Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ள அனர்த்தம் -பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_1518728815-26a0a8a821-720x450.jpg

வெள்ள அனர்த்தம் -பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம்

வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள நீர் வழிந்தோடிவரும் நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மீண்டும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அடைமழை காரணமாக, இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 22569 குடும்பங்களைச் சேர்ந்த 70650 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1642 குடும்பங்களைச் சேர்ந்த 5379 பேர் 17   முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9574 குடும்பங்களைச் சேர்ந்த 30499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்  1566 குடும்பங்களைச் சேர்ந்த  4889 பேர் 11 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்தோடு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமையவும் அவர்களுக்கான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வெள்ள-அனர்த்தம்-பாதிக்க/

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வந்துவிட்டினம் எங்கடை சம்சும் கூட்டம் மட்டும் வரவில்லை அவைக்கு பதவி பறிபோன சோக வெள்ளத்தில் தண்டு போய் கிடக்கினமாக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, பெருமாள் said:

எல்லாரும் வந்துவிட்டினம் எங்கடை சம்சும் கூட்டம் மட்டும் வரவில்லை அவைக்கு பதவி பறிபோன சோக வெள்ளத்தில் தண்டு போய் கிடக்கினமாக்கும்.

  அனர்த்தங்கள் வரேக்கை எங்கையாவது? எப்பவவாவது பொதுசனத்தை சந்திச்சு ஆறுதல் சொல்லுறவையோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.