Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள் 

(அலெக்சாண்டர் சொல்செனிற்சின் , 1962)

அலெக்சாண்டர் சொல்செனிற்சின் எனும் ரஷ்ய எழுத்தாளர் பற்றி நான் முதலில் கேள்விப் பட்ட அதே காலப் பகுதியில் கம்யூனிசத்தின் சின்னமான பெர்லின் சுவர் இடிந்து, சோவியத் யூனியன் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது. அவரது மொழிபெயர்க்கப் பட்ட எழுத்துக்களை அவ்வப்போது குறுங்கட்டுரைகளாகப் படித்ததோடு சரி. சுருக்கமாக, முன்னாள் சோவியத் செம்படைக் கப்ரனான அலெக்சாண்டர், ஜோசப் ஸ்ராலினை தனது தனிப்பட்ட கடிதமொன்றில் விமர்சித்த காரணத்தினால், எட்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப் பட்டு சைபீரியாவின் கடூழிய முகாமுக்கு அனுப்பப் பட்ட ஒருவர். பல மில்லியன் பேர் இந்தக் குலாக் எனப்படும் கடூழியத் திறந்த வெளிச் சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டனர், ஏறத்தாழ ஒரு மில்லியன் பேர் உயிருடன் மீண்டு வந்தார்கள். அலெக்சாண்டர் மட்டுமே தனது அனுபவங்களை நாவலாக எழுதி வெளியிட்டார்: அவர் அவ்வாறு 1962 இல் எழுதி வெளியிட்ட நாவல் தான் "இவான் டெனிசொவிச்சின் வாழ்வில் ஒரு நாள்". 

ஒரு நாளில் நடக்கும், சில மணி நேரங்களில் நடக்கும் சம்பவங்களைக் கட்டமைத்து நாவல்கள் முதலும் வந்துள்ள போதும், இவான் டெனிசோவிச்சின் ஒரு நாள் என்பது நம்மில் பலருக்கு ஒரு வாழ்நாளில் கூட கிடைக்காத சம்பவங்களும் ஆழமான அனுபவங்களும் கொண்டிருக்கிறது. எங்கள் ஒவ்வொருவரதும் நாளாந்த வாழ்வை ஒரு புதிய வெளிச்சத்தில் பார்க்க வேண்டுமானால் இவானின் சைபிரிய கடூழிய முகாம் வாழ்வை நாம் வாசிக்க வேண்டும் என நினைக்கிறேன். காலை எழுந்து, வாகன நெரிசலில் எரிச்சல் பட்டு, வேலைக்குப் போய் திரும்பி வந்து குடும்பத்துடன் உணவு அருந்தி, இணையத்தில் அலைந்து தூக்கம் வரும் வரை அல்லல் படும் ஒரு வாழ்வை இவானின் முகாம் வாழ்வுடன் நாம் ஒப்பிட்டால், நாம் மிகச் சாதாரணமாகக் கடந்து போகும் அன்றாட நிகழ்வுகள் எத்துணை ஆசீர்வாதங்கள் என்று எம்மால் உணர முடியும். இது கதையின் அரசியல் கோணத்தில் ஆர்வமில்லாதோருக்குக் கூடப் பயன் படக் கூடிய ஒரு வாழ்க்கைப் பாடம் எனக் கருதுகிறேன்.

இனி அரசியல். அலெக்சாண்டரின் இந்த நாவல் ரஷ்யாவில் வெளிவந்த பின்னர் தான் , ஸ்ராலினின் உளவுப் பொலிஸ் கைது செய்து செல்லும் நபர்களுக்கு என்ன நடக்கிறது என்ற தகவல் வெளியே கசிய ஆரம்பிக்கிறது. இதனால் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு எழுத்தாளராகக் கணிக்க்ப் பட்டு 1970 இல் இலக்கிய நோபல் பரிசு வழங்கப் பட்டாலும், அதைப் பெற ஸ்வீடன் போனால், தன்னைத் திரும்பி வர சோவியத் அனுமதிக்காது என்ற பயத்தில் அவர் போகவேயில்லை. பிரபலமாகி விட்டதால் மேற்கொண்டு எதுவும் கெடுதல் செய்ய இயலாத நிலையில் (ஸ்ராலினும் இறந்து, குருஷேவ் ஆட்சிக்கு வந்த காலம் என்பதாலும்), அவரைப் பிரஜாவுரிமையைப் பறித்துக் கொண்டு  சோவியத் ரஷ்யாவை விட்டுத் துரத்தி விடுகிறார்கள் 1974 இல். இதன் பிறகு சர்வதேச அளவில் சோவியத் ரஷ்யா உடையும் வரையில் அங்கே மனித உரிமைகளுக்காக எழுதியும் பேசியும் வந்தார் அலெக்சாண்டர். 

