Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடையாளம் தெரியாத விமானம் யாழில் பறப்பு

Featured Replies

Unidentified aircraft over Jaffna town

[TamilNet, Monday, 16 April 2007, 18:23 GMT]

An unidentified aircraft flew over parts of government-controlled Jaffna just after dusk Monday, residents in the northern peninsula said. The aircraft passed low over Jaffna city centre and parts of Vadaramadchchi North and Valikamam sectors. Sri Lankan troops in some areas doused the lights of their camps as the aircraft approached, fuelling suspicions it was one of those operated by the Tamil Tigers, they said.

Residents said the aircraft was different to those customarily operated by the Sri Lanka Air Force (SLAF). Some said its flight route was one not usually flown by SLAF craft.

Two weeks ago LTTE aircraft bombed the SLAF’s main airbase at Katunayake, killing three service personnel and wounding sixteen others.

இனந்தெரியாத விமானம் ஒன்று இன்று வடமராட்சி மற்றும் வலிகாமம் பகுதிக்கு மேலாக

பறந்ததாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.வழமையான இலங்கை இராணுவத்தின்

விமானம் போலல்லாது இவ்விமானம் வித்தியாசமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விமானபறப்பினை அடுத்து இராணூவ முகாம்களில் மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

www.tamilnet.com

மின்விளக்குகளை அணைத்துவிட்டு முகாமிலிருந்து வெளியேறிவிட்டார்களா? அது அவர்களுடைய விமானமாய் இருந்தாலும் இனி இதுதான் நடக்கும்.

பறந்த விமானம் ஒன்று இராணுவத்தினுடையதாக இருக்கும் இல்லாவிட்டால் புலிகளினுடையதாக இருக்கும்.

அடையாளம் தெரியாததாக இருக்க முடியாது.

அடையாளம் தெரியாவிட்டால் இராணுவம் தமது விமானத்தையே சுட்டு வீழ்த்தப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இரவிலை நித்திரையில்லாமல் திரியிறது எவ்வளவு வேதனை என்பதை இவர்களும் அறியட்டும்.. முதல் அனுபவம்தானே.. போகப் போக பழகிவிடும்..

தமிழர்களுக்கும் அப்பிடிதான் இருந்தத ஆரம்பத்தில்..

Edited by Kishaan

குடாநாட்டில் மர்ம விமானம்.

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை மர்ம விமானம் ஒன்று பறந்ததை அவதானித்திருப்பதாக, குடாநாட்டிலுள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

யாழ் நகர், வலிகாமம், மற்றும் வடமராட்சி வடக்கு பகுதிகளில் இந்த விமானம் பறப்பில் ஈடுபட்டுள்ளதாக அந்த மக்கள் கூறினர்.

சிறீலங்கா விமானப் படையின் விமானங்களைவிட இந்த விமானம் வித்தியாசமாக இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

வான் புலிகளின் விமானங்கள் இவை என எண்ணிய சிறீலங்காப் படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டதாக, குடாநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன

-Pathivu-

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். படையினரை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கும் மர்ம விமானம்.

- பண்டார வன்னியன் Tuesday, 17 April 2007 10:39

யாழ் குடாநாட்டின் வான்பரப்புமீது நேற்றிரவு பறந்த சந்தேகதிற்கிடமான விமானம் தொடர்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. வடமராட்சிவடக்கின் கடற்பரப்பின் மீதாகப் பறந்துவந்த இவ்விமானம் வலிகாமம் பகுதியூடாக பறந்து சென்று தீவுப்பகுதியூடாக மீண்டும் கடற்பகுதிக்கு சென்றுள்ளது.

சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமானதாகவோ அல்லது பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் விமானமாகவோ போலன்றி இவ்விமானம் 8.15 மணியளவில் எந்தவொரு விளக்குகளையும் எரியவிடாது தாழப்பறந்து சென்றிருந்தது.

சிறிலங்கா விமானப்படையினது விமானங்களும் தனியார் பயண விமானங்களும் தலைமன்னார் தீவுப்பகுதி மாதகல் ஊடாகவே பலாலியை வந்தடைந்து திரும்பும் நிலையில் இவ் விமானம் மட்டும் மாறாக பருத்தித்துறை கடற்பகுதியூடாகவே குடாநாட்டு வான்பரப்பினுள் உட்பிரவேசித்துள்ளது.

இவ்விமானப் பறப்பையடுத்து கரையோர இராணுவக்காவலரண்களிலும் முகாம் பகுதிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெளிச்ச விளக்குகள் சில பகுதிகளில் அணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. குடாநாட்டு மக்களிடையேயும் இவ்விமானம் பற்றி அறிந்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் காணப்பட்டது. எனினும் இச்செய்தி எழுதப்படும்வரை குறித்த விமானம் யாருக்குச் சொந்தமானது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகாத போதும் அவ்விமானம் தாக்குதல்கள் எதிலும் ஈடுபடவில்லை.

sankathi

இனி யாழ்பாணத்தில இருகிற ஆமிக்காரன் மூத்திரம் பெய்ய போக கூட பயப்பிடுவான்

ஆஹா கிளம்பிட்டாங்கைய.................... பாவம் பிள்ளைகள் தூக்கமெல்லாம் முளிக்கிறாங்கள்

மவனே இதுதானே ஆரம்பம்

ஆஹா கிளம்பிட்டாங்கைய.................... பாவம் பிள்ளைகள் தூக்கமெல்லாம் முளிக்கிறாங்கள்

மவனே இதுதானே ஆரம்பம்

எது எப்படி இருப்பினும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 17-04-2007 22:24 மணி தமிழீழம் [முகிலன்]

யாழில் பறந்த மர்ம விமானம் சிறீலங்கா விமானப் படையினருடைது - பலாலி கூட்டுப் படைத்தளம்

நேற்றிரவு யாழ் குடாநாட்டில் வலிகாம், வடமராட்சி கிழக்கு, வடமராட்சி வடக்குப் பகுதிகளினல் தாழப்பறந்த மர்ம விமானத்தால் சிறீலங்காப் படையினர் பலத்த குளப்பமடைந்து முகாம்களின் மின்விளக்குகளை அணைத்து பாதுகாப்பை தேடியிருந்தனர்.

இந்த மர்ம விமானம் வழமையான பறப்புப் பாதையை விட்டு பறப்பில் ஈடுபட்டதால் படையினர் மத்தியில் வான் புலிகளின் விமானம் என அச்சடைந்து குளப்பத்தில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மர்ம விமானம் சிறீலங்காப் விமானப் படையினருடையது என பலாலி கூட்டுப் படைத்தளம் நேற்று நள்ளிரவு படைமுகாங்களுக்கு அறிவித்துள்ளது.

pathivu

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.