Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1530965635.jpg

பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான கள்ளத்தொடர்பு அம்பலமாகியுள்ளதாக மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் விமல்வீரவன்ஸ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

” பிரதான எதிர்க்கட்சிப் பதவியை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தகாலங்களில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிபோலவே செயற்பட்டது. ஆனால், அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை.

எனினும் தற்போது ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிக்கப்படும் என ஜனாதிபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இதன்மூலம் ஐ.தே.கவுக்கும், கூட்டமைப்புக்குமிடையிலான கள்ளஉறவு அம்பலமாகியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே சமஷ்டி தீர்வை பெறமுடியும். பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் அதை வழங்கவேண்டும் என கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.

கூட்டமைப்பின் அனுமதியின்றி வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்ககூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிஈழத்தை அடைவதற்கான வழிமுறையே இது. எனவே, மக்கள் சிந்திக்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/பெப்ரவரி-04-இல்-தமிழீழம்-மல/

பெப்ரவரி 4´ல்.... தமிழ் ஈழத்தின் சுதந்திர தினத்தையும்,   ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தையும் ஒரே நாளில் கொண்டாடலாம் போலிருக்கே.... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்டி ஆட்சிக்கான அனுமதியைத்தருவதாக ரணில் கூட்டமைப்புக்கு தெரிவித்துள்ளார்

December 2, 2018

mahi-wimal-sam.jpg?zoom=3&resize=335%2C2

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இணக்கப்பாடு தற்போது அம்பலத்திற்கு வந்திருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.  மகரகமவில் தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு சமஸ்டி ஆட்சிக்கான அனுமதியைத்தருவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அங்கு உரையாற்றிய அமைச்சர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சீரான முறையில் இடம் பெற்றுவருவதாகவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மூன்றாவது தடவையாக எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியினர் கதிர்காமம் வரை பாதயாத்திரை செல்வதாக தெரிவித்துள்ளனர் எனவும் அவர்களின் கோரிக்கையை கடவுள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார் எனவும் சுசில் பிரேம ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.