எங்கள் மக்களின் அனுபவங்கள் போலவே, உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல காரணங்களால் எதுவும் அறியா மக்கள் இவான் டெனிசோவிச் போல கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள், சில கொடுமைகள் இன்னும் தொடர்கின்றன. இவானின் கதை இங்கே எமக்குச் சொல்வது, நாடு, மொழி, அரசியல் சித்தாந்தம் கடந்து சாதாரண சுதந்திரத்திற்காக ஒரு விசேட சலுகைக்கு ஏங்குவது போன்று ஏங்கும் நிலை இருந்திருக்கிறது, இன்னும் நடக்கிறது. சில நாட்கள் முன்பு யாழில் இணைக்கப் பட்ட "முத்தப்பா என்கிற உளவாளி" எனும் கதை கூட இப்படியான ஒரு அனுபவத்தின் பகிர்வென நினைக்கிறேன். 

எங்கள் வாசிப்பின் மூலமாவது மௌனமாக அடக்கு முறைக்குள்ளாகும் அப்பாவிகளின் நிலையைப் புரிந்து கொள்வது எங்களை மாற்றக் கூடும். சில நேரங்களில், ஒரு கொடியை, தேசிய அடையாளத்தை அல்லது கொள்கையைத் தாண்டி சக மனிதரை நேசிக்க இவான் டெனிசோவிச் போன்றோரின் கதை எமக்கு உதவக் கூடும்! 

-நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

மனிதனாக பிறந்தவன் இயற்கையாகவே அழவும்  சிரிக்கவும் தெரிந்துகொள்கிறான் 
இதில் அழுகை சோகம் எனவும் சிரிப்பு மகிழ்ச்சி எனவும் கொள்ளப்படுகிறது.
இந்த மகிழ்ச்சியை கூடுதல் ஆக்குவது என்பதில் மனித வாழ்வு உருண்டு ஓடி 
சிலரின் அழுகையுடன் முடிந்து போகிறது. 

எந்த ஒருவனின் மகிழ்ச்சியிலும் ... இன்னொருவனுக்கு எதோ ஒரு பாதிப்பு 
நேரிடையாகவோ மறைமுகமாகவோ வருகிறது. உதாரணத்துக்கு நான் 16 வயதில் 
ஒரு சக மாணவியை  காதலிக்கிறேன் இருவருக்கும் காதல் வருகிறது. பாலியில் எண்ணம் தோன்றுகிறது 
உடல் ரீதியான இச்சை இருவருக்கும் வருகிறது......... இருவரும் மகிழ்ச்சியை தேடுகிறோம்.
இதை ஒருவர் பார்த்து விடுகிறார் ..... எதோ ஒரு பாதிப்புக்கு உள்ளாகிறார்.
இதை நாம் வாழ்ந்த சுற்றம் சூழல் (சமூகம்) முழுவதும் 2 மணி நேரத்துக்களாகவே சொல்லிவிடுகிறார். 
இது எமது இருவரின் தனிப்பட்ட மகிழ்ச்சி .. என்பதை சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
சாதாரண நிலைமையில் இருந்த சமூகத்தில் ஒரு பாரிய கிளர்ச்சி உண்டுபண்ணிய 
கிளர்ச்சியாளர்களாக எம்மை சமூகம் பார்க்கிறது. எம்மை அடித்து தண்டனை தருவதால் 
நாமும் சமூகத்துடன் இருக்கிறோம் எனும் உறுதிமொழியை எமது இருவரின் பெற்றோர்களும் 
சமூகத்துக்கு கொடுத்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். 
இங்குதான் தனிமனித சுதந்திரம் என்பது கேள்விக்கு உள்ளாகி போகிறது.
16 பதின்ம வயதில் பள்ளிமாணவர்கள் பாலியல் நோக்கி சென்றால் ......... 
ஒரு சமுகத்தின் எதிர்கால கல்வி முன்னேற்றம் சமூகம் சார்ந்த ஒழுக்கம் போன்றவை 
பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் என்பது வெளிப்படையான உண்மை. 
13 வயது சிறுமியான ஜூலியட்டின் காதலை காவியம் ஆக்கி கலை வடிவம் 
கொடுக்கும் அதே சமூகம் ... தனக்குள் ஒரு ரோமியோவோ ஜூலியட்ஓ வந்தால் பொறுத்து கொள்ளவதில்லை.
பொறுத்து கொள்ள முடியுமா? என்பதுதான் தனி மனித மகிழ்ச்சி என்பது .. தனிமனித மகிழ்ச்சிதானா மட்டும்தானா? எனும் கேள்விக்கு கூட்டி செல்கிறது.  

