பு!

625.200.560.350.160.300.053.800.200.160.
 

சிறிலங்கா முஸ்லிம் காங்ரசின் தலைவர் ரஹூப் ஹக்கீம் விசாரணையொன்றுக்காக நான்காம் மாடி என்று அழைக்கப்படும் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் நியமனத்தை ஏற்றுக்கொள்ளாது அவருக்கும், அவரது அரசாங்கத்திற்கும் எதிராக நாடாளுமன்றிலும், உச்ச நீதிமன்றிலும் அதேபோல் வெளியிலும் இடம்பெற்றுவரும் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்துவரும் நிலையிலேயே ரவூப் ஹக்கீம் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வில் நேற்றைய தினம் உறையாற்றிய போதே சிறிலங்கா முஸ்லிம் காங்ரசின் தலைவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்காவின் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க அதிரடியாக நீக்கப்பட்டு மஹிந்த ராஜபக்சவை அந்தப் பதவியில் அமர்த்துவதற்கு பிரதான காரணமாக படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.

தன்னை படுகொலை செய்யத் சதித்திட்டம் தீட்டியவர்களுடன் ஒரே அமைச்சரவையில் எவ்வாறு அமர்ந்திருப்பது என்று நவம்பர் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது கேள்வி எழுப்பி மைத்ரி, மஹிந்தவுடன் இணைந்து மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பை நியாயப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நாட்டில் அதிரடியாக இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் அதனை அடுத்து நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலைமைகளுக்கு நாமல் குமார என்ற பொலிஸ் உளவாளியின் வருகையே காரணம் என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

அதேவேளை நாமல் குமார அன்று மைத்ரி – கோட்டா படுகொலை சதித்திட்டம் தொடர்பில் தெரிவித்திருந்த தகவல்களில் தனது பெயரும் கொலைப்பட்டியலில் இருந்ததாகத் தெரிவத்த ரவூப் ஹக்கீம், சிறும்பான்மை சமூகத்தினைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் ஊடங்களில் தனது பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டது மாத்திரமன்றி, தனது பாதுகாப்பையும் முற்றாக குறைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் உளவாளியான நாமல் குமாரவின் தீடிர் வருகையே சிறிலங்கா அரசியலில் பெரும் சர்ச்சையின ஏற்படுத்தியுள்ளமையால் அவரின் பின்னணி தொடர்பிலும், தொடர்ச்சியாக அவர் வெளியிட்டுவரும் தகவலகள் காரணங்கள் தொடர்பிலும் விசேட விசாரணையொன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்று’ ரஹூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் நவம்பர் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் கட்விழ்த்துவிடப்பட்டிருந்த குழப்பங்கள் உட்பட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தனது முழுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்த ரவூப் ஹக்கீம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வழங்கக்கூடிய உச்ச பட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/109934?ref=home-imp-flag

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.