Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு! - ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
December 12, 2018

ranil-sambathan.jpg?zoom=1.2100000262260

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அரசாங்கத்தில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்பட்டிருக்கலாம் என்றும் பிரதான கட்சிகள் இணைந்து பணியாற்றிய போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இக்குறைப்பாடுகள் தோற்றம் பெற்றதுடன், அதனால், மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றுவதில் சில தாமதங்களும் ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன்போது ரணில் கூறினார்.

எனினும் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு போன்ற சமூக பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிக தொகையை செலவிட்ட அரசாங்கம் என்ற வகையில் பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.

சீரழிந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்க முடியும் என்றும் படிப்படியாக நிவாரணம் வழங்கி பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு தமிழ் மக்களின் அவலங்களுக்கு அபிவிருத்தி செயற்பாட்டின் மூலம் சட்ட ரீதியாக தீர்வு வழங்கப் போவதாகவும் சிங்களவர், தமிழர் என்ற ரீதியில் அல்லாது இலங்கையர் என்ற வகையில் ஜனநாயக உரிமையை வென்றெடுத்து நாட்டின் இறைமையை பாதுகாக்க கடமையாற்ற உள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/106396/

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கத் தயார் - ரணில் 

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை நாம் அறிவோம். நாம் உருவாக்க முயற்சிக்கும் அரசியல் அமைப்பில் ஒற்றை ஆட்சிக்குள் பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம்.  தமிழ் மக்களுடன் கலந்துரையாடி சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை அரசியல் அமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்கும் நிலைப்பாட்டில்  இருந்து நாம் மாறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவர் சபையில் நன்றி உரை நிகழ்த்தியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் கூறியதானது, 

ranil.jpg

நாம் முன்னெடுக்கும் புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஒற்றை ஆட்சிக்குள் பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். அந்த அர்ப்பணிப்புக்கு நாம் தயாராக உள்ளோம். 

அதில் மாகாணசபைகளை பலப்படுத்தும் வேலைத்திட்டம் அனைத்தும் எமது வேலைத்திட்டத்தில் உள்ளது. அதேபோல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் நகர்வுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.  இன்று நாம் அனைவரும் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பாகுபாட்டில் நாம் செயற்படவில்லை.  மாறாக இலங்கையர் என்ற உணர்வுடன் ஜனநாயகத்தை, உரிமைகளை பாதுகாக்க நாம் செயற்பட்டு வருகின்றோம். யுத்தத்தின் பின்னர் இன்று நாம் தமிழ் மக்களுடன் கலந்துரையாடி சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை அரசியல் அமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் மாறமாட்டோம் எனக் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/46262

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பிழம்பு said:

இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். அந்த அர்ப்பணிப்புக்கு நாம் தயாராக உள்ளோம். 

பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம் என்றால் அதை கொடுப்பவர்கள் யாராக இருக்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.