இன்றைய சிரியாவில் 
பிறிதொரு  கொடியும் ... கொள்கையும் ..... தேசிய அடைளமும்தான் 
தாம் ஒன்று தம் வாழ்வு ஒன்று என்று இருந்த பல சிரியர்களின் உயிரை பறித்து 
உடமைகளை உடைத்து நிர்கதியாக்கி உலக நாடுகள் பூராக அகதி என்ற பெயரில் 
ஓட விட்டிருக்கிறது. எஞ்சிய சிரியர்களின் வாழ்வு என்பது தேசியம் ... கொடி ... கொள்கை 
என்பதால் மட்டுமே சாத்தியம் ஆகிப்போகிறது.
இது பல சிரியர்களின்  தெரிவு இல்லை.... இனொரு தேசியம் தன் சொந்த நலன் மட்டும் சார்ந்து 
செயல்பட்டு வந்ததன் காரணமாக .... எஞ்சிய ஒரே  வழி.  

சுயநலமா?
பொதுநலமா?
என்கிற கேள்வி வரும்போது ... சுயநலம் எந்த ஆக்கத்தையும் 
வாழ்வையும் உருவாக்கியதில்லை. புத்தரின் வாழ்வில் பயன் பெற்ற ஒருவர் புத்தர் மட்டுமே 
கூட இருந்த ஆனந்தன் என்ற சிஷ்யனுக்கும் புத்தரின் மரணம் பின்பு எதுவும் எஞ்சவில்லை.
சொந்த மனைவி பிள்ளைகள் இழந்ததுதான் அதிகம். 
"சக மனிதரை நேசிப்பது" என்றால் எப்படி? அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டாமா?
துயர்களை போக்க வேண்டாமா?
இன்றைய சிரியர்களை ஒருவன் நேசித்தால் ......... அவர்கள் துயர்களை போக்க எண்ணினால்.
அவர்களை துன்பப்படுத்துவனுக்கு அதே துன்பங்களை கொடுத்து விரட்டுவதை தவிர வேறு வழி உண்டா? 
இங்குதான் கொள்கை .... கொடி .... தேசியம் எல்லாம் எழுகிறது. 
வேதாந்தம் பேசுவது கேட்பதுக்கு நன்றாக இருக்கும் 
சிர்த்தாந்தம் மட்டுமே மனிதருக்கு வழி காட்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள மதுரங்கேணி, புத்தாண்டு வாழ்த்துகள்! நீங்கள் உட்பட ஒரு சிலருக்கு உள்ள பிரச்சினை நீங்கள் வாதத்தில் வெல்ல வேண்டும்! அதற்காக நீங்கள் கடைப் பிடிக்கும் முறைகள் மிகவும் "பொதுநலம்" மிக்கவை எனக் கண்டேன்! இந்த நூற்றோட்டம் எந்த அரசியலையும் சாராது ஒரு வரலாற்று நாவலை அறிமுகம் செய்யும் என் முயற்சி- சிலருக்கு இது பயன் தரக் கூடும், சிலருக்கு உதவாமல் விடக் கூடும். ஆனால், மற்றைய திரிகளில் தீர்க்க இயலாமல் போன விடயங்களை சம்பந்தமில்லாத திரிகளில் காவித் திரிய நான் உதவப் போவதில்லை! அதற்காக மட்டுமே உங்களுக்கு மெனக் கெட்டு இதை எழுதுகிறேன்! மற்ற படி பன்னாடையில் எதை ஊற்றினாலும் அது கஞ்சலைத் தான் பிடித்துக் கொள்ளும் என்று அறிந்திருப்பதால், உங்கள் கருத்துகளுக்கு நான் பதில் தருவதில்லை! ஆனால், திரிக்குத் திரி முழுமையான சம்பந்தமின்றி ஒருவரைப் பின் தொடர்வது விதி மீறல் என்று நினைக்கிறேன், மட்டுறுத்தினர்கள் இதைப் பார்த்துக் கொள்ளட்டும்! எனவே, ஒரு விடயத்தில் பங்களிக்க ஏதும் இருந்தால் எழுதுங்கள் அல்லது அற்புதமான மௌனத்தைப் பேணுங்கள்! இனி எதுவும் உங்கள் குழுவுக்குச் சொல்வதற்கில்லை என்னிடம்!

பகிர்வுக்கு நன்றி ஜஸ்ரின்.

இந்த நாவலை ஆங்கில பதிப்பில் வாசித்தீர்களா? அல்லது '' எனும் பெயரில் தமிழ் மொழிபெயர்ப்பில் வந்துள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

என்னை பற்றி ஒரு வீணான தோற்றத்தை நீங்கள் கொண்டுள்ளதன் காரணமாக 
வீணே வார்த்தைகளை சிதறடிக்கிறீர்கள்.
இது ஒரு கருத்த்துக்களம் அதாவது ஒருவர் தனது கருத்தை சுந்தந்திரமாக எழுத 
இருக்கும் ஒரு தமிழ் களம். இதில் போய் இவர் கருத்து எழுதுகிறார் .... இவரை ஒருமுறை பார்த்து கொள்ளுங்கள் 
என்று மட்டுறுத்தினரை அழைப்பது உங்களின் வன்மை மட்டுமே காட்டி நிற்கிறது. 
"பன்னாடையில் எதை ஊற்றினாலும் கஞ்சாலைதான் பிடிக்கும்" என்று சக கருத்தாளரை மட்டம் தட்டி 
தனிமனித தாக்குதல் வேறு வெற்றிகரமாக செய்துகொண்டு எதோ கல்விமான் போல எழுதுகிறீர்கள்.

உங்களின் பதிவு சார்ந்து 
எனது கருத்தின் சுருக்கம் ஒரு கேள்விதான்.
அதாவது "ஒரு கொடியை ... தேசியத்தை .... அல்லது கொள்கையை தாண்டி." சக மனிதரை எப்படி நேசிக்க முடியும்? 
ஒவ்வரு தனி மனிதனும் விரும்பியோ விரும்பாமலோ ஒரு கொடி... ஒரு தேசியம் ... அல்லது ஒரு கொள்கையுடன் பின்னியே இருக்கிறான்.
இன்னொரு கொடியோ ... ஒரு தேசியமோ ... ஒரு கொள்கையோ அவன் விரும்பினாலும் விரும்பா விடடாலும் 
தாக்குதல் செய்துகொள்கிறது. 

இதில் வாதத்தை வெல்ல ஒன்றும் இல்லை ...
அப்படி ஒரு வழிமுறை இருந்தால் .... தெரிந்துகொள்ள ஆசை அவளவுதான்.
அதுக்கு சாத்தியம் உண்டா எனும் தேடல் எனக்கு பல காலமாக இருக்கிறது. துறவும் கொள்ளலலாம் இவர்களால் எப்படி மற்றவர்களை நேசிக்க முடியும்?
அன்னை தெரசா இருக்கவில்லையா? இப்படி பல விவந்தங்களை நானே என்னோடு பலமுறை செய்து வருகிறேன். இந்த பதிவு கொஞ்சம் அதை நோக்கி இருந்ததால் இந்த கேள்விகள் வந்தது.

உங்கள் வன்மம் என்பது அடுத்தவரின் கருத்தை புரியும் நிலையில் கூட இல்லை.
இந்த லட்ஷணத்தில் பன்னாடை பற்றி பேசுகிறீர்கள். கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது. 

எனது எண்ணமும் கருத்தும் எப்படி தோன்றுகிறதோ 
அது அப்படியே தொடரும் ...

அடக்குமுறை என்பது எந்த வடிவம் எடுத்தாலும் 
அதை அடிக்க வேண்டும் எனும் எண்ணம் எனக்கு அறிவு வளர 
முன்பே வளர்ந்துவிட்ட ஒன்று.

அழகில்லாதவர்களை (அழகு இல்லாதவர் எனும் கோணத்தில்) வைத்து விவேக் செய்யும் பகிடிகளை கூட 
பொறுத்துக்கொள்ளும் எண்ணம் வருவதில்லை. அதுபற்றி ஒரு ஈமெயில் கூட 
அவருக்கு எழுதி இருக்கிறேன். 

உங்களுக்கு கல்வி அறிவு இருந்தால் அதை சமூகத்தில் காட்டுங்கள் 
அடுத்தவனை பன்னாடையும் பனம்காயும் ஆக்கும்போதே .... உங்கள் கல்வி அறிவு கேள்விக்கு உள்ளானது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

பகிர்வுக்கு நன்றி ஜஸ்ரின்.

இந்த நாவலை ஆங்கில பதிப்பில் வாசித்தீர்களா? அல்லது '' எனும் பெயரில் தமிழ் மொழிபெயர்ப்பில் வந்துள்ளதா?

நிழலி, தமிழ் மொழிபெயர்ப்புக் கிடைக்கவில்லை, எங்காவது இருக்கக் கூடும். ஆங்கில மொழி பெயர்ப்பு இலவசமாகவே கிடைக்கும் என நினைக்கிறேன். நான் அமேசனில் வாங்கி வாசித்தேன். 

One day in the Life of Ivan Denisovich 

https://www.amazon.com/One-Day-Life-Ivan-Denisovich/dp/0451531043

Edited by Justin
link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.